Videos

கவர்னர் ஜெனரல்கள் (1947-1950) - TNPSC History Important Notes

TNPSC History Important Notes கவர்னர் ஜெனரல்கள் (1947-1950)

கவர்னர் ஜெனரல்கள் (1947-1950) Notes in Tamil PDF for TNPSC. TNPSC History Important Notes கவர்னர் ஜெனரல்கள் (1947-1950).  கவர்னர் ஜெனரல்கள் (1947-1950) tnpsc pdf download. TNTET and TNPSC Important Notes Based on New Syllabus. TN Samacheer kalvi Guide. TNPSC History Important Notes கவர்னர் ஜெனரல்கள் (1947-1950)Online Stusy. TNPSC Online Study

கவர்னர் ஜெனரல்கள் (1947-1950) - TNPSC History Important Notes



 கவர்னர் ஜெனரல்கள் (1947-1950)

  • பிரிட்டிஷ் இந்தியாவின் கடைசி வைசிராயாகவும் சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகவும் இருந்தவர். (மெளன்ட் பேட்டன் பிரபு (1947-1948).
  • சுதந்திர இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்தவர்: ராஜாஜி.

சமூக, சமய விழிப்பு உணர்வு இயக்கங்கள்

  • பிரம்ம சமாஜம் (1828) - ராஜாராம் மோகன் ராய்.
  • பிரார்த்தன சமாஜம் (1867)- ஆத்மாராம் பாண்டுரங்.
  • சத்யசோதக் சமாஜம் (1873) - ஜோதிபாய் பூலே.
  • ஆரிய சமாஜம் (1875) - சுவாமி தயானந்த சரஸ்வதி. 
  • ராமகிருஷ்ணா மிஷன் (1897) சுவாமி விவேகானந்தர்.
  • தியசாபிக்ல சொசைட்டி (1875)ஜெனரல் ஆல்காட், மேடம் பிளாவெட்ஸ்கி. 
  • தியசாபிகல் சொசைட்டி 1882-ல் அடையாறுக்கு மாற்றப்பட்டது.
  • இந்திய சேவா சங்கம் (Servants of India Society- 1905) கோபால கிருஷ்ண கோகலே. 
  • பூனா சேவாசதன் (1909) - பண்டித ரமாபாய்.
  • சேவா சமிதி (1914)- ஹிருதயநாத் குன்ஸ்ரூ. 
  • ஒளவை இல்லம் டாக்டர் முத்துலட்சுமி.ரெட்டி


நவீன இந்தியாவின் கல்வி மற்றும் கலாசார மையங்கள்

  • காசி இந்து பல்கலைக்கழகம் - மதன்மோகன் மாளவியா.
  • அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் - சர். சையது அகமதுகான். * விஸ்வபாரதி பல்கலைக்கழகம் ரவீந்திரநாத் தாகூர்.
  • தக்கான் கல்விக் கழகம் - எம்.ஜி.ரானடே, அகர்கர்.
  • DAV பள்ளிகள் - லாலா லஜபதி ராய்.
  • கலாக்ஷேத்ரா - ருக்மணி தேவி அருண்டேல்.
  • பாரதிய வித்யாபவன் - கே.எம்.முன்ஷி.
  • கலாமண்டலம் - வள்ளத்தோள் நாராயண மேனன்.
  • ஜமியா மிலியா இஸ்லாமியா - ஜாகீர்ஹுசைன், ஹக்கீம் அஜ்மல்கான்.
  • ஆசியாட்டிக் சொசைட்டி வில்லியம் ஜோன்ஸ்.
  • சமரச சுத்த சன்மார்க்க சங்கம் - ராமலிங்க அடிகள்.


இந்திய தேசிய இயக்கம்

  • இந்திய தேசிய இயக்கம் 3 கட்டங்கள் கொண்டது. அவை, 1. மிதவாதிகள் காலம், 2. தீவிரவாதிகள் காலம். 3. காந்தி சகாப்தம்.


மிதவாதிகள் காலம் (1885-1905)

