TNPSC History Important Notes விஜயநகரப் பேரரசு | Vijayanagara Empire | TNPSC Online Study
Vijayanagara Empire. விஜயநகரப் பேரரசு Notes in Tamil PDF for TNPSC. TNPSC History Important Notes விஜயநகரப் பேரரசு. விஜயநகரப் பேரரசு tnpsc pdf download. TNTET and TNPSC Important Notes Based on New Syllabus. TN Samacheer kalvi Guide. TNPSC History Important Notes விஜயநகரப் பேரரசு Online Stusy. TNPSC Online Study.
Vijayanagara Empire | விஜயநகரப் பேரரசு
- இந்தியாவில் பரவிய முஸ்லிம் ஆட்சியின் ஆதிக்கத்திலிருந்து இந்து மதத்தை பாதுகாக்க ஹரிஹரர், புக்கர் என்ற சங்கம சகோதரர்கள் கி.பி. 1336-ல் துங்கபத்திரை ஆற்றங்கரையில் தங்கள் குருவான வித்யாரணயரின் அறிவுரைக்கேற்ப விஜய நகரப் பேரரசைத் தொடங்கினர்.
- விஜய நகரப் பேரரசு சங்கம, சாளுவ, துளுவ மற்றும் ஆரவீடு வம்சங்களால் ஆளப்பட்டது.
- துளுவ வம்சத்தின் புகழ்பெற்ற மன்னர் கிருஷ்ண தேவராயர்.
- கிருஷ்ண தேவராயரின் அவையை அலங்கரித்த எட்டு அறிஞர்கள்: அஷ்டதிக் கஜங்கள்.
- அஷ்டதிக் கஜங்களில் புகழ்பெற்றவர்கள் அல்லசானி பெத்தண்ணா, திம்மண்ணா.
- கிருஷ்ண தேவராயரின் புகழ்பெற்ற விகடகவி தெனாலிராமன்.
- கிருஷ்ண தேவராயர் ஆண்டாள் சரிதத்தை 'ஆமுக்தமல்யதா' என்ற பெயரில் தெலுங்கில் எழுதினார்.
- ஜாம்பவதி கல்யாணம், உஷா பரிணயம் என்ற சம்ஸ்கிருத நூல்களை எழுதினார்.
- விஜய நகரப் பேரரசு காலத்தில் நாயக்கர் முறையும் அய்யக்கர் முறையும் நிர்வாகத்தில் ஏற்படுத்தப்பட்டது
- விஜய நகரப் பேரரசு காலத்தில் இந்தியாவுக்கு வந்த ரஷ்யப் பயணி அத்னேஷியஸ்!(நிகடின்.)
- விஜய நகரப் பேரரசு காலத்தில் இந்தியாவுக்கு வந்த இத்தாலியப் பயணி நிகோலோ' கோண்டி.
- தமிழ்நாட்டில் விஜய நகரப் பேரரசின் ஆட்சியை ஏற்படுத்தியவர் குமாரகம்பணன்
- கிருஷ்ண தேவராயர் நிர்மாணித்த நகரம் நாகலாபுரம்.
- ஹசரா ராமசாமி ஆலயம், விட்டலாசாமி ஆலயம் ஆகியவை கிருஷ்ண தேவராயரால் கட்டப்பட்டன.
- கி.பி 1565-ல் நடைபெற்ற தலைக்கோட்டைப் போரில் விஜய நகரப் பேரரசு அழிவுற்றது.
- தலைக்கோட்டைப் போரின்போது விஜய நகரப் பேரரசை ஆண்டவர் கடைசி துளுவ மன்னரான சதாசிவராயர் ஆவார்.
- தலைக்கோட்டைப் போருக்குப்பின் சுமார் 100 ஆண்டுகள் விஜயநகர அரசு ஆரவீடு வம்சத்தினரால் அரசியல் செல்வாக்கின்றி ஆளப்பட்டது.
