Videos

பிரபலங்களின் முக்கிய மேற்கோள்கள்

பிரபலங்களின் முக்கிய மேற்கோள்கள்


அண்ணா

  • மறப்போம், மன்னிப்போம்!
  • கடமை, கண்ணியம், கட்டுப்பாடு. 
  • எதையும் தாங்கும் இதயம் வேண்டும்!
  • மாற்றான் தோர்ட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு! 

பெரியார்

  • மதம் அறிவைக் கெடுக்கும். 

பட்டினத்தார்

  • ஒன்றென்றிரு; தெய்வம் உண்டென்றிரு.

விவேகானந்தர்

  • விழுமின், எழுமின் அயராது உழைமின் 
  • விழி,எழு, வெற்றிகிட்டும் வரை ஓயாதே!

திலகர்

  • சுயராஜ்யம் எனது பிறப்புரிமை, அதை அடைந்தே தீருவேன்!

காந்திஜி 

  • செய் அல்லது செத்துமடி!

கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை 

  • தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு
  • மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா!

நாமக்கல் கவிஞர்(வெ.ராமலிங்கம் பிள்ளை) 

  • தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா
  • தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அதற்கோர் குணமுண்டு!
  • கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்! 
  • கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது.
  • கூட்டுறவில் சேருங்கள். கூடிவாழப்பழகுங்கள்! 
  • சத்தியம் நம்மிற்குறைந்ததால் பல சங்கடம் வந்து சேர்ந்ததே.

பாரதிதாசன்

  • பாரடா உன் மானிட சமுத்திரத்தை
  • உயிரை,உணர்வை வளர்ப்பது தமிழே
  • கொலை வாளினை எட்டா. வெகுகொடியோர் செயல் அறவே
  • தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.
  • மதங்கள் மக்களின் மாற்றுச் சட்டைகள்.
  • நல்லதோர் குடும்பம் பல்கலைக்கழகம்.
  • இருட்டறையில் உள்ளதடா உலகம்.
  • ஓடப்பர் உயரப்பர் எல்லாம் ஒப்பப்பர் ஆகிவிடுவார் உணரப்பா நீ!
  • புதியதோர் உலகம் செய்வோம்!

பாரதியார்

  • வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு!
  • யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்! 
  • மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்! 
  • நல்லதோர் வீணை செய்தே, அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ. தனியொருவனுக்கு
  • உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்!
  • நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்.
  • அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே!
  • காக்கை குருவி எங்கள் ஜாதி... காக்கைச் சிறகினிலே நந்தலாலா.
  • ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
  • பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்.
  • கொட்டு முரசே! கொட்டு முரசே! 
  • எண்ணிய முடிதல் வேண்டும். நல்லவே எண்ணல் வேண்டும்!
  • என்று தணியும் இந்த சுதந்திர தாகம் உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்!
  • பாரத பூமி பழம்பெரும் பூமி, நீரதன் புதல்வர் இந்நினைவு அகற்றாதீர்! தெய்வம் பலப்பல சொல்லிப்பகைத்தீயை வளர்ப்பவர் மூடர் நாடும் மொழியும் நமதிரு கண்கள்.

கபிலர் 

  • உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ!
  • நன்றே செய்தல் வேண்டும் நன்றும் இன்றே செய்தல் வேண்டும்! 

திருமூலர்

  • ஒன்றே குலம் ஒருவனே தேவன்!
  • உடம்பால் அழியின் உயிரார் அழிவர் 
  • அன்பும் சிவமும் இரண்டென்பார் அறிவிலார்...
  • உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே! 

இராமலிங்க அடிகள்

  • வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்.
  • அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை
  • உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்றுபேசுவார் உறவு கலவாமை வேண்டும்

திருஞானசம்பந்தர் 

  • காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி

சுந்தரர்

  • பித்தா பிறை சூடி பெருமானே அருளாளா
  • பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து.

திருநாவுக்கரசர்

  • என் கடன் பணி செய்து கிடப்பதே
  • நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்
  • மாசில் வீணையும் மாலை மதியமும் 
  • இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை 
  • ஈசன் எந்தன் இணையடி நிழலே

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.