  • 1885-ல் இந்திய தேசிய காங்கிரஸ் அமைப்பை பம்பாயில் தொடங்கியவர்: ஆலன் ஆக்டேவியன் ஹ்யூம். இவர் ஓய்வுபெற்ற ஐ.சி.எஸ். அதிகாரி
  • இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தலைவர்: 2மேஷ் சந்திர பானர்ஜி (1885). 
  • இந்திய தேசிய காங்கிரஸின் முதல் கூட்டம் மும்பையில் 1885-ல் நடைபெற்றது. அதில் பங்கேற்ற 72 பேர், BRAVE- 72 எனப்படுவர்.
  • காங்கிரஸ் இயக்கத்தின் இரண்டாகிறாநாடு 188 கலகத்தாவில் நடைபெற்றது.
  • மிதவாதிகளின் தலைவர்: கோபால கிருஷ்ண கோகலே.
  • மகாத்மா காந்தியின் அரசியல் குரு கோகலே.
  • (கோகலே) இந்திய ஊழியர் சங்கத்தை நிறுவினார். 
  • 1887-ல் சென்னையில் நடைபெற்ற மூன்றாம் காங்கிரஸ் கூட்டத்தின் தலைவர் பத்ருதீன் தியாப்ஜி
  • காங்கிரஸ் மாநாட்டின் தலைவர் பதவி வகுத்த முதல் ஆங்கிலேயர் ஜார்ஜ் யூல் (1904)

தாதாபாய் நௌரோஜி

  • 'இந்தியாவின் முது பெரும் மனிதர்' எனப்படுபவர். காங்கிரஸ் இயக்கத்தின் இரண்டாவது மாநாட்டின் தலைவர். மூன்று காங்கிரஸ் மாநாடுகளுக்கு (1886, 1893, 1906) தலைவராக ருந்தவர். பிரிட்டிஷ் பாராளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர். சுய ராஜ்யம் என்ற சொல்லை முதன்முதலாகப் பயன்படுத்திய இந்தியர். ஆங்கிலேயரின் பொருளாதார சுரண்டல் பற்றி வறட்சிக் கொள்கையை (Drain Theory) வெளியிட்டவர்.
  • இவரது Poverty and UnBritish Rule in India-வில் இடம் பெற்றது. 
  • மிதவாதிகளின் கொள்கை PPP (Prayer, Petition, Protest) எனப்படும்.


தீவிரவாதிகள் காலம் (1905-1920)

  • இந்து-முஸ்லிம் பிரிவினை ஏற்படுத்தவேண்டி கர்சன் பிரபு 1905-ல் வங்காளத்தை இரண்டாகப் பிரித்தார். 1911-958.
  • வங்கப் பிரிவினைக்கு எதிராக சுதேசி இயக்கம் 1905-ல் தொடங்கப்பட்டது. 
  • 1907-ல் சூரத் மாநாட்டில் மிதவாதிகள், தீவிரவாதிகள் என காங்கிரஸ் இயக்கம் பிளவுபட்டது.
  • தீவிரவாதிகளின் தலைவர்: பால கங்காதர திலகர்.
  • கேசரி, மராட்டா ஆகிய இதழ்களை நடத்தியவர்: திலகர்."
  • தேசிய உணர்வு ஊட்டுவதற்காக கணேஷ சதுர்த்தி, சிவாஜி திருவிழாவை திலகர் கொண்டாடினார்.
  • சுய ராஜ்யம் எனது பிறப்புரிமை. அதை அடைந்தே தீருவேன்' என்பது திலகரின் முழக்கம்.
  • ஆங்கிலேயர்களால் திலகர் பர்மாவிலுள்ள மாண்ட்லேக்கு நாடு கடத்தப்பட்டார். 
  • லக்னோ மாநாட்டில் (1916 தீவிரவாதிகளும் மிதவாதிகளும் இணைந்தனர்.
  • 1917-ல் அன்னிபெசன்ட் காங்கிரஸின் முதல் பெண் தலைவரானார்.
  • 1919-ல் ஆங்கிலேயர் ரௌலட் சட்டத்தைக் கொண்டு வந்தனர். ரௌலட் சட்டப்படி தேசபக்தர்கள் விசாரணையின்றி கைது செய்யப்பட்டனர்.
  • சத்தியபால், சியாபுதீன் கிட்சுலு ஆகிய தேசபக்தர்களின் கைதுக்கு எதிராகப் பொதுமக்கள் அமிர்தசரஸிலுள்ள ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் (1919, ஏப்ரல் 13-ம் தேதி) கூட்டம் போட்டனர்.
  • ஜாலியன் வாலாபாக் கூட்டத்தினர் ஜெனரல் டயர் உத்தரவின்படி சரமாரியாக சுட்டுக் கொல்லப்பட்டனர். படுகொலை பற்றி ஹன்டர் கமிஷன் விசாரித்தது. ஹன்டர் கமிஷன் ஜெனரல் டயரின் செயலைப் புகழ்ந்தது.
  • ஜாலியன் வாலாபாக் படுகொலையைக் கண்டித்து, காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கினார்.
  • ஜாலியன் வாலாபாக் படுகொலைக்குக் காரணமான பஞ்சாப் ஆளுனர் மைக்கேல் ஓடயர், இந்திய தேசபக்தர் உத்தம் சிங்கரல் சிறிது காலத்துக்குப் பின் இங்கிலாந்தில் கொல்லப்பட்டார்.


