ரயில்வே உதவி ஓட்டுநர் பணிக்கு 9,970 காலியிடங்கள்.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.. கடைசி தேதி எப்போது..?
ரயில்வே தேர்வு வாரியம் 9,970 உதவி ஓட்டுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது. சென்னை கோட்டத்தில் 362 காலிப்பணியிடங்கள் உள்ளன. 11-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
9 ஆயிரத்து 970 காலிப்பணியிடங்கள் கொண்ட ரயில்வே உதவி ஓட்டுநர் பணிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என ரயில்வே தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. நடப்பாண்டிற்கான ரயில்வே உதவி ஓட்டுநர் பணிக்கான அறிவிப்பை ரயில்வே தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
அதன் படி, நாடு முழுவதும் காலியாக உள்ள 9 ஆயிரத்து 970 பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
இதில், சென்னை கோட்டத்தில் 362 காலிப்பணியிடங்கள் இருப்பதாக ரயில்வே தேர்வு வாரியம் குறிப்பிட்டுள்ளது.
பத்தாம் வகுப்புடன் ஐடிஐ முடித்தவர்கள் தொடங்கி, டிப்ளமோ, பொறியியல் பட்டம் பெற்றவர்களும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
3 கட்டங்களாக இத்தேர்வு நடைபெற உள்ள நிலையில், தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள், ரயில்வே தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ வலைதளம் மூலம் அடுத்த மாதம் 11-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.