Videos

TRB Annual planner 2023 Download PDF

TRB Annual planner 2023 Download PDF

TRB வருடாந்திர தேர்வு அட்டவணை வெளியீடு! 15000+ பணியிடங்கள் Annual planner 2023 Download!

TRB Annual planner 2023
TRB Annual planner 2023


தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தற்போது 2023ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு கால அட்டவணையை வெளியிட்டு உள்ளது. இதில் 2023ல் நடைபெறவுள்ள தேர்வின் விவரங்கள் இடம் பெற்றுள்ளது



TN-TRB ஆண்டு அறிக்கை

TRB Annual planner 2023
TRB Annual planner 2023


தமிழக அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள ஆசிரியர், பேராசிரியர் காலிப்பணியிடங்கள் தகுதித்தேர்வில் மூலமாக மட்டுமே நிரப்பப்பட்டு வருகிறது. இத்தகைய தகுதித்தேர்வை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) நடத்தி வருகிறது. இந்த தகுதித்தேர்வின் அடிப்படையில் மட்டுமே ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். நடப்பு ஆண்டு முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு, பாலிடெக்னிக் கல்லூரி பேராசிரியர் தேர்வு மற்றும் TET போன்ற தேர்வுகள் நடத்தப்பட்டது.

அடுத்த TET தாள்-2 தேர்வு விரைவில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் இன்று ஆசிரியர் தேர்வு வாரியம் 2023 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர அட்டவணையை வெளியிட்டுள்ளது. இதில் அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மொத்தம் 15,000+ காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கான தேர்வு நடைபெறும் மாதங்களும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.