Videos

ஆளவந்த ஐரோப்பியர்கள் - TNPSC History Important Notes

TNPSC History Important Notes ஆளவந்த ஐரோப்பியர்கள்

Dominant Europeans. ஆளவந்த ஐரோப்பியர்கள் Notes in Tamil PDF for TNPSC. TNPSC History Important Notes ஆளவந்த ஐரோப்பியர்கள்.  ஆளவந்த ஐரோப்பியர்கள் tnpsc pdf download. TNTET and TNPSC Important Notes Based on New Syllabus. TN Samacheer kalvi Guide. TNPSC History Important Notes ஆளவந்த ஐரோப்பியர்கள் Online Stusy. TNPSC Online Study

ஆளவந்த ஐரோப்பியர்கள் - TNPSC History Important Notes


Dominant Europeans | ஆளவந்த ஐரோப்பியர்கள்

  • போர்ச்சுகீசியர்கள்) வணிகத்துக்காக இந்தியா வந்த முதல் ஐரோப்பியர்கள் போர்த்துகீசிய மாலுமி வாஸ்கோடகரமா. 1498-ல் இந்தியாவுக்குக் கடல் வழி கண்டறிந்தார்.
  • கள்ளிக்கோட்டை வந்த வாஸ்கோடகாமாவை வரவேற்ற அரசர்: (சாமோரின்.)
  • வாஸ்கோடகாமா 1501ல் கண்ணலூரி என்னும் இடத்தில் போர்ச்சுகீசிய வணிகத் தலத்தை நிறுவினார்.
  • கோழிக்கோடு, கொச்சின், கண்ணலூர் ஆகியவை போர்ச்சுகீசியர்களின் வர்த்தகத் தலங்களாக இருந்தன. 
  • பிரான்சிஸ்கோ.டி.அல்மேடா. இந்தியாவுக்கான முதல் போர்ச்சுகீசிய வைசிராய்)
  • இந்தியக் கடலைச் சுற்றி போர்ச்சுகீசிய ஆதிக்கத்தை ஏற்படுத்தவேண்டும் என்ற அல்மேடாவின் கொள்கை நீல நீர்க் கொள்கை) (Blue Water Policy).
  • இந்தியாவின் 2-வது போர்ச்சுகீசிய கவர்னரான அல்புகர்க் 1510-ல் கோவாவை போர்ச்சுகீசியரின் தலைமை இடமாக்கினார்.
  • நாகப்பட்டினத்தில் வணிகம் செய்ய போர்ச்சுகீசியருக்கு அனுமதி அளித்த நாயக்க மன்னர் தெப்ப நாயக்கர், 
  • தமிழகத்தின் போர்ச்சுகீசியக் குடியேற்றங்கள்: தூத்துக்குடி, நாகப்பட்டினம், சென்னை சாந்தோம்.
  • டச்சுக்காரர்கள் என்போர் ஹாலந்து நாட்டினர். 
  • டசசுக்காரர்கள் 1608-ல் தேவனாம்பட்டினத்தைக் கைப்பற்றினர்.
  • டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனி, 1616ல் நிறுவப்பட்டது. 
  • ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனி 1698-ல் நிறுவப்பட்டது.
  • ஆங்கிலேயர் இந்தியாவில் வணிகம் செய்ய அனுமதி தந்தவர். 
  • ஜஹாங்கீர். ஜஹாங்கீரிடம் அனுமதி பெற்ற ஆங்கில வணிகர்கள்: சர் தாமஸ் ரோ மற்றும் ஹாக்கின்ஸ்.
  • தரங்கம்பாடி 1620-ல் டேனிஷ் மக்களின் குடியேற்றமானது.
  • மெட்ராஸ் நகரம் பிரான்சிஸ்டே என்பவரால் உருவாக்கப்பட்டது.
  • செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டுமானம் 1639-ல் தொடங்கப்பட்டது.
  • செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் முதல் ஆளுநர்: ஆரன் பேக்கர்,
  • புனித டேவிட் கோட்டையை ஆங்கிலேயர் கடலூரில் கட்டினார்கள். 
  • பிரெஞ்சுக் குடியேற்றங்களுள் மிக முக்கியமானது: பாண்டிச்சேரி.
  • செயின்ட் லூயி கோட்டை, பாண்டிச்சேரியில் உள்ளது. 
  • பாண்டிச்சேரி பிரெஞ்சு ஆளுநர்களில் குறிப்பிடத்தக்கவர்: டுயூப்ளக்ஸ்.

Governor Generals | கவர்னர் ஜெனரல்கள் (1773-1858)

