TNUSRB SI வேலைவாய்ப்பு அறிவிப்பு 2023 – 621 காலிப்பணியிடங்கள்
TNUSRB SI வேலைவாய்ப்பு அறிவிப்பு 2023 |
TNUSRB SI Exam Notification 2023
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) ஆனது Sub-Inspectors of Police (Taluk, AR & TSP) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு பற்றிய செய்தி தாள் அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, மொத்தம் 621 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணிக்கான ஆன்லைன் வசதி 01.06.2023 முதல் 30.06.2023 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான https://tnusrb.tn.gov.in/ இல் செயலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB)
- பணியின் பெயர்: Sub-Inspectors of Police (Taluk, AR & TSP)
- பணியிடங்கள் : 621
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 01.06.2023 முதல் 30.06.2023 வரை
- விண்ணப்பிக்கும் முறை : Online
TNUSRB காலிப்பணியிடங்கள்:
மொத்த பணியிடங்கள்:
- ஆண்கள் - 464 + 5
- பெண்கள் - 151 +1
SI (Taluk, AR & TSP) வயது வரம்பு:
01.07.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
TNUSRB SI (Taluk, AR & TSP) கல்வி தகுதிகள்:
இளங்கலை பட்டம் பல்கலைக்கழக மானியக் குழுவால் (UGC) /மத்திய/மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திடமிருந்து பெற்றிருக்க வேண்டும்.
SI பணிக்கான தேர்வு செயல் முறை:
- எழுத்துத் தேர்வு
- உடல்திறன் தேர்வு
- சான்றிதழ்கள் சரிபார்த்தல்
- நேர்முகத்தேர்வு
சம்பள விவரம்:
மேற்கண்ட தேர்வு செயல் முறைகள் மூலம் தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.36,900 – 1,16,600/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
தேர்வுக் கட்டணம் :
தேர்வு கட்டணம் ரூபாய்.500/- பொது மற்றும் காவல் துறை சார்ந்த ஒதுக்கீடு ஆகிய இரண்டிற்கும் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூபாய்.1000/- தேர்வுக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். தேர்வு கட்டணத்தை வங்கியின் செலுத்துச்சீட்டு அல்லது இணையவழி கட்டணம் முலம் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
தமிழக காவல் துறையில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் https://www.tnusrb.tn.gov.in/ என்ற இணைய முகவரி மூலம் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு 01.06.2023 முதல் 30.06.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.