TNPSC History Important Notes Pallavas | பல்லவர்கள் | TNPSC Online Study
Pallavas. பல்லவர்கள் Notes in Tamil PDF for TNPSC. TNPSC History Important Notes பல்லவர்கள். பல்லவர்கள் tnpsc pdf download. TNTET and TNPSC Important Notes Based on New Syllabus. TN Samacheer kalvi Guide. TNPSC History Important Notes பல்லவர்கள் Online Stusy. TNPSC Online Study.
Pallavas | பல்லவர்கள்
- தமிழகத்தை ஆண்ட பல்லவர்கள் சங்க காலத்துக்குப் பிற்பட்டவர்கள்,
- சங்க இலக்கியங்களில் பல்லவர்கள் பற்றிய செய்திகள் ஏதும் இடம்பெறவில்லை.
- சாதவாகனாசுளிடம் படைத் தலைவர்களாக இருந்தவர்களே பின்னர் பல்லவ வம்சத்தினராயினர் என்பர் சிலர்.
- முற்கால பல்லவர்கள் பிராகிருத மொழியில் சாசனம் வெளியிட்டனர்.
- சிவ ஸ்கந்த வர்மன், விஜய ஸ்கந்த வர்மன் போன்றவர்கள் பிராகிருத மொழி பேசியவர்கள்.
- மற்றொரு பிரிவுப் பல்லவர்கள் சம்ஸ்கிருத மொழியில் சாசனங்களை வெளியிட்டுள்ளனர்.
- சம்ஸ்கிருத மொழிப் பல்லவர்கள் கி.மு. நான்காம் நூற்றாண்டு முதல் ஆட்சி செய்தனர்.
- கி.பி. தான்காம் நூற்றாண்டில் சமுத்திர குப்தரால் தோற்கடிக்கப்பட்ட விஷ்ணு கோபன், சம்ஸ்கிருத சாசனங்களை வெளியிட்ட பல்லவர் பிரிவினர்.
- பல்லவப் பேரரசு கி.பி. 575-ல் சிம்மவிஷ்ணுவால் நிறுவப்பட்டது.
- பல்லவர்களின் தலைநகரம்: காஞ்சிபுரம்.
- சிம்மவிஷ்ணு. சோழர், பாண்டியர், களப்பிரர்களை வென்றார்.
- வல்லம் தளவானூர், மகேந்திரவாடி ஆகிய இடங்களில் குடைவரைக் கோயில்களைக் கட்டியவர் சிம்மவிஷ்ணு
- .சிம்மவிஷ்ணுவின் மகன் மகேந்திரவர்மன்.
- வாதாபியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட கீழைச் சாளுக்கியர்களே பல்லவர்களின் முக்கிய எதிரிகள்.
- சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசியால் மகேந்திரவர்மன், புள்ளளூர் போரில் தோற்கடிக்கப்பட்டான்.
- மகேந்திரவர்மன் கோயில் கட்டிய இடங்கள்: மாமண்டூர், பல்லவபுரம்.
- மகேந்திரவர்மனை சைவ சமயத்துக்கு மாற்றியவர்: அப்பர்.
- மகேந்திரவர்மன் கட்டியதுதான் திருச்சி மலைக்கோட்டை விநாயகர் கோயில்.
- மகேந்திரவர்மனின் சிறப்புப் பெயர்கள்: சித்திரகாரப் புலி, விசித்திர சித்தன்.
- மகேந்திரவர்மன் எழுதிய நூல் ‘மத்த விலாச பிரகடனம்'.
- சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசியைத் தோற்கடித்தவர் நரசிம்மவர்மன்.
- சாளுக்கிய தலைநகர் வாதாபி, மணிமங்கலம் ஆகியவற்றை நரசிம்மவர்மன் கைப்பற்றினான்.
- சாளுக்கியர்களின் தலைநகரான வாதாபியைத் தீக்கிரையாக்கியதால் நரசிம்மவர்மனுக்கு 'வாதாபி கொண்டான் என்ற பெயர் வந்தது.
- நரசிம்மவர்மன். மற்போரில் சிறந்து விளங்கியதால் 'ழாமல்லன் என்றழைக்கப்படுகிறான்.
- சாளுக்கியரை வெல்ல நரசிம்மவர்மனுக்கு உறுதுணையாக இருந்தவர் பரஞ்சோதி.