- விஜய நகரப் பேரரசின் சிதைவுகள் கர்நாடகத்திலுள்ள ஹம்பி நகரில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
பாமினி அரசு
- தென்னிந்தியாவில் ஹாசன் கங்கு பாமினியால் பாமினி அரசு 1347-ல் உருவானது.
- பாமினி அரசு பிற்காலத்தில் பெரார் (இமத்சாகி), பீதார் (பரித்சாகி),
- பீஜப்பூர் (அடில்சாகி), கோல்கொண்டா (குதுப்சாகி), அகமது நகர் (நிஜாம்சாகி) என ஐந்து சிற்றரசுகளாக உடைந்தது.
- பீஜப்பூர் சுல்தான் முகமது அடில் ஷாவின் கல்லறை: கோல்கும்பாஸ்.
- கோல்கும்பாஸ் கூரை, உலகின் பெரிய கூரைகளில் ஒன்று.
- ஹைதராபாத்தில் உள்ள சார்மினாரைக் கட்டியவர்கள்: குதுப் ஷாஹி அரசர்கள்.
- அகமத் நகரை ஆண்ட பெண்ணரசி சாந்த் பீவி, அக்பரை எதிர்த்துப் போரிட்டவர்.
- ஹைதராபாத் நகரம் 1549-ல் உருவாக்கப்பட்டது.
இந்தியாவில் மொகலாயர் ஆட்சி
- துருக்கி நாட்டைச் சேர்ந்தவரான பாபர், செங்கிஸ்கான் (தாய் வழி), தைமூர் (தந்தை வழி) ஆகிய இருவருக்கும் உறவினர் ஆவார்.
- பஞ்சாபைச் சேர்ந்த தௌலத்கான் லோடி மற்றும் இப்ராஹிம் லோடியின் மாமாவான ஆலம் கான் ஆகியோர் இந்தியா மீது படையெடுக்க பாபரை அழைத்தனர்.
- கி.பி. 1520ல் முதல் பானிபட் போரில் இப்ராஹிம் லோடியை வென்று மொகலாய வம்சத்தை பாபா. 1326
- பானிபட் போரில் பாபர் பின்பற்றிய துலகாமா போர் முறை அவர் வெற்றிக்குக் காரணமாக அமைந்தது.
- பீரங்கிப் படையும் வெடி மருந்தும் பாபரின் வெற்றியால் இந்தியாவில் பிரபலமடைந்தன.
- மேவார் ராஜபுத்திர அரசர் ராணாசங்காவை (சங்ராம் சிங்) பாபர், கன்வா போரில் (1527) தோற்கடித்தார்.
- மேதினிராய் என்பவர் பாபரால் சந்தேரி போரில் (1528) தோற்கடிக்கப்பட்டார்.
- இப்ராஹிம் லோடியின் சகோதரரான முகமது லோடியை பாபர், காக்ரா போரில் (1529) தோற்கடித்தார்.
- பாபரின் சுயசரிதை: பாபர் நாமா (துருக்கி மொழி).
- பாபருக்குப் பின் ஹுமாயூன் ஆட்சிக்கு வந்தார்.
- இரக்க மனமும், அதிக கேளிக்கை நாட்டமும் கொண்டவர் ஹுமாயூன்.
- ஹுமாயூன்,நாட்டை இழந்து தவித்தபோது அமரக்கோட்டையில்(அக்பர் பிறந்தார்.
- ஷெர்ஷாவிடம் தோற்று நாட்டை இழந்த ஹுமாயூன், பின்(இரான் அரசரின் உதவியுடன் நாட்டை மீட்டார்.
- ஹுமாயூன் தனது நூலகத்தின் மாடிப் படிகளில் இருந்து தவறி விழுந்து இறந்தார். ‘தவறி விழுவதற்கு வாய்ப்பு கிடைத்தால் அதைத் தவற விடாதவர் ஹுமாயூன்' என்று வரலாற்று ஆசிரியர் லேபூல் குறிப்பிட்டுள்ளார்.
- ஹுமாயூன் நாமா’ என்ற நூலை அவரது சகோதரி, குல்பதன் பேகம் எழுதினார்.
