Videos

TNPSC Thirukkural Notes

TNPSC Thirukkural Notes

TNPSC Group 1, Group 2, Group 4  Thirukkural Notes. TNPSC Important Notes. TNPSC Kalvi Imayam Online Study. TNPSC Free Study Materials.  TNPSC Pothu Tamil Important Notes

TNPSC Pothu Tamil Notes

திருக்குறள்

  • திருக்குறள் - திரு+குறள்.
  • வெண்பாக்களினால் ஆகிய நூல் ஆதலின் இப்பெயர் பெற்றது.
  • குறள் என்பது குறட்பாவை உணர்த்தாமல் அப்பாக்களால் ஆகிய நூலை உணர்த்துவதால் ஆகுபெயர் ஆகும்.
  • திருக்குறள் என்பது அடையடுத்த ஆகுபெயர் ஆகும்.
  • பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் அதிகப் பாடல்களையும், அடிகளையும் கொண்ட நூல் திருக்குறள். இது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
  • பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் அதிக அறங்களைச் சொல்லும் நூல் திருக்குறள்.
  • பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் அதிக செய்யுளால் (பாவால்) பெயர்பெற்ற ஒரே நூல் திருக்குறள். 
  • பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் குறள் வெண்பாவால் 1 3/4 அடியில் ஆன ஒரே நூல் திருக்குறள். 
  • தமிழ்மாதின் இனிய உயர்நிலை என்று உலகோரால் பாராட்டப்பெறும் நூல். 
  • இதுவே தமிழர் திருமறை, உலகப் பொதுமறையுமாகும்.
  • எக்காலத்துக்கும் பொருந்தும் வாழ்க்கை நெறிகளை வகுத்துக் கூறியுள்ளார் 
  • திருக்குறளில் இல்லாததும் இல்லை, சொல்லாததும் இல்லை
  • "குறள்" என்பது இரண்டடி வெண்பாவைக் குறிக்கும். அது "திரு" என்ற சிறப்பு அடைமொழி பெற்று நூலைக்குறித்தது
  • மனித வாழ்வின் மேன்மைகளை, வாழ்வியல் நெறிகளை, மனித நாகரீகம் பிற நாடுகளில் தோன்றும் முன்னரே வகுத்துக் காட்டிய நூல்.
  • ஆங்கிலம், இலத்தீன், கிரேக்கம் போன்ற 107 மொழிகளில் மொழிபெயர்க்கப் பெற்றுள்ளது. உலகோர் விரும்பிப் படிக்கும் தமிழ்நூலாக விளங்குகிறது.
  • "ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி"
  • "பழகு தமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில்" என்னும் பழமொழிகள் இதன் பெருமையை விளக்குவனவாகும். இவற்றுள் "நால்" என்பது நாலடியாரையும் "இரண்டு" என்பது திருக்குறளையும் குறிக்கும்.
  • மனிதன் மனிதனாக வாழ, மனிதன் மனிதனுக்குக் கூறிய அறிவுரைதான் திருக்குறள்.
  • உலகப் பண்பாட்டிற்குத் தமிழினத்தின் பங்களிப்பாக அமைந்த நூல்.
