Videos

TNUSRB - SI Exam Notification 2025

TNUSRB - SI Exam Notification 2025

TNUSRB | 1299 காலிப்பணியிடங்கள்..! காவல் சார்பு ஆய்வாளர் தேர்வுக்கு விண்ணப்ப தேதி அறிவிப்பு




தமிழ்நாட்டில் 1299 காவல் சார்பு ஆய்வாளர் பணியிடங்களுக்குகான விண்ணப்ப தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 1299 காவல் சார்பு ஆய்வாளர் பணியிடங்களுக்கான தேர்வுக்கு வரும் 7 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தேர்வாணையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தாலுகா மற்றும் ஆயுதப்படையில், காவல் சார்பு ஆய்வாளர் பணிக்கான நேரடி தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில், தாலுகாவில் காவல் சார்பு ஆய்வாளர் பணிக்கு 933 பணியிடங்களும், ஆயுதப்படையில் 366 காலிப் பணியிடங்களும் நிரப்பப்பட இருப்பதாக கூறப்பட்டுள்ளது.


ஏதாவது ஒரு இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள் இத்தேர்வுக்கு வரும் 7 ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மே 3 ஆம் தேதிக்குள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ள தேர்வாணையம், எழுத்து தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கூறியுள்ளது.

காலிப்பணியிடங்களில், தாலுகா மற்றும் ஆயுதப்படையில் தலா 20 விழுக்காடு துறை ரீதியான ஒதுக்கீடாகவும், வாரிசுதாரர்களுக்கு 10 சதவிகிதமும், விளையாட்டு வீரர்களுக்கு 10 விழுக்காடும் ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Tnusrb si exam notification 2025 pdf download. Tnusrb si exam notification 2025 tamilnadu. Tnusrb si exam notification 2025 tamil, Tnusrb si exam notification 2025 pdf, Tnusrb si exam notification 2025 last date. TNUSRB Notification 2025. TNUSRB SI Exam apply Date 2025, Tnusrb si exam notification 2025 apply online.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.