Videos

National Income - Economics TNPSC Online Study

தேசிய வருமானம் - Economic Reform Advisory Committees | TNPSC - Online Study

Gross national income. தேசிய வருமானம் National Income. TNPSC Economics Questions in Tamil pdf.  (ECONOMY) தேசிய வருமானம். TNPSC Economics Important Notes in Tamil for Group 2, Gr 2A, Gr 4, VAO Economy TN Start Board Syllabus Important Notes. tnpsc economics syllabus. Economics Online Test. TNPSC Economics study materials in Tamil medium and English Medium for Group 1, Group 2, Group 2A, Group 4 and VAO  and also State Competitive Exams like TNUSRB, TRB, TET, TNEB, etc. TNPSC Online Study also provided the Topic wise Previous Year TNPSC Economy Questions and also other exams for you. TN Samacheer kalvi Guide.

தேசிய வருமானம் | TNPSC - Online Study

 தேசிய வருமானம்

Gross Domestic Product (GDP), Gross National Product (GNP), Net National Product (NNP), National Income (NI)

  • நாட்டினுடைய கேசிய உற்பத்தி, தேசிய வருமானத்தோடு தொடர்புடையவை GDP, GNP, NNP போன்றவை ஆகும்.
  • GDP என்னும் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஒரு நாட்டு எல்லைக்குள் ஒரு நிதியாண்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மற்றும் அளிக்கப்பட்ட சேவைகளின் மதிப்பாகும்.
  • GNP என்னும் மொத்த தேசிய உற்பத்தி.ஒரு நாட்டினரால் ஒரு நிதி ஆண்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மற்றும் அளிக்கப்பட்ட சேவைகளின் மொத்த மதிப்பாகும்.
  • GNP என்பது GDPயுடன் நிகர வெளிநாட்டு வருமானத்தைக் கூட்டக் கிடைப்பதாகும்.
  • NNP என்பது GNP-ல் இருந்து தேய்மானத்தை (Depreciation) கழிக்கக்கிடைப்பதாகும்.
  • நிகர தேசிய உற்பத்தி எனப்படும் NNP-யை காரணி விலையில் குறிப்பிட்டால் அதுவே தேசிய வருமானம் (National Income).
  • சந்தை விலையில் NNP என்பது உற்பத்தி விலையோடு மானியத்தைக் கூட்டி மறைமுக வுரிகளைக் கழிப்பதன் மூலம் கிடைக்கிறது.
  • தேசிய வருமானத்தை மக்கள் தொகையால் வகுக்க கிடைப்பது தலா வருமானம் (Per Capita Income)
  • தேசிய வருமானத்திற்கு பங்களிப்பு செய்யும் மூன்று பிரிவுகள் முதன்மை, இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை பிரிவுகளாகும்.
  • முதன்மைப் பிரிவில் (Primary Sector) வேளாண்மை, கால்நடைவளம், வனத்துறை, மீன்பிடித்தல், சுரங்கம் போன்றவை அடங்கும்.
  • இரண்டாம் நிலைப் பிரிவில் (Secondary Sector) தொழில்கள், மின்சாரம், எரிவாயு, கட்டுமானத்துறை போன்றவை அடங்கும்.
  • பணிகள் துறை (Service Sector) எனப்படும் மூன்றாம் நிலை பிரிவில் - வணிகம், போக்குவரத்து, வங்கி, காப்பீடு, ரியல் எஸ்டேட் போன்றவை அடங்கும்.
  • தற்போது இந்தியாவில் தேசிய வருமானம் கணக்கிடுவதற்கு 1999 2000-ம் அடிப்படை ஆண்டாகக் கொள்ளப்படுகிறது. ஆண்டு
  • இந்தியாவில் தேசிய வருமானம் ஒவ்வொரு நிதி ஆண்டிற்கும் மத்திய புள்ளியியல் நிறுவனத்தால் கணக்கிடப்படுகிறது.

