TNPSC Notes அறநூல்கள் - நான்மணிக்கடிகை
நான்மணிக்கடிகை
· ஆசிரியர் : விளம்பி நாகனார்.
· இயற்பெயர் : நாக னார்
· காலம் :4 ஆம் நூற்றாண்டு
· ஊர்ப்பெயர் : விளம்பி
· சமயம் : வைணவர்.
· பாவகை : வெண்பா
· பாடல்கள் : 106 பாடல்கள். ( 2 கடவுள் வாழ்த்து + 104 வெண்பாக்கள்)
· கடிகை என்றால் துண்டு, கட்டுவடம், ஆபரணம், நாழிகை, கரகம், தோள்வளை என்று பொருள்
•
ஒவ்வொரு
பாட்டும் நான்கு மணிகள் போன்ற அறக்கருத்துக்களைக் கூறும்.
•
ஜி.யு.போப் இரண்டு
பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.
•
இந்நூல்
"அம்மை" என்னும் வனப்பு வகையைச் சார்ந்தது.
•
கடவுள்
வாழ்த்துப் பாடலில் திருமாலைப் பற்றி கூறப்பட்டுள்ளது.
“மனைக்கு விளக்கம் மடவாள்; மடவாள்
தனக்குத் தகைசால் புதல்வர்; மனக்கினிய
காதல் பதல்வர்க்குக் கல்வியே ; கல்விக்கும்
ஓதின் புகழ்சால் உணர்வு"
- விளம்பி நாகனார்
சொற்பொருள்:
•
ஓதின்
- சொல்லும் போது; தகைசால் - பண்பில் சிறந்த; மனக்கினிய - மனதுக்கு இனிய; மடவாள்- பெண்
மேற்கோள்:
v
"யார் அறிவார் நல்லாள் பிறக்கும் குடி”
v
"தனக்கு
பாழ் கற்றியில்லா உடம்பு"
v
“யார்
மாட்டும் கொள்ளாமை வேண்டும் பகை"
v
“மழையின்றி
மாநிலத்தார்க் கில்லை"
v
“அல்லவை
செய்வார்க் கறங்கூற்றம்"
v
“இளமைப்
பருவத்துக் கல்லாமை குற்றம் வளமில்லா போழ்தத்து வள்ளன்மை குற்றம்"
v
"ஈன்றாளோடு
எண்ணக் கடவுளும் இல்”
v
"கொண்டானின்
சிறந்த கேளிர் பிறர் இல்"
v
"நிலத்துக்கு
அணியென்ப நெல்லும் கரும்பும்
குளத்துக்கு அணியென்ப தாமரை,
பெண்மை
தலத்துக்கு அணியென்ப நாணம்,
தனக்கணி
தான்செல் உலகத்து அறம்”
v "கல்லா ஒருவர்க்குத் தம்வாயிற் சொற்கூற்றம்”