TNPSC History Important Notes சோழர் வரலாற்றுக் குறிப்புகள் | TNPSC Online Study
Chola Historical Notes. சோழர் வரலாற்றுக் குறிப்புகள் Notes in Tamil PDF for TNPSC. TNPSC History Important Notes சோழர் வரலாற்றுக் குறிப்புகள்.சோழர் வரலாற்றுக் குறிப்புகள் tnpsc pdf download. TNTET and TNPSC Important Notes Based on New Syllabus. TN Samacheer kalvi Guide. TNPSC History Important Notes சோழர் வரலாற்றுக் குறிப்புகள் Online Stusy. TNPSC Online Study.
Chola Historical Notes | சோழர் வரலாற்றுக் குறிப்புகள்
- பிற்கால சோழப் பேரரசை கி.பி. 846-ல் நிறுவியவர் விஜயாலய சோழர் 1
- பிற்கால சோழப் பேரரசின் தலைநகரம் தஞ்சாவூர்.
- பிற்கால சோழப் பேரரசர்களில் தலைசிறந்தவர் ராஜராஜசோழன்,
- திருப்புறம்பியப் போரில் விஜயாலயன் பல்லவர்களோடு இணைந்து பாண்டியர்களை தோற்கடித்தான்.
- இரண்டாம் திருப்புறம்பியப் போரில் விஜயாலயன் மகன் ஆதித்த சோழனால் கடைசி பல்லவ மன்னன் அபராஜித வர்மன் கொல்லப்பட்டான்.
- ஆதித்த சோழன் தன் கொங்கு வெற்றியின் நினைவாக சிதம்பரம் கோயிலுக்குப் பொன் வேயந்தான்.
- ஆதித்தனின் கோயில் பணிகளை திருப்புறம்பியம், திருவெறும்பூர் கோயில் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.
- ஆதித்த சோழனுக்குப் பின் முதலாம் பராந்தகன் அரியணை ஏறினான்.
- சிதம்பரம் கோயிலுக்கு பொன் வேய்ந்ததும் சிதம்பரத்துக்கு அருகே வீராணம் ஏரி வெட்டியதும் முதலாம் பராந்தகனின் முக்கிய சாதனைகள்.
- முதலாம் பராந்தகனுக்குப் பின் அரியணை ஏறிய கண்டர் ஆதித்தன் நாயன்மார்களில் ஒருவன் ஆவான்.
- கண்டர் ஆதித்தனுக்குப் பின் அரிஞ்சயனும் அவருக்குப் பின் சுந்தர சோழன் என்னும் இரண்டாம் பராந்தகனும் பட்டத்துக்கு வந்தனர்.
- இரண்டாம் பராந்தகன் ஆட்சிக் காலத்தில் அவரின் மூத்த மகன் ஆதித்த கரிகாலன். மர்மமான முறையில் கொல்லப்பட்டான்.
- சுந்தர சோழனுக்குப் பின் கண்டர் ஆதித்தர் மகனான மதுராந்தகன் உத்தம சோழன் என்ற பெயரில் பட்டத்துக்கு வந்தான்.
- மதுராந்தகனுக்குப் பின் சுந்தர சோழனின் இரண்டாம் மகனான ராஜராஜன் கி.பி. 985-ல் அரியணை ஏறினான்.
- ராஜராஜன், சோழப் பேரரசை கிருஷ்ணா நதிக்கரை வரை விரிவுபடுத்தியதோடு இலங்கையின் வட பகுதியையும் வென்றான்.
- ராஜராஜனின் 25-ம் ஆட்சி ஆண்டான கி.பி. 1010-ல் கட்டி முடிக்கப்பட்டது. தஞ்சைப் பெருவுடையார் கோயில்
- ராஜராஜ சோழனின் இயற்பெயர். அருள்மொழிவர்மன்
- ராஜராஜன் சிதம்பரம் கோயிலில் சேமித்து வைக்கப்பட்டிருந்த ஓலைச் சுவடிகளிலிருந்து தேவாரத்தை மீட்டு ரும்பியாண்டார் நம்பிகளைக் கொண்டு தொகுத்தான்.
- ராஜராஜனுக்குப் பின் ஆட்சிக்கு வந்த முதலாம் ராஜேந்திரன் கங்கை மற்றும் கடாரம் பகுதிகளை வென்றான்.
- வங்க மன்னன் மகிபாலன், முதலாம் ராஜேந்திரனால் தோற்கடிக்கப்பட்டான்.
- முதலாம் ராஜேந்திரன் கி.பி. 1034-ல் சீனாவுக்கு ஒரு தூதுக் குழுவை அனுப்பினான். கங்கைகொண்ட சோழபுரத்தையும், அங்கு ஒரு கோயிலையும் நிர்மாணித்தார் முதலாம் ராஜேந்திரன்.
- முதலாம் ராஜேந்திரன் காலத்தில் பழுவேட்டரையர், கொடும்பாளூர் வேளிர் மோதல் உச்ச நிலையை அடைந்தது.
