TNPSC Notes அறநூல்கள் - நாலடியார்
TNPSC Group 1, Group 2, Group 4 Thirukkural Notes. TNPSC Important Notes. TNPSC Kalvi Imayam Online Study. TNPSC Free Study Materials. TNPSC Pothu Tamil Important Notes
அறநூல்கள் - நாலடியார்
- ஆசிரியர் : சமணமுனிவர்கள் (பாண்டியநாடு)
- பாடல்கள் : 400
- சிறப்புப் பெயர்கள்: நாலடி நானூறு, வேளாண் வேதம்
- பாவகை: வெண்பா
TNPSC Notes அறநூல்கள் - நாலடியார்
- இது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
- இது பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள ஒரே தொகை நூல்
- திருக்குறளுக்கு அடுத்து புகழ்பெற்ற நூல்
- இதை ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
- முப்பாலும் கூறும் நூல் : அறம்- 13, பொருள்-24, இன்பம் 3.
- இது 40 அதிகாரமும், 12 இயல்களும் கொண்டது.
- முதல் இயல் - துறவறம்
- தொகுத்தவர், அதிகாரம் வகுத்தவர் - பதுமனார்.
- முப்பாலாகப் பகுத்தவர் - தருமர்
- உரை கண்டவர்கள் - பதுமனாரும், தருமரும்.
- நிலையாமை, துறவறம் பற்றி கூறுகிறது.
- வாழ்க்கையின் எளிமையான பொருட்களை உவமைகளாக் கையாண்டு நீதி புகட்டுகிறது.
- பரிமேலழகர், நச்சினார்க்கினியார், அடியார்க்கு நல்லார் முதலிய உரையாசிரியர்கள் இந்நூலை மேற்கோளாகக் கையாண்டுள்ளார்.
"வைப்புழிக் கோட்படா வாய்த்தீயிற் கேடில்லைமிக்க சிறப்பின் அரசர் செறின்வல்வார்எச்சம் எனவொருவன் மக்கட் செய்வனவிச்சைமற்று அல்ல பிற"
"நாய்க்கால் சிறுவிரல்போல் நன்கணிய ராயினும்ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம்சேய்த்தானும் சென்று கொளல்வேண்டும் செய்விளைக்கும்வாய்க்கால் அனையார் தொடர்பு"
- சமண முனிவர்கள்
சொற்பொருள்:
- வைப்புழி - பொருள் சேமித்து வைக்கும் இடம்; விச்சை - கல்வி; அணியர் - நெருங்கி இருப்பவர்; என்னாம் - என்ன பயன்; சேய் - தூரம்; செய் -வயல்
வாய்க்கால் அணைய
"ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி
நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி”
"பழகு தமிழ் சொல்லருமை நால் இரண்டில்"
"சொல்லாய்ந்த நாலடி நானூறும் நன்கு இனிது"
இவற்றுள் நால் என்பது நாலடியாரையும் இரண்டு என்பது திருக்குறளையும் குறிக்கும்.
மேற்கோள்:
"கல்வி கரையில கற்பவர் நாள் சில
மெல்ல நினைக்கின் பிணி பல - தெள்ளிதின்
ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப்
பாலுண் குருகின் தெரிந்து"
"கல்வி அழகே அழகு"
"பெரியார் கேண்மை பிறைபோல நாளும்
வரிசை வரிசையா நந்தும் - வரிசையால்
வானூர் மதியம் போல் வைகலும் தேயுமே
தானே சிறியார் தொடர்பு”