இந்தியாவில் பொருளாதார அமைப்புகள் | TNPSC - Online Study
இந்தியாவில் பொருளாதார அமைப்புகள் பொருளாதாரம். TNPSC Economics Questions in Tamil pdf. (ECONOMY) பொருளாதாரம் - வகையும் தொகையும். TNPSC Economics Important Notes in Tamil for Group 2, Gr 2A, Gr 4, VAO Economy TN Start Board Syllabus Important Notes. tnpsc economics syllabus. Economics Online Test. TNPSC Economics study materials in Tamil medium and English Medium for Group 1, Group 2, Group 2A, Group 4 and VAO and also State Competitive Exams like TNUSRB, TRB, TET, TNEB, etc. TNPSC Online Study also provided the Topic wise Previous Year TNPSC Economy Questions and also other exams for you. TN Samacheer kalvi Guide.
- நாட்டின் உற்பத்தி பெருமளவுக்கு பொதுத்துறை வசம் இருந்தால் அது சமதர்மப் பொருளாதாரம் (Socialistic Economy)
- நாட்டின் உற்பத்தி பெருமளவுக்கு தனியார்துறை வசம் இருந்தால் அது முதலாளித்துவப் பொருளாதாரம் (Capitalistic Economy)
- நாட்டின் உற்பத்தியை பொதுத்துறை, தனியார் துறை இரண்டும் இணைந்து கவனிப்பதே கலப்புப் பொருளாதாரம் (Mixed Economy)
- இந்தியப் பொருளாதாரம் ஒரு கலப்புப் பொருளாதாரம்.
- வளர்ந்த நாடுகள்: அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, கனடா, இத்தாலி, ரஷ்யா. இங்கிலாந்து, பிரான்ஸ்.
- வளரும் நாடுகள்: இந்தியா, பாகிஸ்தான், சீனா, பங்களாதேஷ், ஆஸ்திரேலியா. பிரேசில்,,
- வளரும் நாடுகள் மூன்றாம் உலக நாடுகள் என்றும் அழைக்கப்படும்.
இந்தியாவில் பொருளாதார அமைப்புகள்
- இந்தியாவில் நிதித்துறை அமைச்சதம் (Ministry of Finance)நாட்டின் நிதிக் கொள்கையை (Fiscal Policy) முடிவு செய்கிறது.
- பட்ஜெட் எனப்படும் ஆண்டு வரவு செலவு அறிக்கையே நாட்டின் நிதிக் கொள்கையை எடுத்துக் காட்டும் முக்கிய அம்சமாகும்.
- பட்ஜெட்டுக்கு முந்தைய நாள் நிதி அமைச்சகம் முந்தைய நிதி ஆண்டின் பொருளாதார ஆய்வு அறிக்கையை (Economic Survey) வெளியிடுகிறது.
- இந்தியாவின் புணக்கொள்கையை (Monetory Policy) இந்தியாவின் மத்திய வங்கியான இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்கிறது. 231
- நாட்டின் பணம் மற்றும் கடன் கொள்கையை (Monetory and Credit Policy) ஆறு மாதத்துக்கு ஒரு முறை ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது.
- ஒரு ரூபாய் நோட்டை மட்டும் மத்திய நிதி அமைச்சகம் வெளியிட (மத்திய நிதித்துறைச் செயலாளர் அதில் கையெழுத்திடுகிறார்) பிற ரூபாய் நோட்டுகளை மத்திய ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது.
- ஐந்தாண்டு திட்ட உருவாக்கத்தில் ஆலோசனைகளைக் கூறுவது திட்ட ஆணையத்தின் முக்கியப் பணியாகும்.
- ஐந்தாண்டு திட்டங்களுக்கு இறுதி அங்கீகாரம் அளிக்கும் பொறுப்பு தேசிய வளர்ச்சிக் கவுன்சிலிடம் உள்ளது.
- மத்திய அரசின் வரி வருவாயில் இருந்து மாநில அரசுக்கு ஒதுக்கவேண்டிய நிதி அளவை நிர்ணயிப்பது நிதி ஆணையமாகும்.
- நீதி ஆணையம் என்பது இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அரசியல் அமைப்பினைச் சார்ந்த நிறுவனம் ஆகும்.
- திட்ட ஆணையம் என்பது அரசியல் அமைப்பில் சொல்லப்படாத (Extra Constitutional) பாராளுமன்ற சட்டத்தின் மூலம் உருவாக்கப்படாத, (Non Statutory) அமைச்சரவை தீர்மானத்தால் மட்டும் உருவாக்கப்பட்ட அமைப்பாகும்.
- பிரதமருக்கு பொருளாதார பிரச்னைகளில் அறிவுரை கூறும் பொருளாதார ஆலோசனை கவுன்சில் 2000-ல் உருவாக்கப்பட்ட மற்றொரு அமைப்பாகும்.
- நாட்டின் முதலீடுகளை பற்றி முடிவு செய்ய முதலீட்டு ஆணையம் ஏற்படுத்தப் பட்டுள்ளது.
- நாட்டின் முக்கியப் பொருளாதாரக் கொள்கைகள், பிரச்னைகள், சீர்திருத்தங்கள் குறித்து ஆராய்வதற்கு அவ்வப்போது பொருளாதாரச் சீர்திருத்த ஆலோசனைக் குழுக்கள் பொருளாதார வல்லுநர்கள் தலைமையில் அமைக்கப்படுகின்றன.