  • இனம், சாதி, நாடு, குறித்த எவ்வித அடையாளத்தையும் முன்னிலைப்படுத்தாத உலகப்பொதுமறை திருக்குறள் இந்திய மொழிகளில் தன் ஆற்றல் மிக்க அறக்கருத்துகளால் இடம் பெற்றது திருக்குறள்.
  • திருக்குறள் தமிழில் எழுதப்பட்ட உலகப் பனுவல்
  • இறைக்கோட்பாட்டின் பொதுவான நெறியைத் திருக்குறள் காட்டுகிறது.
  • "அ" கரத்தில் தொடங்கி "ன" கரத்தில் முடியும் நூல்.
  • திருக்குறளின் சிறப்பை எடுத்துக் கூறும் நூல் திருவள்ளுவமாலை. இதில் 55 பாடல்கள் 53 புலவர்களால் பாடப்பட்டுள்ளது.
  • சிவசிவ வெண்பா, தினகர வெண்பா, வடமலை வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா, குமரேச வெண்பா போன்றனவும் குறளின் சிறப்பையே கூறுகின்றன.
  • மலையத்துவாசன் மகன் ஞானப்பிரகாசம் 1812 ல் திருக்குறளை முதன்முதலில் பதிப்பித்துத் தஞ்சையில் வெளியிட்டார்.
  • பரிமேலழகர் உரையுடன் முதல் முதலாகத் திருக்குறளைப் பதிப்பித்தவர் இராமானுஜ கவிராயர் (1840). 
  • விக்டோரியா மகாராணியார் காலையில் கண் விழித்ததும் முதலில் படித்த நூல் திருக்குறள்.
  • திருக்குறளின் பெருமையை உணர்ந்த வீரமாமுனிவர் இலத்தீனில் மொழிப்பெயர்த்தார். 
  • திருக்குறளை 40 ஆண்டுகள் படித்துச் சுவைத்த ஜி.யு.போப் இதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து 1886 ஆம் ஆண்டில் வெளியிட்டார்.
  • "உருசிய நாட்டில் அணு துளைக்காத கிரெம்ளின் மாளிகையிலுள்ள சுரங்கப் பாதுகாப்புப் பெட்டகத்தில் திருக்குறளும் இடம் பெற்றுள்ளது".
  • இங்கிலாந்து நாட்டுக் காட்சிச்சாலையில் திருக்குறள், விவிலியத்துடன் வைக்கப்பட்டுள்ளது.
  • "திருக்குறள் ஒரு வகுப்பார்க்கோ ஒரு மதத்தார்க்கோ, ஒரு நிறத்தாற்கோ ஒரு மொழியார்க்கோ ஒரு நாட்டார்க்கோ உரியதன்று, அது மன்பதைக்கு -உலகுக்கு பொது" - திரு.வி.க.
  • "திருவள்ளுவர் தோன்றிராவிட்டால் தமிழன் எளினும் ஓர் இனம் இருப்பதாக உலகத்தார்க்குத் தெரிந்திருக்காது. 
  • திருக்குறள் என்னும் ஒரு நால் தோன்றியிராவிட்டால், தமிழ்பொழி என்னும் ஒரு மொழி இருப்பதாக உலகத்தார்க்கு தெரிந்திருக்காது" கி.ஆ.பெ.விசுவநாதம்.
  • பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் எனப் பொதுநெறி காட்டிய புலவர் திருவள்ளுவர்.
  • அனைத்து நாட்டினரும், இனத்தினரும் தமக்கே உரியதெனக் கொண்டாடும் வகையில் பொதுமைக் கருத்துகளைப் படைத்தவர்.
  • 9 ஒர்பது இயல்களையும், நூற்றுமுப்பத்துமூன்று(133) அதிகாரங்களையும், ஆயிரத்து முந்நூற்று முப்பது (1330)
அறத்துப்பால் 38 அதிகாரம் 
  • பாயிர இயல் 4 
  • இல்லறவியல் - 20 
  • துறவியல் 13
  • ஊழியல் - 1

