Videos

சுகாதார அலுவலகத்தில் பல்வேறு பணிகள்! 19.01.2022 இன்றே கடைசி! விண்ணப்பிக்கவும்!

சுகாதார அலுவலகத்தில் பல்வேறு பணிகள்! 19.01.2022 அன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.!

ஈரோடு மாவட்ட சுகாதாரப் பணிகள்‌ அலுவலகத்தில் காலியாக உள்ள டேட்டடா என்ட்ரி ஆப்ரேட்டர், District Consultant, Social Worker உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மொத்தம் 12 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.35 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

  • நிர்வாகம் : ஈரோடு மாவட்ட சுகாதாரப் பணிகள் அலுவலகம்.
  • மேலாண்மை : தமிழக அரசு
  • மொத்த காலிப் பணியிடங்கள் : 12
  • பணி : Data Entry Operator (DEO), District Consultant, Social Worker, Refrigeration Mechanic. Multi Purpose Hospital Worker / Sanitary Worker மற்றும் ANM உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
  • கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற் கல்வி நிறுவனத்தில் 8, 10, 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் ITI, இளநிலை, முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • வயது வரம்பு : விண்ணப்பதாரர் 01.01.2022 தேதியின்படி 20 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் :

  • District Consultant - ரூ.35,000
  • Social Worker - ரூ.13,000
  • Data Entry Operator (DEO) - ரூ.10,000
  • Refrigeration Mechanic - ரூ.20,000
  • NRHM UPHC Multi Purpose Hospital Worker, Sanitary Worker - ரூ.8,500
  • ANM - ரூ.14,000

விண்ணப்பிக்கும் முறை : 

மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் நேரிலோ அல்லது விரைவு தபால்‌ மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். அதற்கான விண்ணப்பப் படிவங்களை ஈரோடு மாவட்ட அனைத்து வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில்‌ நேரில்‌ பெற்று கொள்ளலாம்‌. பின், பூர்த்தி செய்து சுயசான்றொப்பம்‌ செய்யப்பட்ட நகல்கள்‌ இணைத்து 19.01.2022 அன்று மாலை 5 மணிக்குள் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

குறிப்புகள் : இப்பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமானதாகும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.