Videos

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது!

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள Post-Doctoral Fellow பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ரூ.47 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு சம்பந்தப்பட்ட துறையில் பி.எச்டி தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.




  • நிர்வாகம் : பாரதிதாசன் பல்கலைக் கழகம் (Bharathidasan University)
  • மேலாண்மை : தமிழக அரசு
  • பணி : Post-Doctoral Fellow

கல்வித் தகுதி : 

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் Women's Studies / Social Sciences பாடப்பிரிவில் Ph.D பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

  • ஊதியம் : ரூ.47,000 மாதம்.
  • அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும். விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பெற்று, பூர்த்தி செய்து rusabduss.office@bdu.ac.in எனும் மின்னஞ்சல் முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை :

விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு தேதி : 

15.02.2022 அன்று நேர்முகத் தேர்வு நடைபெறும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.bdu.ac.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.