நிதிக்கொள்கையும் பட்ஜெட்டும்


  • நாட்டின் நிதிக் கொள்கைப்படி பட்ஜெட் உருவாக்கப்படுகிறது. நாட்டுக்கு வரக்கூடிய பல்வேறு வருமானங்கள் அரசியல் அமைப்புச் சட்டத்தின் 266 வது உறுப்புப்படி அமைந்துள்ள திரள் நிதியில் வரவு வைக்கப்படுகின்றன. 
  • இந்திய திரள் நிதி(Consolidated Fund of India)யில் இருந்து செலவளிக்கப்படும் பணம் பாராளுமன்றத்தின் ஒப்புதல் பெற்று செலவழிக்க வேண்டும்.
  • ஆண்டுதோறும் நாட்டின் செலவுக்கான பாராளுமன்ற ஒப்புதலை பெறவும், வரிவிதிப்பதற்கான பாராளுமன்ற ஒப்புதலைப் பெறவும் அரசியல் அமைப்புச் சட்ட உறுப்பு 112 ன்படி ஆண்டு நிதிநிலை அறிக்கை, நிதி அமைச்சரால் மக்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது.
  • பட்ஜெட்டின் பகுதியில் வருவாய் வழிகளும் செலவினங்களும் குறிப்பிடப்படுகிறது.
  • பட்ஜெட்டின் வரி விதிப்பு தீர்மானங்கள் நிதிச் சட்டமாகவும் (Finance Act) ஆண்டு செலவினத்திற்கான பாராளுமன்ற ஒப்புதல் பண ஒதுக்கீட்டுச் சட்டமாகவும், (Appropriation Act) பாராளுமன்ற கூட்டத் தொடரின்போது நிறைவேற்றப்படுகிறது.
  • பட்ஜெட்டில் குறிப்பிடப்படும் செலவினங்கள் திட்ட செலவினம், திட்டம் சாராசெலவினம், வளர்ச்சி சார செலவினம்.
  • வளர்ச்சி சாரற செலவினங்களில் கடனுக்காக செலவிடப்படும் வட்டி, பாதுகாப்புச் செலவுகள், மானியங்கள் ஆகிய மூன்றும் அடங்கும்.
  • வளர்ச்சி சாரா செலவினங்களில் மிகப்பெரிய செலவாக இருப்பது கடனுக்கு செலுத்தும் வட்டியாகும்.
  • மொத்த செலவினத்தில் சுமார் 15% திட்ட செலவினமாகவும், 35% திட்ட சாரா செலவினமாகவும், 40% வளர்ச்சி சாரா செலவினமாகவும் உள்ளது.

இருவகை நிதிகள்

  • திரள் நிதி (Consolidated Fund of India) அவசரகாலநிதி (Contingency Fund of India) ஆகியவை இருவகை நிதிகள்.
  • திரள் நிதியில் நாட்டின் வருவாய்கள் அனைத்தும் வரவு வைக்கப்படும்.
  • திரள் நிதியில் இருந்து செலவளிக்கப்படும் செலவினங்கள் மானியக் கோரிக்கையாக (Demands for grant) மக்களவையில் வைக்கப்பட்டு நிறைவேற்றப்படுகிறது.
  • குடியரசுத் தலைவர், உச்ச, உயர் நீதிமன்ற நீதிபதிகள் போன்றோரின் (இரண்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்ட) ஊதிய செலவினங்கள் வழங்குவதற்கு பாராளு மன்றத்தில் ஓட்டெடுப்பு நடத்தத் தேவை இல்லை.
  • ஓட்டெடுப்பின்றி திரள் நிதியில் நேரடியாக சேர்க்கப்படும் செலவினங்களைச் சாட்டப்பட்ட செலவினங்கள் (Charged Expenditures) என்று அழைக்கிறோம்.
  • எதிர்பாராத அவசர செலவுகளுக்கு குடியரசுத் தலைவர் அவசரகால நிதியில் இருந்து பணம் வழங்குகிறார்.
  • அவசரகால நிதியில் இருந்து பெறப்பட்ட பணம் பாராளுமன்ற திரள் நிதியில் இருந்து பெறப்பட்டு மீள அவசரகால நிதிக்கு அளிக்கப்படுகிறது.

ஒரு ரூபாய் வரவும் செலவும்


  • ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில் அரசுக்கு ஒரு ரூபாய் எப்படி வருகிறது, ஒரு ரூபாய் எப்படி செலவாகிறது என்பது விளக்கப்படுகிறது.
  1. ஒரு ருபாய் வரவு (2012 - 13 பட்ஜெட்) 
  2. கடன் மற்றும் இதர வருவாய் -29 பைசா,
  3. கார்பரேட் வரி-21 பைசா,
  4. வருமான வரி-11 பைசா,
  5. சுங்க வரி (Customs)-10 பைசா.
  6. கலால்வரி (Excise duty) -11 பைசா,
  7. கடன்சாரா முதலீட்டு வரவு-2 பைசா,
  8. சேவை மற்றும் இதர வரிகள்-7 பைசா,
  9. வரிசாரா வருவாய்-9 பைசா
  • ஒரு ருபாய் செலவு விவரம் (2012-13 பட்ஜெட்)
  1. மத்திய திட்ட செலவு -22 பைசா,
  2. கடன்களுக்கான வட்டி-18 பைசா,
  3. பாதுகாப்புச் செலவுகள்-11 பைசா,
  4. மானியங்கள்-10 பைசா,
  5. திட்டம் சாரா இதர செலவுகள்-11 பைசா,
  6. வரி வருவாயில் இருந்து மாநில அரசுக்கு பங்கு-17 பைசா,
  7. மாநில, யூனியன் பிரதேச திட்டம் சாரா உதவி-4 பைசா,
  8. மாநில, யூனியன் பிரதேச திட்ட உதவி-7 பைசா,

