Videos

10ம் வகுப்பு படித்தவர்கள் LIC Agentஆக வாய்ப்பு

10ம் வகுப்பு படித்தவர்கள் LIC Agentஆக வாய்ப்பு


10 வகுப்புத் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள், LIC Agentஆக விரும்பினால் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.


மத்திய அரசின் நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் (LIC) ஐபிஓ தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதற்காக முதலீட்டாளர்கள் பெரும் ஆவலோடு காத்திருக்கின்றனர். ஐபிஓ வருவதற்கு முன் எல்.ஐ.சி. நிறுவனத்துடன் சேர்ந்து பணம் சம்பாதிக்க வாய்ப்பு உள்ளது.

பகுதி நேரமாக வேலை செய்து சம்பாதிக்க விரும்பினால் LIC உங்களுக்கு இந்த வாய்ப்பை வழங்குகிறது. வேலை தேடும் இளைஞர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகும்.

LIC Agentஆக மாறுவதன் மூலம் நல்ல பணம் சம்பாதிக்கலாம். இதற்கு வழக்கமான அலுவலக நேரம் தேவையில்லை. வாடிக்கையாளர்களைத் தொடர்புகொள்வதன் மூலம் நீங்கள் வீட்டிலிருந்தே வேலை செய்யலாம். இந்த வேலைக்கான கல்வித் தகுதியை 12ஆம் வகுப்பில் இருந்து 10ஆம் வகுப்பாக எல்.ஐ.சி. குறைத்துள்ளதால் இன்னும் நிறையப் பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள்.

எனவே 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இளைஞர்களும் LICயில் வேலைக்குச் சேரலாம். நீங்கள் முழு நேரமாகவோ அல்லது பகுதி நேரமாகவோ வேலை செய்யலாம்.இதன் மூலம் தொடர்ச்சியாக பல ஆண்டுகள் உங்களால் கமிஷன் தொகை பெற இயலும்.

தகுதி: 

எல்ஐசி ஏஜெண்ட் வேலைக்கு கல்வித் தகுதி குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 

18 வயது நிரம்பியிருக்க வேண்டும்.

விருப்பமுள்ளவர்கள் அருகிலுள்ள எல்.ஐ.சி. கிளை அலுவலகத்தைத் தொடர்புகொண்டு வேலைக்கு சேரலாம்.

அங்கு நேர்காணல் மூலம் வேலை கிடைக்கும். வேலை கிடைத்தவுடன் பயிற்சிக்காக நீங்கள் ஏஜென்சி பயிற்சி மையத்திற்கு அனுப்பப்படுவீர்கள்.

25 மணி நேர பயிற்சி அளிக்கப்படுகிறது.

பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பிறகு, இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் (IRDAI) நடத்தும் ஆட்சேர்ப்புக்கு முந்தைய தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு காப்பீட்டு முகவருக்கான (ஏஜெண்ட்) நியமனக் கடிதமும் அடையாள அட்டை வழங்கப்படும்.

ஆவணங்களைப் பொறுத்தவரையில், இந்த வேலைக்குச் சேர்வதற்கு 10ஆவது மதிப்பெண் சான்றிதழ், முகவரிச் சான்று, அடையாளச் சான்று, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, 6 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ போன்றவை தேவைப்படும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.