TNPSC Notes அறநூல்கள் - பழமொழி நானூறு
பழமொழி
நானூறு
·
ஆசிரியர் :மூன்றுறை அரையனார்
·
குடிப்பெயர் :அரையன்
·
சமயம் :சமணம்
·
ஊர் : மூன்றுரை - (பாண்டிய நாட்டிலுள்ள ஊர்)
·
காலம் : கி.பி. 4ஆம் நூற்றாண்டு
·
சிறப்புப்
பெயர் :மூதுரை,
முதுமொழி, உலக வசனம்.
·
பாடல்கள் :400
( 34 அதிகாரங்கள்)
·
இந்நூலின்
கடவுள் வாழ்த்து பாடல் மூலம் ஆசிரியர் சமண சமயத்தை சார்ந்தவர்
என அறிய முடிகிறது.
·
ஒவ்வொரு
பாட்டின் இறுதியிலும் ஒரு பழமொழி இருக்கும்.
·
இந்நூலில்
உள்ள அனைத்தும் இலக்கியப் பழமொழிகளே.
·
தொல்காப்பியர்
பழமொழியை "முதுசொல்" என்று குறிப்பிடுகிறார்.
·
சங்ககால மன்னர்கள், புலவர்கள், மூவேந்தர்கள் பற்றிய குறிப்புகள் உள்ள நூல்.
·
பதினெ
ண் கீழ்க்கணக்கு
நூல்களுள் வரலாற்றை மிகுதியாக கூறும் நூல் .
·
நீதி
நூல்களுள் திருக்குறள் நாலடியாருக்கு அடுத்துப், புகழ்பெற்ற நூல்.
“மாரியொன்று
இன்றி வறந்திருந்த காலத்தும்
பாரிமடமகள் பாண்மகற்கு - நீர் உலையுள்
பொன்திறந்து கொண்டு புகாவா நல்கினாள்
ஒன்றாகு முன்றிலோ இல்" -முன்றுரையரையனார்
சொற்பொருள்:
• மாரி மழை புகவர் - உணவாக மடமகள் இளமகள் முன்றில் வீட்டின் முன் இடம் (திண்ணை)
பாடலின்
பொருள்:
•
மழையின்றி
வறட்சி நிலவிய காலத்தில், வாளல் பாரியின் மகள்கள் அங்கவை, சங்கவை ஆகியோரிடம் பாணர்கள்
இரந்து நின்றனர். பாரிமகளிர் உலைநீரில் பொன் இட்டு அவர்களுக்குத் தந்தனர்.
•
இப்பாடலில்
உள்ள பபொழி: "ஒன்றாகு முன்நினோ இல்". இதன் பொருள் :ஒன்றுமில்லாத வீடு எதுவுமில்லை
"ஆற்றவும் கற்றார் அறிவுடையார்; அஃதுடையார் நாற்றிசையும் செல்வாத நாடில்லை; அறிகாடு வேற்றுநாடு ஆகா; தமவேயாம்; ஆயினால் ஆற்றுணா வேண்டுவது இல்". -முன்றுரையரையனார்
சொற்பொருள்:
v
ஆற்றவும்
- நிறைவாக, ஆறு - வழி: உண உணவு: தமவேயாம் - தம்முடைய நாடே, ஆற்றுணா - ஆறு + உணா
மேற்கோள்:
v
"கற்றலின்
கேட்டலே நன்று"
v
"குன்றின்
மேல் இட்ட விளக்கு"
v
“தனிமரம்
காடாதல் இல்"
v
“திங்களை
நாய்க் குறைத்தற்று”
v
“நிறைகுடம்த்ததும்பல்
இல்”
v
“நுணலும்
தன்வாயால் கெடும்"
v
“
பாம்புறியும் பாம்பின் கால்”
v
“முறைக்கு
மூப்பு இளமை இல்”[ கரிகாலன்]
v
"
கறவைக்கன் றூர்ந்தானைத் தந்தையும் ஊர்ந்தான்” (மனுநீதிச் சோழன்)
v
"பாரதத்
துள்ளும் பணையம் தம் தாயமா" (பாரதம்)
v
"பொலந்தார்
இராமன் துணையாகப் போதந்து
இலங்கைக் கிழவற்கு இளையோன்.."
- என்று இராமாயணக் கதையை
குறிப்பிடுகிறது
v
"முதலில்லார்க்கு
ஊதியமில்”
v
"புல்மேயா தாகும் புலி"
v
"தமக்கு மருத்துவர் தாம்”
v "அணியெல்லாம் ஆடையின் பின்”