- தாய் மாமன் பைராம்கான் உதவியுடன் அக்பர் தனது 13-வது வயதில் ஆட்சிக்கு வந்தார்.
- இரண்டாம் பானிபட் போரில் (1556) அக்பர், ஹெமுவைத் தோற்கடித்தார். அக்பரின் அவையை அலங்கரித்த அறிஞர்கள், 'நவ ரத்தினங்கள்' என்று அழைக்கப் பட்டார்கள்.
- அக்பரின் அவையிலிருந்த அபுல் ஃபாசல், அக்பர் நாமா, அய்னி அக்பரி' என்ற நூல்களை எழுதினார்.
- அக்பரின் அவையிலிருந்த துளசிதாசர், இந்தியில் எழுதிய ராமாயணத்தின் பெயர்: 'ராமசரித மானஸ்'.
- அக்பரின் அவையிலிருந்த பாடகர்: தான்சேன்.
- அக்பரின் ராணுவ அமைச்சர்: ராஜா மான்சிங்.
- வருவாய்த் துறை அமைச்சர்: ராஜா தோடர்மால்.
- புத்திசாலி அமைச்சர் பீர்பால்.
- அக்பர் தோற்றுவித்த மதம்: தீன் இலாஹி (தெய்வீக நம்பிக்கை).
- இந்துக்கள் மீது விதிக்கப்பட்ட 'ஐசியா வரி'யை அக்பர் நீக்கினார்.
- அக்பருடைய ராணுவ நிர்வாக முறைக்கு 'மன் சப்தாரி முறை என்று பெயர்.
- அக்பர் தக்காண வெற்றியைக் கொண்டாட பதேபூர் சிக்ரி நகரை நிர்மாணித்து, 'புலந்த் 'தாவாஸா' எனும் வாசலை அமைத்தார்.
- அக்பருக்கு அடுத்து ஆட்சிக்கு வந்த(ஜஹாங்கீரின் இயற்பெயர்: சலீம். -
- ஜஹாங்கீரை மணந்த நூர்ஜஹானின் இயற்பெயர்: மெஹருன்னிஸா,
- ஐமாங்கீர் காலத்தில் ஓவியக் கலை உச்ச * நிலையில் இருந்தது.
- இந்தியாவிலேயே பெரிய மசூதி: ஷாஜ ஜஹான்) கட்டிய ஜூம்மா மசூதி.
- தாஜ்மகாலை வடிவமைத்தவர் உஸ்தாத் இசா என்ற கட்டடக் கலை வல்லுநர்,
- ஷாஜஹானின் மனைவி மும்தாஜின் இயற்பெயர்: அர்ஜுமான் பானுபேகம்.
- ஒளரங்கசீப்பின் இயற்பெயர்: ஆலம் தீர்.
- ஔரங்கசீப் உயிர் வாழும் புனிதர்' என அழைக்கப்பட்டார்.
- ஒன்பதாவது சீக்கிய குருவான தேஜ் பகதூர், ஒளரங்கசீப்பால் கொலை செய்யப் பட்டார்.
- ஔரங்கசீப் இசைக் கலையைத் தடை செய்தார்,
- ஒளரங்கசீப் முத்து மசூதி. பிபி - கா - மக்பாரா ஆகிய கட்டடங்களைக் கட்டினால், ஒளரங்கசீப், புசியா வரியை மீண்டும் இந்துக்கள் மீது விதித்தவர்.
- ஔரங்ககிய வரலாறான ‘ஆலம் கீர் நாமா' மிர்சா முகமது காசிம். என்பவரால் எழுதப்பட்டது
- இந்திரா பார்த்தசாரதி எழுதிய ஔரங்கசீப்' நாடகம் ஔரங்கசீப்பின் வாழ்க்கையைப் புதிய கோணத்தில் காட்டுகிறது.
- ஒளரங்கசீப் மறைவுக்குப்பின் (1707) 150 ஆண்டுகள் (18.57) மொகலாயப் பேரரசு 'பிற்கால மொகலாயர்கள்' என்றழைக்கப்படும் பன்னிரு மொகலாய மன்னர்களால் ஆளப்பட்டது.