- முதலாம் ராஜேந்திரனுக்குப் பின் முதலாம் ராஜாதிராஜன் அரியணை ஏறினார்.
- மேலை சாளுக்கியரோடு நடந்த போரில் முதலாம் ராஜாதிராஜன் கொல்லப்பட்டான
- முதலாம் ராஜாதிராஜனுக்குப் பின் ஆட்சிக்கு வந்த இரண்டாம் ராஜேந்திரன் ஒன்பது ஆண்டுகள் ஆட்சி செய்தார்.
- கி.பி. 1063-ல் ஆட்சிக்கு வந்த வீரராஜேந்திரன் இலங்கையை மீண்டும் இலங்கை மன்னனிடமே ஒப்படைத்தான்.
- ராஜராஜேந்திரன் மறைவுக்குப் பின் கி.பி. 1070-ல் ஆட்சிக்கு வந்த முதலாம் குலோத்துங்க சோழன், சோழ சாளுக்கிய வம்சத்தின் முதல் அரசன்.
- முதலாம் குலோத்துங்க சோழன் 'சுங்கம் தவிர்த்த சோழன்) என்று அழைக்கப் O படுகிறாள்.
- முதலாம் குலோத்துங்க சோழனுக்குப் பின் விக்கிரம சோழன் ஆட்சிக்கு வந்தான்.
- விக்கிரம சோழனின் மகன் இரண்டாம் குலோத்துங்கன் வைணவர்களால் 'கிருமி கண்ட சோழன்' என்று அழைக்கப்பட்டான்.
- இரண்டாம் குலோத்துங்கன் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள கோவிந்த பெருமாள் சிலையை அப்புறப்படுத்தினான்.
- குலோத்துங்கன், விக்கிரமன், ராஜராஜன் ஆகிய மூவர் மீது ஒட்டக்கூத்தரால் பாடப்பட்ட நூல் மூவர் உலா)
- ராமானுஜரை துன்புறுத்திய சோழ மன்னன் இரண்டாம் குலோத்துங்கன் என்பர் சில சரித்திர ஆசிரியர்கள்.
- ராமானுஜரை துன்புறுத்திய சோழ மன்னன் ஆதிராஜேந்திரனாகவோ அல்லது வீரராஜேந்திரனாகவோ இருக்கலாம் என்கிறார் நீலகண்ட சாஸ்திரி,
- இறந்த சோழ மன்னர்களின் உடலின் மீது பள்ளிப் படைக் கோயில்கள் எழுப்புவது சோழர் கால வழக்கமாக இருந்தது.
- ராஜராஜன் காலத்தில் தஞ்சை நகரின் உட்பகுதி 'உள்ளாலை' என்றும் வெளிப் பகுதி 'புறம்பாடி' என்றும் அழைக்கப்பட்டது.
- சோழர் படைகளில் 'கைக்கோளப் படை என்னும் படை முக்கிய பங்கு ஆற்றியது.
- சோழர்களின் 'வேளைக்காரர் படை'பாண்டியரின் 'ஆபத்துதவிகள்' போல அரசரை அருகிலிருந்து காத்தனர்.
- சிறந்த அரசு சேவையைப் பாராட்டி பிரம்மாதிராயர், மாராயர் ஆகிய பட்டங்கள் வழங்கப்பட்டன.
- அரையன். பேரரையன் போன்ற விருதுகள் கலை வல்லுநர்களுக்கு வழங்கப் பட்டன.
- அதிகாரிகள் பெருந்தனம், சிறுந்தனம் என இருவகைப்பட்டனர்.
- ஓலைகளை எழுதிய அலுவலர் 'திருமந்திர ஓலை' என்றும் அதை சரிபார்த்தவர் 'ஓலை நாயகம்' என்றும் அழைக்கப்பட்டனர்.
- அரசரிடம் விண்ணப்பித்தோருக்கும் அரசருக்கும் இணைப்பாக இருந்த அதிகாரி 'நடுவிருக்கை' எனப்பட்டார்.
- அரசரின் கடிதத்தை கல்வெட்டில் வடித்தோருக்கு 'முகவெட்டி' என்று பெயர்.
- சோழர் நிர்வாகத்தின் அடிப்படை அலகு ஊர் அல்லது கிராமம்.
- பல ஊர் சேர்ந்த பகுதிக்கு கூற்றம் என்று பெயர்.
- பல கூற்றங்கள் சேர்ந்தது 'வள நாடு என்றும் பல வள நாடுகள் சேர்ந்தது மண்டலம்' என்றும் பெயர்பெற்றன.
- ராஜராஜ சோழன் காலத்தில் ஒன்பது மண்டலங்கள் இருந்தன.
- ஜெயங்கொண்ட மண்டலம் என்றழைக்கப்பட்ட தொண்டை நாட்டில் வள நாடு 'நாடு' என்றும், கூற்றம் 'கோட்டம்' என்றும் அழைக்கப்பட்டது.
- கிராம சபை உறுப்பினர்கள் குடவோலை முறையால் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
- நில வரி வசூவித்த அமைப்புக்கு 'புரவுவரித் திணைக் களம்' என்று பெயர்.
- கிராம சபை எடுக்கும் முடிவுகளை நிறைவேற்றும் சுழகங்களாக 'வாரியங்கள்' செயல்பட்டன.
- ஏரி வாரியம், தோட்ட வாரியம், பஞ்ச வாரியம், பொன் வாரியம் எனப் பல வாரியங்கள் செயல்பட்டன.
- வாரிய உறுப்பினர்கள் ஊதியமின்றி பணியாற்றினர்.
- சோழர் காலத்தில் ஜாதிப் பிரிவுகள் வலங்கை, இடங்கை என இரு வகைப்பட்டன.
- முதலாம் குலோத்துங்கன் காலத்தில் தஞ்சை மாவட்டம் பாபநாசம் என்ற ஊரில் நடைபெற்ற கலவரம் குறித்து ஸ்ரீரங்கத்தில் உள்ள கல்வெட்டு குறிப்பிடுகிறது.
- விக்கிரம சோழன் ஆட்சிக் காலத்தில் கி.பி. 1131-ம் ஆண்டு பெரும் பஞ்சம் ஏற்பட்டது.
- தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலும், கங்கை கொண்ட சோழபுரக் கோயிலும் UNESCO HERITAGE பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
பாண்டியர் ஆட்சி
- களப்பிரர்களை வெற்றிகொண்டு பிற்கால பாண்டியர் ஆட்சியை கி.பி. 575-ல் கடுங்கோன் என்ற பாண்டிய மன்னன் நிறுவினான்.
- கடுங்கோன் முதல் வீரபாண்டியன் வரை (கி.பி. 1341) சுமார் 800 ஆண்டுகள் ஆண்ட பிற்கால பாண்டியர்கள் 32 பேர்,
- பிற்கால பாண்டியர்களை பல்லவர் கால பாண்டியர்கள் (10 பேர்) சோழர் கால பாண்டியர்கள் (16 பேர்). பாண்டிய பேரரசர்கள் (6 பேர்) என மூன்று பட்டியல்களில் அடக்கலாம்.
- மாறவர்மன் அரிகேசரி (கி.பி. 640-690) என்ற பாண்டிய மன்னனை திருஞானசம்பந்தர் சமணத்திலிருந்து சைவத்துக்கு மாற்றினார்.
- இரண்டாம் நந்திவர்மனை தோற்கடித்த பாண்டிய மன்னன் அரிகேசரி பராங்குசன்.
- பராங்குசன் கங்கர்களை வென்று கங்கை இளவரசி கூசுந்தரியை மணந்ததை சீவரமங்கலம் செப்பேடு தெரிவிக்கிறது.
- பல்லவர் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்த பாண்டிய மன்னன் முதலாம் வரகுண பாண்டியன் (கி.பி. 768-815).
- திருப்பரங்குன்றம் கழுகுமலைக் குடைவரைக் கோயில்கள் முதலாம் வரகுண பாண்டியன் காலத்தவை.
- பல்லவர்களால் கொள்ளிடக் கரையான திருப்புறம்பியத்தில் நோற்கடிக்கப்பட்ட
- பாண்டிய மன்னன் ஸ்ரீ மாறன் ஸ்ரீ வல்லபன்,
- கடுங்கோள் பாண்டிய மரபில் கடைசி மன்னன் பராந்தகப் பாண்டியன்.
- முதலாம் சுந்தர பாண்டியன் மூன்றாம் ராஜராஜனை வெற்றிகொண்டான் (கி.பி.1216-1239),
- இரண்டாம் சுந்தர பாண்டியன் சோழ மன்னன் மூன்றாம் ராஜேந்திரனால் தோற்கடிக்கப்பட்டான்.
- மூன்றாம் சுந்தர பாண்டியன் மூன்றாம் ராஜேந்திரனை தோற்கடித்தான்.
- மூன்றாம் சுந்தர பாண்டியன் மதுரை கோயிலின் கிழக்கு கோபுரத்தை கட்டியதோடு, திருவரங்கம் கோயில் விமானத்துக்குப் பொன் வேய்ந்தான்.
- குலசேகர பாண்டியன் காலத்தில் (கி.பி. 1266.1310) வெனிஸ் நகரப் பயணி பாண்டிய நாட்டுக்கு வருகை தந்தார்.
- குலசேகர பாண்டியன் காலத்துக்குப் பின் குலசேகரனின் புதல்வர்கள் நான்காம் சுந்தர பாண்டியனும் வீர பாண்டியனும் அரியணைக்குப் போட்டியிட்டனர்.
- மாலிக்காபூர் உதவியோடு நான்காம் சுந்தர பாண்டியன் கி.பி. 1303-ல் அரியணை ஏறினார். கி.பி. 1310-ல் குலசேகரப் பாண்டியன் கொல்லப்பட்ட பின்பு அரியணை ஏதிய வீரபாண்டியனே கடைசி பாண்டிய மன்னன்.