  • வாரன் ஹேஸ்டிங்ஸ், பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல். 
  • ஒழுங்கு முறைச் சட்டத்தின்படி 11773) வாரன் ஹேஸ்டிங்ஸ் பதவிக்கு வந்தார். 
  • இந்திய சிவில் சர்வீஸின் தந்தை  காரன்வாலிஸ் /
  • அமெரிக்க சுதந்திரப் போரில் தோற்றபின் இந்தியா வந்தவர்: காரன்வாலிஸ்.
  • திப்பு சுல்தானோடு ஸ்ரீரங்கபட்டின உடன்படிக்கை செய்து கொண்டவர்: காரன்வாலிஸ் R
  • மூன்றாம் மைசூர் போர் முடிவில் ஸ்ரீரங்கப்பட்டின உடன்படிக்கை ஏற்பட்டது. 
  • துணைப் படைத் திட்டம் கொண்டுவந்தவர்: வெல்லெஸ்லி. 
  • உடன்கட்டை ஏறும் வழக்கத்தை ஒழித்தவர்: வில்லியம் பெண்டிங்.
  • வில்லியம் பெண்டிங்கின் கவுன்சிலில் சட்ட உறுப்பினர்: மெக்காலே.
  • இந்திய தண்டனைச் சட்டம் மெக்காலேவால் எழுதப்பட்டது. 
  • மெக்காலே திட்டம் (1835), வில்லியம் பெண்டிங் காலத்தில் கொண்டுவரப்பட்டது. 
  • மெக்காலே திட்டப்படி பள்ளிகளில் ஆங்கிலம் பயிற்சி மொழியானது.
  • வில்லியம் பெண்டிங் காலத்தில், ஜெனரல் சலீமன் என்பவரால் தக்கர்கள் கூட்டம் ஒடுக்கப்பட்டது.
  • வில்லியம் பெண்டிங் காலத்தில் தாஜ்மகாலை இடிக்க முடிவு செய்யப்பட்டு பின் அது கைவிடப்பட்டது
  • டல்ஹௌஸி இந்தியாவில் முதல் ரயில் போக்குவரத்தை (பாம்பே-தானா) 1853ல்' தொடங்கினார்.
  • டல்ஹௌஸி காலத்தில் இந்தியாவின் முதல் அஞ்சல் தலை (கராத்தியில் 18:52 ல் வெளியிடப்பட்டது.
  • டல்ஹௌஸி தொண்டுவந்த திட்டங்களில் மிக முக்கியமானது: அவகாசியிலிக் கொள்கை
  • அவகாசியிலிக் கொள்கைப்படி வாரிசு இல்லாத அரசர்களின் நாடுகள் பிரிட்டிஷார் வசமாயின.
  • அவகாசியிலிக் கொள்கைப்படி பிடிக்கப்பட்டவை: ஜான்ஸி, சதாரா, நாக்பூர், 1932ல் முதல் இந்திய சுதந்திரப்போர் ஏற்பட அவகாசியிலிக் கொள்கையும் ஒரு
  • விதவை மறுமணச் சட்டம் டல்ஹௌஸி காலத்தில் கொண்டுவரப்பட்டது. இந்தியாவில் பொதுப்பணித் துறை டல்ஹௌஸியால் கொண்டுவரப்பட்டது.
  • டல்ஹௌஸி காலத்தில்தான் கல்விக்கான சார்லஸ் வுட் அறிக்கை வெளியானது.

Viceroys | வைசிராய்கள் (1858-1947)

  • முதல் இந்திய சுதந்திரப் போருக்குப் பின் 1858-ல் விக்டோரியா மகாராணியின் அறிக்கை வெளியானது.
  • விக்டோரியா மகாராணியின் அறிக்கை: இந்திய மகா சாசனம் (Magna carta of India). 
  • விக்டோரியா மகாராணியின் அறிக்கைப்படி இந்தியாவின் நிர்வாகம் நேரடியாக பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் வந்தது.
  • கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியில் இருந்த 'கவர்னர் ஜெனரல்' பதவி, மகாராணியின் அறிக்கைக்குப் பின் 'வைசிராய்' எனப்பட்டது.
  • வைசிராய் என்ற சொல்லுக்கு மகாராணியின் பிரதிநிதி என்பது பொருள். 
  • 1858-ல் கவர்னர் ஜெனரலாக இருந்த கானிங் பிரபு பிரிட்டிஷ் இந்தியாவின் முதல்) வைசிராயாகவும் பதவியேற்றார்.
  • வட்டார மொழிப் பத்திரிகைச் சட்டத்தைக் கொணர்ந்தவர் லிட்டன்.
  • இந்தியாவின் மக்கள்தொகை கணக்கெடுப்பு முதன்முதலாக(ரிப்பன் பிரபு காலத்தில் எடுக்கப்பட்டது.
  • இந்தியாவில் முதன்முதலாக உள்ளாட்சி மன்றங்களை நிறுவிய ரிப்பன் பிரபு. “உள்ளாட்சி அரசின் தந்தை எனப்படுகிறார்.
  • பிரிட்டிஷ் குற்றவாளிகளை இந்திய நீதிபதிகள் விசாரிக்க அதிகாரம் தரும் ‘இல்பர்ட் மசோதா'வை அறிமுகப்படுத்தியவர்: ரிப்பன் பிரபு. 
  • வட்டார மொழி பத்திரிகைச் சட்டத்தை நீக்கியவர்: ரிப்பன் பிரபு.
  • அகில இந்திய தேசிய காங்கிரஸ் தொடங்கப்பட்டபோது வைசிராயாக இருந்தவர்: டபரின் பிரபு. 
  • இந்தியாவில் படுகொலை செய்யப்பட்ட ஒரே வைசிராய்: மயோ பிரபு
  • வங்கப் பிரிவினையை ஏற்படுத்தியவர்: கர்சன் பிரபு.
  • தொல் பொருள் பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டு வந்தவர்: கர்சன் பிரபு.
  • இந்திய திட்ட நேரம் (IST) காசன் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. 
  • வங்கப் பிரிவினையை ரத்து செய்தவர்:  ஹார்டிஞ் பிரபு. 
  • ஹார்டிஞ் காலத்தில் (1911) இந்தியாவின் தலைநகர் கல்கத்தாவிலிருந்து டில்லிக்கு மாற்றப்பட்டது.
  • ஜாலியன் வாலாபாக் படுகொலையின்போது (1919) வைசிராயாக இருந்தவர்: லார்ட் செம்ஸ்ஃபோர்ட்,

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.