ரூ. 25 லட்சம் வரை சம்பளம்.. டிகிரி போதும்.. பரோடா வங்கியில் 146 காலி பணியிடங்கள் அறிவிப்பு..!!
பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் பரோடா பல்வேறு துறையின் கீழ் 146 கால் பணியிடத்திற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பேங்க் ஆப் பரோடா வங்கி வேலைவாய்ப்பு
பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் பரோடா பல்வேறு துறையின் கீழ் உள்ள தற்காலிக பணியாளர்களுக்கான காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
காலி பணியிடங்கள் விவரம்:
துணை பாதுகாப்பு வங்கி ஆலோசகர் - 1 காலிப்பணியிடம், தனியார் வங்கி (Radiance Private) - 3 காலி பணியிடங்கள், குழு தலைவர் (Group Head)- 4 காலி பணியிடங்கள், பிராந்திய தலைவர் (Territory Head) - 17 காலி பணியிடங்கள், சீனியர் உறவு மேலாளர் (Senior Relationship Manager)- 101 காலி பணியிடங்கள், Wealth Strategist (Investment & Insurance) - 18 காலி பணியிடங்கள், Product Head (Private Banking) - 1 காலி பணியிடம், Portfolio Research Analyst - 1 காலிப்பணியிடம் என
மொத்தம் 146 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
வயது வரம்பு:
இதில் ஒவ்வொரு பிரிவிற்கும் வயதுவரம்புகள் மாறுபடும். துணை பாதுகாப்பு வங்கி ஆலோசகர் பதவிக்கு உச்ச வயது வரம்பு 57 வயது, தனியார் வங்கி - Radiance Private பதவிக்கு 33 -50 வயது, குழு தலைவர் பதவிக்கு 31 - 45 வயது, பிராந்திய தலைவர் பதவிக்கு 27 - 40 வயது,
சீனியர் உறவு மேலாளர் பதவிக்கு 24 -35 வயது, Wealth Strategist பதவிக்கு 24 - 45 வயது,
Product Head பதவிக்கு 24 - 45 வயது, Portfolio Research Analyst பதவிக்கு 22 - 35 வயது என பணியிடங்களை பொறுத்து வயது வரம்புகள் மாறுபடுகிறது.
கல்வி தகுதி:
துணை பாதுகாப்பு வங்கி ஆலோசகர் பதவிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் கீழ் இளங்கலை பட்டப்படிப்பும், இதர பதவிகளுக்கு முதுகலை பட்டம் அல்லது மேனேஜ்மெண்ட் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
அனுபவம்:
பதவிக்கு ஏற்ப குறைந்தபட்சம் 1 முதல் 12 வருடங்கள் வரை அனுபவம் வாய்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
சம்பளம்:
ஒரு வருடத்திற்கு 6 லட்சத்திலிருந்து 25 லட்சம் வரை பணியிடங்களுக்கு ஏற்றார் போல் சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை:
இதில் விண்ணப்பித்தவரின் கல்வி தகுதி, அனுபவம் அடிப்படையில் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
https://www.bankofbaroda.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப கட்டணம்:
இதற்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.600 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
இதற்கு விண்ணப்பிப்பதற்கு ஏப்ரல் 15 ஆம் தேதி கடைசி தேதியாகும்.