- பரஞ்சோதியே கணபதி சிலையை வாதாபியிலிருந்து தமிழகத்துக்குக் கொண்டு வந்து தமிழகத்தில் கணபதி வழிபாட்டை அறிமுகப்படுத்தினார்.
- பரஞ்சோதியாற் பெரிய புராணத்தில் சிறு தொண்டர்' என்று குறிப்பிடப்படுகிறார்.
- சிறு தொண்டர், 63 நாயன்மார்களில் ஒருவர்.
- நரசிம்மவர்மனின் அவைக்கு சீனப் பயணியான யுவான் சுவாங் வருகை புரிந்தார்.
- மாமல்லபுரத்தை நிர்மாணித்தவர்: நரசிம்மவர்ம பல்லவர்.
- நரசிம்மவர்மனின் மகனான முதலாம் பரமேஸ்வரனே தமிழகத்தின் முதல் கற்கோயிலான கூரம் சிவன் கோவிலைக் கட்டினான்
- மாமல்லபுரம் கடற்கரைக் கோயிலைக் கட்டியவன் இரண்டாம் நரசிம்மவர்மன்.
- இரண்டாம் நரசிம்மவர்மனின் வேறு பெயர் ராஜசிம்மன்
- காஞ்சி கைலாசநாதர் ஆலயம் ராஜசிம்மன் கட்டியது.
- ராஜசிம்மன் மகன் பெயர் இரண்டாம் பரமேஸ்வரன்.
- சிம்ம விஷ்ணு தொடங்கிய பல்லவ வம்சம் இரண்டாம் பரமேஸ்வரனுடன் நிறைவுற்றது.
- காஞ்சி வைகுந்தப் பெருமாள் கோயிலைக் கட்டியவன் இரண்டாம் நந்திவர்மன்.
- காஞ்சி வைகுந்தப் பெருமாள் கோயிலைக் கட்டியவன் இரண்டாம் பரமேஸ்வரன் என்பாரும் உண்டு.
- இரண்டாம் நந்திவர்மன் மகனான தந்தி வர்மன் ராஷ்டிரகூட மன்னன் துருவனிடம் தோற்றான்.
- மூன்றாம் நந்திவர்மன் (கி.பி. 825-850) மீது பாடப்பட்ட நூலே நந்திக் கலம்பகம்.
- மூன்றாம் நந்திவர்மன் 'தெள்ளாறு எறிந்த நந்திவர்மன்' எனப்பட்டான்.
- பல்லவர் கால ஓவியங்கள் காணப்படும் 'சித்தன்னவாசல்' புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது.
- பல்லவர்கள் காலத்தில் தண்டி என்ற புலவர் 'காவ்ய தரிசனம்' என்ற நூலை எழுதினார்.
- சித்தன்னவாசலிலுள்ள சமண சமய ஓவியங்கள் மகேந்திரவர்மன் காலத்தவை.
- புதுக்கோட்டைக்கு அருகிலுள்ள குடுமியான் மலையில் காணப்படும் பல்லவர் கால கல்வெட்டுகள் இசை பற்றியவை.
- மாமல்லபுரச் சிற்பங்களில் புகழ்பெற்றவை ஐந்து ரதங்கள், பகீரதன் தவம், ஒரு கல் யானை.
- பஞ்ச பாண்டவர் ரதங்கள் என்பவை ஒரு கல் சிற்றாலயங்கள்.
- கடைசி பல்லவ மன்னன் அபராஜித வர்மன்,
Chalukyas | சாளுக்கியர்கள்
- வாதாபியைத் தலைநகராகக் கொண்டு ஆண்டவர்கள் கீழைச் சாளுக்கியர்கள்.
- கல்யாணியைத் தலைநகராகக் கொண்டு ஆண்டவர்கள் மேலைச் சாளுக்கியர்கள்.
- கீழைச் சாளுக்கியர்களின் பிற்காலத் தலைநகரம் வெங்கி.
- கீழைச் சாளுக்கியர்கள் ஆண்ட காலம் கி.பி. 550-753.
- மேலைச் சாளுக்கியர்கள் ஆண்ட காலம் கி.பி. 793-1190.
- வாதாபிச் சாளுக்கியர்களில் புகழ்பெற்ற மன்னர் இரண்டாம் புலிகேசி. இரண்டாம் புலிகேசியின் அவைப் புலவர் ரவிகீர்த்தி...
- சாளுக்கியர் நாணயங்களில் பன்றிச் சின்னம் இடம்பெற்றிருந்ததால் அது 'வராகன்' எனப்பட்டது.