பொருட்பால் 70 அதிகாரம்

  • அரசியல் 25 
  • அங்கவியல் 32 
  • குடியியல் 13

காமத்துப்பால் 25 அதிகாரம்

  • களவியல் 7
  • கற்பியல் 18

திருக்குறளின் வேறு பெயர்கள்

  • முப்பால் 
  • இயற்கை வாழ்வியல் 
  • உத்தரவேதம் 
  • தெய்வ நூல்
  • பொய்யாமொழி 
  • வாயுறை வாழ்த்து 
  • தமிழ்மறை 
  • அறவிளக்கியம் 
  • பொதுமறை 
  • திருவள்ளுவப் பயன் 
  • வாழ்த்து 
  • திருவள்ளுவர் பொருளுரை 
  • உலகப் பொதுமறை 
  • முதுமொழி 
  • தமிழர் திருமுறை

 திருவள்ளுவரின் வேறு பெயர்கள்

  • வள்ளுவன் 
  • நாயனார் 
  • தேவர் 
  • முதற்பாவலர் 
  • தெய்வப்புலவர் 
  • நான்முகன் 
  • மாதானபங்கி 
  • சென்னா போதார்
  • திருநாவலர்
  • பொய்யில் புலவர்

திருவள்ளுவர் காலம்:

காலம் கி.மு 31 என்று கூறுவர் இதனை தொடக்க காலமாக கொண்டே திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது

திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடும் முறை:

  • கிறித்து ஆண்டு (கி.பி) +31 = திருவள்ளுவர் ஆண்டு
  • எடுத்துக்காட்டு : 2000 +31=2031
  • கி.பி.2000 ஐத் திருவள்ளுவர் ஆண்டு 2031 என்று கூறுவோம்.
  • தைத் திங்கள் 2ம் நாளைத் திருவள்ளுவர் நாளாகத் தமிழக அரசு அறிவித்துக் கொண்டாடி வருகிறது. 

திருக்குறளுக்கு உரைசெய்த பதின்மர்:

"தருமர் மணக்குடவர் தாமத்தர் நச்சர்

பரிதி பரிமேலழகர் திருமலையார்

மல்லர் பரிப்பெருமாள் காளிங்கர் வள்ளுவர் நூற்கு 

எல்லையுரை செய்தார் இவர்."


  • பரிமேலழகர் உரையே மிகச் சிறந்தது ஆகும்
  • மணக்குடவர், பரிமேலழகர், பரிதி, பரிப்பெருமாள், காளிங்கர் ஆகிய ஐவரின் உரை மட்டுமே கிடைத்துள்ளது. 
  • இராமானுஜக் கவிராயர், திரு.வி.க, நாமக்கல் ராமலிங்கனார், சரவண பெருமாள் ஐயர், தண்டபாணி தேசிகர், அரசஞ் சண்முகனார், புலவர் குழந்தை, பாரதிதாசன், மு.வரதராசனார், நாவலர் நெடுஞ்செழியன் போன்றோர் பிற்காலத்தே உரையெழுதியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.


  • திருக்குறள் உரைக்களஞ்சியம் - தருமபுர ஆதீன வெளியீடு, ஐவரின் பழைய உரை
  • திருக்குறள் நுண்பொருள் மாலை - காரிரத்தினக் கவிராயர்
  • திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பு - கி.வா.ஜகந்நாதன்
  • வாழும் வள்ளுவம் - வ.செ.குழந்தைசாமி
  • வள்ளுவர் கண்ட நாடும் காலமும் -தெ.பொ.மீ

  • திருக்குறள் உரைக்களஞ்சியம் - மதுரைப் பல்கலைக்கழக வெளியீடு



  • திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள் -அனிச்சம், குவளை 
  • திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம்- நெருஞ்சிப்பழம்
  • திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை - குன்றிமணி
  • திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம் - குறிப்பறிதல்
  • திருக்குறளில் இடம்பெறும் இரண்டு மரங்கள் - பனை, மூங்கில்
  • திருக்குறளுக்கு முதன்முதலில் உரை எழுதியவர் - மணக்குடவர்
  • திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.
  • ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் - ஜி.யு.போப் (1886)

திருக்குறள் மொழிபெயர்ப்புகள்

  • லத்தின் - வீரமாமுனிவர்
  • ஜெர்மன் - கிரால்
  • ஆங்கிலம் - ஜி யு போப்
  • பிரென்ச் - ஏரியல்
  • வடமொழி - அப்பாசாமி தீட்சிதர்
  • ஹிந்தி - பீடி ஜெயின்
  • தெலுங்கு - வைத்தியநாத பிள்ளை


