TN Anganwadi Recruitment 2025: “அங்கன்வாடி மையத்தில் வேலை” - உள்ளூரிலே பணிபுரிய இது தான் சூப்பர் சான்ஸ் - உடனே அப்ளை பண்ணுங்க...
TN Anganwadi Recruitment 2025| அங்கன்வாடி பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.icds.tn.gov.in இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள பணிகளுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பத்தினை பெற்று விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மையங்களில் 84 அங்கன்வாடி பணியாளர்கள், 3 குறு அங்கன்வாடி பணியாளர்கள், 38 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களுக்கு நேரடியாக பணியாளர்கள் நியமனம் செய்ய உள்ளது.
இப்பணிகளுக்கு கல்வித்தகுதி குறு அங்கன்வாடி பணியாளர்களுக்கு 5-ம் வகுப்பு, அங்கன்வாடி பணியாளர்களுக்கு 12 வகுப்பு வரை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது 18 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
இந்த அங்கன்வாடி பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.icds.tn.gov.in இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.