- பிற்கால மொகலாயர்களில் கடைசி மன்னரான பகதூர் ஷா ஜாபர் 1857-ல் பிரிட்டிஷாரால் ரங்கூனுக்கு நாடு கடத்தப்பட்டார்.
மராட்டியர்கள்
- மராட்டிய மன்னன் சி ஜியின் தந்தை: ஷாஜி போன்ஸ்லே. தாயார்: ஜீஜா பாய்.
- சிவாஜியின் குரு: தாதாஜி கொண்டதேவ்.
- சிவாஜியின் மந்திரி சபைக்குப் பெயர்: அஷ்ட ப்ரதான்.
- மோடி என்பது மராட்டியர்களின் எழுத்து முறை.
- மராட்டியர் ஆட்சியில் வசூலிக்கப்பட்ட வரிகள்: சௌத், சாதேஷ்முகி.
- சிவாஜியைப் பிடிக்க ஒளரங்கசீப்பால் அனுப்பப்பட்டவர்: செயிஸ்டகான்.
- சிவாஜியைப் பிடிக்க பீஜப்பூர் சுல்தானால் அனுப்பப்பட்டவர்: அஃப்சல்கான்.
- முகலாயர்களின் நகரமான சூரத்தை, சிவாஜி இருமுறை கொள்ளையடித்தார்.
- சிவாஜியை ஒளரங்கசீப் சிறை வைத்த இடம்: ஆக்ரா,
சீக்கியர்கள்
- சீக்கிய மதத்தைத் தோற்றுவித்தவர்: குருநானக், இவரே முதல் குரு.
- குருநானக் பிறந்த ஊர்: பஞ்சாப்பில் உள்ள 'தால்வண்டி.7
- குருநானக், சீக்கியர்கள் ஒன்றாக உணவருந்தும் 'லங்கர்' (community kitchen) முறையை உருவாக்கினார்.
- குருமுகி எழுத்து முறையை உருவாக்கியவர்: 2-ம் குரு அங்கத்.
- அமிர்தசரஸில் பொற்கோயில் கட்டுவதற்கான நிலம் அக்பரால், +ஆவது சீக்கிய குருவான ராம்தாஸுக்குக் கொடுக்கப்பட்டது.
- சீக்கியர்களின் புனிதத் தலமான அமிர்தசரஸில், பொற்கோயிலைக் கட்டியவர்: 5-வது சீக்கிய குருவான அர்ஜுன் சிங்.
- சீக்கியர்களின் புனித நூலான ஆதிகிரந்தத்தைத் தொகுத்தவர்: 5-ம் குருவான அர்ஜுன் சிங்
- கல்சா எனும் ராணுவ அமைப்பை ஏற்படுத்தியவர்: 10-வது குருவான கோவிந்த் சிங்.
- ஐந்தாம் குருவான குரு அர்ஜுனி தேவ், மொகலாய மன்னர் ஜஹாங்கீரால் கொல்லப்பட்டார்.
- ஒன்பதாம் குருவான தேஜ் பகதூர், மொகலாய மன்னர் ஔரங்கசீப்பால் கொல்லப்பட்டார்.
- குரு கோவிந்த் சிங் ஆதிகிரந்தத்தை, 'குரு கிர்ந்த சாஹிப்' என்று பெயர் மாற்றி, அதுவே சீக்கியர்களின் நிரந்தர குரு என்று அறிவித்தார்.
- சீக்கியர்களின் உலக புகழ்பெற்ற வழிபாட்டுத் தலம்: பஞ்சாப் மாநிலத்தில்n அமிர்தசரஸிலுள்ள பொற்கோவில்,
- சீக்கியர்கள் நீளமான முடி (Kesh), மரச் சீப்பு (Kangha), இரும்புக் காப்பு (Kara), நீண்ட கால்சட்டை (Kachcha), குறு வாள் (Kirpan) ஆகிய ஐந்தையும் (5k's) ஒவ்வொரு சீக்கியரும் கொண்டிருப்பர்.