Videos

TNPSC எழுதுவோர்கான முக்கிய செய்தி

TNPSC எழுதுவோர்கான முக்கிய செய்தி


டிஎன்பிஎஸ்சி இன்று வெளியிட்டுள்ள முக்கிய செய்தி- முழு விவரங்கள் பின்வருமாறு:

ஒருமுறை நிரந்தரப்பதிவு (One Time Registration) கணக்கு வைத்திருக்கும் அனைத்து விண்ணப்பதாரர்களும், அவர்களது ஆதார் எண்ணை 28.02.2022 ஆம் தேதிக்குள், ஒருமுறை நிரந்தரப்பதிவுடன் தவறாமல் இணைக்க வேண்டும் என்றும், அதனடிப்படையில், அறிவிக்கைகளுக்கு, தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது எதிர்காலத்தில் தேர்வாணையத்தால் வெளியிடப்படும் இணையவழி விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறும், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் செய்தி வெளியீட்டு எண் 07/2022, நாள் 01.02.2022 மூலம் அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், ஒருங்கிணைந்த தொகுதி II மற்றும் IIA தோவிற்கான அறிவிக்கை 23.02.2022 அன்று தோவாணையத்தால் வெளியிடப்பட்டது. இத்தோவிற்கு, இணையவழியில் விண்ணப்பிக்க கடைசி நாள் 23.03.2022 ஆகும். இத்தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்புவோர், தங்களது ஒருமுறை நிரந்தரப்பதிவுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது ஒருமுறை நிரந்தரப்பதிவுடன் ஆதார் கட்டாயமாகும். அவ்வாறு, எண்ணை இணைப்பதற்கு, 01.02.2022 நாளிட்ட செய்தி வெளியீட்டின்படி, கடைசி நாள் 28.02.2022 ஆகும். ஆகையால், 28.02.2022குள் ஆதார் எண்ணை ஒருமுறை நிரந்தரப்பதிவுடன் இணைக்காதவர்கள், ஒருங்கிணைந்ததொகுதி II மற்றும் IIA தேர்விற்கு விண்ணப்பிக்க இயலாத நிலை ஏற்படும். இதனைத்தொடர்ந்து, தற்போதுவரை ஒருமுறை நிரந்தரப்

பதிவுடன் ஆதார் எண்ணை இணைக்காத மற்றும் ஒருங்கிணைந்த தொகுதி II மற்றும் IIA தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் பெருவாரியான தேர்வர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில், தேர்வர்களின் நலன்கருதி, ஒருமுறை நிரந்தரப்பதிவுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு 30.04.2022 வரை தேர்வாணையத்தால் நீட்டிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.