நூல்களும் மேற்கோள்களும்
புறநானூறு:
நல்லது செய்தல் ஆற்றீராயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்
எத்திசைச் செலினும் அத்திசை சோறே
ஈயென இரத்தல் இழிந்தன்று அதன் எதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று
ஒருவர் தோற்பினும் தோற்பதுங்குடியே
இருவர் வேறலும் இயற்கையு மன்றே
நமக்கென முயலா நோன்தான்
பிறருக்கென முயலுநர் உண்மையானே
உண்பது நாழி உடுப்பது இரண்டே
பெரியோரை இகழ்தல் அதனினும் இலமே
யாதும் ஊரே யாவரும் கேளிர்
.
செல்வத்து பயனே ஈதல்
குறுந்தொகை:
யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முரைக்கேளீர்
வினையே ஆடவர்க்கு உயிரே, வால்நுதல்
மனை உறை மகளிருக்கு ஆடவர் உயிர்
விருந்து வர கரைந்தது காக்கை
கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிரைத் தும்பி
சிலப்பதிகாரம்:
- அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவதுவும்
- ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டு என்பதூடம்
- யானோ அரசன் யானே கள்வன்
- கள்வனைக்கோறல் கடுங்கோலன்று
- பத்தினி கடவுளைப் பரசல் வேண்டும்
- உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்தலும்
- ஞாயிறு போற்றுதும், ஞாயிறு போற்றுதும்
- திங்களைப் போற்றுதும், திங்களைப் போற்றுதும்
- மாசறுபொன்னே வலம்புரி முத்தே
- காசறுவிரையே கரும்பே தேனே
மணிமேகலை:
அறமெனப்படுவது யாதெனக் கேட்பின்
மறவா திதுகேள் மன்னுயிர்க் கெல்லாம்
உண்டி உடையும் உறைவிட மல்லது கண்டதில்லை
இளமையும் நில்லா யரக்கையும் நில்லா
வளவிய வான்பெரு செல்வமும் நில்லா
• எவ்வுயிர்க் காயினும் இரங்கல் வேண்டும்மண்டினி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம்உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே