TNPSC History Important Notes
டெல்லி சுல்தான்கள் ஆட்சி | Ruled by the Delhi Sultans | TNPSC Online Study
Ruled by the Delhi Sultans. டெல்லி சுல்தான்கள் ஆட்சி Notes in Tamil PDF for TNPSC. TNPSC History Important Notes டெல்லி சுல்தான்கள் ஆட்சி. டெல்லி சுல்தான்கள் ஆட்சி tnpsc pdf download. TNTET and TNPSC Important Notes Based on New Syllabus. TN Samacheer kalvi Guide. TNPSC History Important Notes டெல்லி சுல்தான்கள் ஆட்சி Online Stusy. TNPSC Online Study.
டெல்லி சுல்தான்கள் ஆட்சி
- இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லிம் மன்னர்: முகமது பின் காசிம்.
- முகமது பின் காசிம் கி.பி. 712-ல் சிந்து மீது படையெடுத்தார்.
- முகமது கஜினி இந்தியாவின் மீது கி.பி. 1000 முதல் 1025 வரை பதினேழு முறை படையெடுத்தார்.
- முகமது கஜினி கடைசியாகக் கொள்ளையிட்டது, குஜராத்திலுள்ள சோமநாதர் கோயில்,முகமது கஜினியோடு இந்தியா வந்த பெர்சிய அறிஞர்: அல்பெரூனி.)
- 1191-ல் இந்தியா மீது படையெடுத்த முகமது கோரியை, ராஜபுத்திர அரசர் பிரிதிவிராஜன் தோற்கடித்தார் (முதல் தரெயின் போர்)
- 1192ல் முகமது கோரி, பிரிதிவிராஜனைத் தோற்கடித்து முஸ்லிம்கள் ஆட்சியை நிறுவினார். (இரண்டாம் தரெயின் போர்.
- முகமது கோரி, இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பைத் தன் அடிமையான குத்புதீன் ஐபெக்கிடம் தந்தார்.
- குத்புதீன் ஐபெக்கின் வம்சம், அடிமை வம்சம் என்று அழைக்கப்படுகிறது.
- அடிமை வம்சத்தின் முதல் அரசரான குத்புதீன் ஐபெக் டெல்லியில் குதுப்மினாரைக் கட்டத் தொடங்கினார்,
- குத்புதீன் ஐபெசு, ஏழைகளுக்கு லட்ச லட்சமாக வாரி வழங்கியதால் 'லக்பக்ஷக்ஷ்' என அழைக்கப்பட்டார்.
- குத்புதீன் ஐபெக், போலோ விளையாடும்போது குதிரையிலிருந்து விழுந்து இறந்தார்.
- குத்புதீன் ஐபெக்குக்குப் பின் ஆட்சிக்கு வந்த இல்டுமிஷ், குதுப்மினாரைக் கட்டி முடித்தார்....
- துருக்கி கலிஃபாவின் அங்கீகாரம் பெற்ற முதல் டெல்லி சுல்தான்: இல்டுமிஷ்.
- இல்டுமிஷ் ஆட்சியின்போது மங்கோலியர் செங்கிஸ்கான் இந்தியாவின் மீது படையெடுத்தார்.
- இல்டுமிஷுக்குப்பின் அவரது மகள் சுல்தானா ரஸியா ஆட்சிக்கு வந்தார்.
- டெல்லியை ஆண்ட முதல் பெண்: சுல்தானா ரஸியா.
- சுல்தானா ரஸியாவுக்குப் பின் ஆட்சிக்கு வந்த அடிமை வம்ச மன்னர்களில் புகழ் பெற்றவர் கியாசுதீன் பால்பன்.
- மிகவும் கண்டிப்பு மன்னரான பால்பன் 'நாற்பதின்மர் குழு'வில் ஒருவராக இருந்தவர்.
- பால்பன் நாற்பதின்மர் குழு'வை ஒழித்தார். பால்பனின் கொள்கை 'இரும்பு ரத்தக் கொள்தை' எனப்படுகிறது.
- அடிமை வம்சத்து அரசர்கள் மாமலுக்குகள் என அழைக்கப்பட்டனர்.
- அடிமை வம்சத்துக்குப் பின் கில்ஜி வம்ச ஜலாலுதீன் கில்ஜி ஆட்சிக்கு வந்தார்.
- ஜலாலுதீன் கில்ஜியின் மருமகனான அலாவுதீன் கில்ஜி, தன் மாமனைக் கொன்று ஆட்சிக்கு வந்தார்.
- அலாவுதீன் கில்ஜி அங்காடிச் சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார்.
- அலாவுதீன் கில்ஜி, படை வீரர்களுக்கான வருகைப் பதிவேடு முறையை அறிமுகம் செய்தார்.
- படைக் குதிரைகளை அடையாளப்படுத்துவதற்காக அவற்றுக்கு சூடு போடும் முறையை அலாவுதீன் கில்ஜி அறிமுகம் செய்தார்.
- (அலாவுதீன் கிவ்ஜி தன்னை 'இந்தியாவின் அலெக்ஸாண்டர்' என்று அழைத்துக் கொண்டார்.
- சிரி நகரை நிர்மாணித்தவர்: அலாவுதீன் கில்ஜி. அவரின் அவையில் இருந்த பாரசீசுக் கவிஞர்: அமீர் குஸ்ரு.
- அமீர் குஸ்கு, 'இந்தியாவின் கிளி' என்றழைக்கப்பட்டார்.
- சிதார் இசைக் கருவி அமீர் குஸ்ருவால் கண்டுபிடிக்கப்பட்டது.
- அமீர் குஸ்ரு, 'லைலா மஜ்னு' கதையைப் பாரசீக மொழியில் எழுதினார்.
- கில்ஜி வம்சத்துக்குப் பின் துக்ளக் வம்சம் ஆட்சிக்கு வந்தது.
- டோக்கன் நாணய முறையை முகமது பின் துக்ளக் அறிமுகம் செய்தார்.
- முகமது பின் துக்ளக் தனது பேரரசின் தலைநகரை டெல்லியிலிருந்து தௌலதாபாத்துக்கும் பின் டெல்லிக்கும் மாற்றினார்.
- முகமது பின் துக்ளக்கின் தலைநகர் மாற்றல் நடவடிக்கையால் ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்தனர்
- முகமது பின் துக்ளக் அறிமுகம் செய்த செப்பு நாணய முறையும் தோல்வியில் முடிந்தது.
- முகமது பின் துக்ளக், காலத்தில் மொராக்கோ நாட்டுப் பயணி இபன் படூடா இந்தியாவுக்கு வருகை புரிந்தார்.
- முகமது பின் துக்ளக்குக்குப் பின் ஆட்சிக்கு வந்தவர்: பெரோஸ் ஷா துக்ளக். துக்ளக் வம்ச நஸ்ருதீன் முகமது ஆட்சிக் காலத்தில் தைமூர் இந்தியாவின் மீது படையெடுத்தார்.
- துகளக் வம்சத்துக்குப் பின் தைமூரின் பிரதிநிதியால் தோற்றுவிக்கப்பட்ட சையது வம்சத்தினர் ஆட்சிக்கு வந்தனர்.
- சையது வம்ச அரசர்கள், நபிகள் நாயகத்தின் நேரடி சந்ததியினர் என்று சொல்லப்படுகிறது.
- சையது வம்சத்துக்குப் பின் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்து லோடி வம்சத்தினர் ஆட்சிக்கு வந்தனர்.
- லோடி வம்சத்து முதல் அரசரான பகலுல் லோடி. டெல்லியை ஆண்ட முதல் ஆப்கானியற்
- பகலுல் லோடிக்குப் பின் வந்த சிக்கந்தர் லோடி ஆக்ராவை நிர்மாணித்தார்.
- லோடி வம்சத்துக் கடைசி அரசர்: இப்ராஹிம் லோடி.