  • வள்ளுவர் கோட்டம் சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்துள்ளது. வள்ளுவர் கோட்டத்தின் கட்டுமானப்பணி 1973 ல் தொடங்கி 1976 ல் முடிக்கப்பட்டது.
  • திருவாரூர்த்தேர் போன்ற வடிவமுடையது. தேரின் மொத்த உயரம் - 128 அடி
  • கருங்கற்களை கொண்டு உருவாக்கப்பட்ட வள்ளுவர் கோட்டம் இரண்டு யானைகள் தேரை இழுத்து செல்வது போன்று அமைக்கப்பட்டுள்ளது.
  • வள்ளுவர் கோட்ட தேரின் இரு பக்கங்களிலும் நான்கு சக்கரங்கள் வீதம் அமைந்துள்ளது. தேரின் மையத்தில் எர் கோண வடிவ கருவறையினுள் திருவள்ளுவர் சிவை அமைந்துள்ளது.
  • வள்ளுவர் கோட்டத்தில் குறள்கள் பளிங்குகற்களில் பொறிக்கப்பட்டள்ளன.
  • அறத்துப்பால் கருப்பு நிற பளிங்கு கல்
  • பொருட்பால் - வெண்ணிற பளிங்கு கல்
  • இன்பத்துப்பால் -செந்நிற பளிங்கு கல்
  • இந்தியாவின் தெற்கு எல்லையான கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை உள்ளது. 
  • திருவள்ளுவர் சிலை 1990 ஆம் ஆண்டு வடிவமைக்க தொடங்கி 2000 ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் முதல் நாளன்று திறந்து வைக்கப்பட்டது.
  • பாறையிலிருந்து சிலையின் உயரம் 133 அடி ஆகும். இதில் சிலையின் பீடம் 38 அடி உயரம் (அறத்துப்பால் அதிகாரங்களை குறிக்கிறது) சிலையின் உயரம் - 95 அடி உயரம் (பொருட்பால், இன்பத்துப்பால் அதிகாரங்களை குறிக்கிறது)
  • திருவள்ளுவர் சிலையின் கீழ் உள்ள பீடத்தின் உள்ளே உள்ள மண்டபத்தில் திருக்குறள்கள் தமிழ், ஆங்கில மொழிகளில் செதுக்கப்பட்டுள்ளன.
  • திருவள்ளுவர் சிலை அமைப்பதற்கு 3 முதல் 8 டன் வரையுள்ள 3681 கருங்கற்கள் பயன்படுத்தப்பட்டன. திருவள்ளுவர் சிலை மொத்தம் 7000 டன் எடை கொண்டது.
  • கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை தமிழின் பெருமைமிகு அடையாளமாக உயர்ந்து நிற்கிறது.

TNPSC Thirukkural Notes

  • கீழ்க்கண்ட குறளைப் படிக்கும் போது உதடுகள் ஒட்டும்; இதன் பொருளோ இறைவனைப் பற்றி நிற்கும்,

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் 

பற்றுக பற்று விடற்கு குறள், 350

  • அறம், பொருள், இன்பம் என முப்பாலும் தப்பாமல் வந்த குறள்

அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து 

தீதின்றி வந்த பொருள் - குறள், 754


திருவள்ளுவமாலை

  • திருக்குறனின் சிறப்பினை உணார்த்த திருவள் ளுவபாவை என்னும் தனிநூல் எழுந்தது.
  • இந்நூலில் 55 பாடங்கள்களை, 53 புலவர்கள் பாடியுள்ளனர்.
  • இப்பாடல் திருவள்ளுவமாலையில் மூன்றாவது பாடன்.
  • இப்பாடல் அறிவியல் அணுகுமுறையைச் சார்ந்தது.
  • ஒளியைக் கோட்டம் அடையச் செய்வதனால் தொலைவிலுள்ள பொருளின் உருவத்தை அண்மையில் தோன்றும் படி செய்யலாம் என்று கண்டறிந்தவர் கலீலியோ கலிலி.

"தினையளவு போதாச் சிறுபுல் நீர் நீண்ட 

பனையளவு காட்டும் படித்தால் - மனையளகு 

வள்ளைக்(கு) உறங்கும் வளநாட! வள்ளுவனார். 

வெள்ளைக் குறட்பா விரி."

-கபிலர்


  • வள்ளை - நெல் குத்தும் போது பெண்களால் பாடப்படும் ஒருவகைப்பாடல்; அளகு - கோழி

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.