வரியும் நெறியும்


  • ஒருவர் மீது விதிக்கப்பட்ட வரிச்சுமையை அவரே தாங்க நேர்ந்தால், அந்த வரி நேர்முக வரி.
  • ஒருவர் மீது விதிக்கப்பட்ட வரிச்சுமையை மற்றவருக்கு மாற்ற முடிந்தால், அந்த வரி மறைமுக வரி,
  • வரி, சொத்து வரி, நிலவரி, தொழில் வரி போன்றவை நேர்முக வரிகள் (Direct Taxes)
  • சுங்க வரி, கலால் வரி, விற்பனை வரி,கேளிக்கை வரி போன்றவை மறைமுக வரிகள் (Indirect Taxes)
  • ஏற்றுமதி, இறக்குமதி பொருட்கள் மீது மத்திய அரசு விதிக்கும் வரி சுங்க வரி (Customs Duty).
  • உற்பத்தி மீது மத்திய அரசு விதிக்கும் வரி சுலால் வரி (Excise Duty).
  • வருமான வரி, சுங்க வரி, கலால் வரி போன்றவை மத்திய அரசு விதிக்கும் வரிகள்.
  • நிலவரி (Land Revenue), தொழில் வரி (Professional Tax), விற்பனை வரி (Sales Tax) போன்றவை மாநில அரசு விதிக்கும் வரிகள்.
  • கேளிக்கை வரி (Entertainment Tax) திரைப்படங்களின் மீது மாநில அரசால் விதிக்கப்படுகிறது.
  • ஒரு பொருளுக்கே இருமுறை வரிகட்டும் சூழல் ஏற்படுவதைத் தவிர்க்கவே மதிப்புக் கூட்டு வரி (Value Added Tax - VAT) அறிமுகமானது.
  • மதிப்புக் கூட்டு வரியை அறிமுகப்படுத்திய நாடு பிரான்ஸ். இந்தியாவில் முதன்முதலாக ஹரியானா மாநிலம்தான் மதிப்புக் கூட்டு வரியை அறிமுகப்படுத்தியது.
  • 2002-ம் ஆண்டு மாநில நிதி அமைச்சர்கள் மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவின்படி VAT கொண்டுவரப்பட்டது.
  • இந்தியாவில் எட்டு மாநிலங்கள் தவிர, பிற மாநிலங்கள் ஏப்ரல் 2005 முதல் மதிப்புக்கூட்டு வரியை அறிமுகப்படுத்தின.
  • தமிழ்நாட்டில் ஜனவரி 2007 முதல் மதிப்புக் கூட்டு வரி அறிமுகப்படுத்தப்பட்டது.
  • விவசாய வருமானத்துக்கு வரி விதிக்கும் அதிகாரம் மாநில அரசிடம் உள்ளது. இதுவரை சில மாநில அரசுகள் மட்டுமே விவசாய வருமானத்துக்கு வரி விதித்துள்ளன.
  • விவசாய வருமானத்துக்கு வரிவிதிப்பு குறித்து ஆராய 1972-ல் கே.என்.ராஜ் கமிட்டி அமைக்கப்பட்டது
  • ஜா கமிட்டி (1997) மற்றும் ரெக்கி கமிட்டி (1991) ஆகியவை மறைமுக வரி விதிப்பு குறித்து ஆராய்ந்தன.
  • நேர்முக வரி குறித்து 1971 ஆராய்ந்த கமிட்டி வான்சு கமிட்டி
  • நேர்முக, மறைமுக வரிச் சீர்திருத்தங்கள் குறித்து ஆராய்ந்த கமிட்டி டாக்டர். ராஜா செல்லையா கமிட்டி (1991).
  • டோபின் வரி என்பது சர்வ தேச பண பரிமாற்றத்தின் மீதான வரி.
  • GST எனப்படும் Goods and Services Tax (பொருள் மற்றும் சேவை வரி)-ஐ விரைவில் அமுல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
  • GSTஐ அறிமுகப்படுத்த அரசியல் சட்டதிருத்தம் தேவை.
  • CENVAT எனப்படும் Central Value added Tax மத்திய அரசு விதிக்கும் கலால் வரிக்கான மாற்று வடிவமாகும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.