காந்தி சகாப்தம் (1920-1947)

  • காந்தியடிகள் 1869, அக்டோபர் 2-ல் குஜராத்திலுள்ள போர்பந்தரில் பிறந்தார். காந்தியடிகளின் தந்தை: கரம்சந்த்; தாய்: புத்லி பாய்.
  • காந்திக்கு பெற்றோர் இட்ட பெயர்: மோகன்தாஸ் 
  • காந்தி. மனைவி பெயர்: கஸ்தூரிபாய்.
  • காந்தி லண்டனில் படித்து பாரிஸ்டர் பட்டம் பெற்றார். பம்பாயில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.
  • காந்தி, தென்னாப்பிரிக்காவில் நிற வெறிக்கு எதிராகப் போராடினார். 
  • தென்னாப்பிரிக்கா, 'காந்திஜியின் அரசியல் சோதனைச் சாலை' எனப்படுகிறது.
  • தென்னாப்பிரிக்காவில் காந்திஜி தொடங்கிய பண்ணை டால்ஸ்டாய் பண்ணை. தொடங்கிய காலனி ஃஃபீனிக்ஸ் காலனி'. தொடங்கிய அமைப்பு 'நேடல் இந்தியன் காங்கிரஸ்'. நடத்திய பத்திரிகை ‘இந்தியன் ஒபினியன்'.
  • காந்தியைக் கவர்ந்த மூன்று எழுத்தாளர்கள்: டால்ஸ்டாய், தாரோ, ஜான் ரஸ்கின்.
  • காந்திஜி, முதல் சத்யாகிரக போராட்டத்தை (1906) தென்னாப்பிரிக்காவில் நடத்தினார்.
  • 1915, ஜனவரி 9-ல் காந்திஜி தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பினார். காத்திஜி 1915-ல் சபர்மதி ஆஸ்ரமத்தை நிறுவினார்.
  • காந்திஜி, இந்தியா திரும்பிய தினமான ஜனவரி-9, வெளிநாடுவாழ் இந்தியர் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
  • காந்திஜி, இந்தியாவில் நடத்திய முதல் போராட்டம் 1917-ல் பீகாரில் நடத்திய/சம்பாரன் சத்யாகிரகம்.
  • 1918-ல் அகமதாபாத் மில் ஸ்டிரைக்கின்போது காந்திஜி தன் முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டார்.
  • காந்திஜி, 1918-ல்கேதா சத்யாகிரகத்தை, மேற்கொண்டார்.
  • காந்திஜி, முதல் அகில இந்தியப் போராட்டத்தை ரௌலட் சட்டத்தை எதிர்த்து 1919-ல் நடத்தினார்.
  • ஒத்துழையாமை இயக்கம் காந்திஜியால் 1920-ல் தொடங்கப்பட்டது. 
  • ஆங்கிலேயர் தந்த பட்டங்களை ஒத்துழையாமை இயக்கத்தின்போது தலைவர்கள் துறந்தனர்...
  • தென்னாப்பிரிக்காவில் ஆற்றிய மருத்துவ சேவைக்காக ஆங்கிலேயர் தனக்கு அளித்த 'கெய்சர் ஜஹிந்த்' பட்டத்தை காந்தி துறந்தார்
  • உயர் பதவி வகித்த இந்தியர்கள் ஒத்துழையாமை இயக்கத்தின்போது பதவி துறந்தனர்.
  • சுபாஷ் சந்திரபோஸ் ஐ.சி.எஸ். பதவியைத் துறந்தார்.
  • 1922ல் சௌரி சௌரா என்ற இடத்தில் நடந்த வன்முறையினால் காந்திஜி ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தினார்.
  • 1924 பெல்காம் (கர்நாடகம்) காங்கிரஸ் மாநாடுதான் மகாத்மா காந்தி தலைமையில் நடைபெற்ற ஒரே மாநாடு.
  • 1925ல் காங்கிரஸ் மாநாட்டின் தலைவரான சரோஜினி நாயுடுவே காங்கிரஸின் முதல் இந்தியப் பெண் தலைவர். / 1917 - அல்ஜியண்டம் அம்மயர்
  • முழு விடுதலைப் பிரகடனம் 1929-ல் லாகூர் காங்கிரஸ் மாநாட்டில்
  • ஜனவரி 26, 1930 -ஐ சுதந்திர தினமாகக் கொண்டாட லாகூர் காங்கிரஸ் மாநாட்டில் முடிவானது.
  • லாகூர் தீர்மானப்படி சுதந்திர தினமாகக் கொண்டாடப்பட்ட ