Videos

ஆசிரியர் தகுதி தேர்வு (TET) தேதி மாற்றம்! TRB அறிவிப்பு.

ஆசிரியர் தகுதி தேர்வு தேதி மாற்றம் TRB அறிவிப்பு

ஆசிரியர் தகுதி தேர்வு தேதி மாற்றம் TRB அறிவிப்பு
ஆசிரியர் தகுதி தேர்வு (TET) தேதி மாற்றம்! TRB அறிவிப்பு.

ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை -6. 
பத்திரிகைச் செய்தி


    தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022ம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண்.01/2022 நாள் 07,03,2022 அன்று வெளியிடப்பட்டது. 06.07.2022 பத்திரிகை செய்தியின்படி ஆகஸ்டு மாதம் 25 முதல் 31 வரை உள்ள தேதிகளில் தாள்-1 ற்கு மட்டும் முதற்கட்டமாக தேர்வுகள் கணினிவழியில் மட்டுமே நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்ற விவரம் தெரிவிக்கப்பட்டது. தற்பொழுது நிர்வாக காரணங்களினால், தாள்.1 ற்கான தேர்வு 10.09,2022 முதல் 15.09:2022 வரை நடத்தப்படவுள்ளது.

இதையும் வாசிக்க :6th Tamil Seiyul Thanippadal TNPSC - TNTET | Online Study
    மேற்படி கணினிவழித் தேர்விற்காக (Computer Based Examination) பயிற்சித் தேர்வு (Practice Test) மேற்கொள்ளவிரும்பும் தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பயிற்சியினை மேற்கொள்வதற்கு. தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்பிருந்து வாய்ப்பு வழங்கப்படும். அனைத்து பணிநாடுநர்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயிற்சி மேற்கொள்ளலாம். இது குறித்த அறிவிக்கை, தேர்வுகால அட்டவணை மற்றும் அனுமதிச்சீட்டு (Admit card) வழங்கும் விவரம் செப்டம்பர் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும்.

நாள் : 09.08.2022                                                                
தலைவர்

இதையும் வாசிக்க :6th Tamil Seiyul Purananuru TNPSC - TNTET | Online Study

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.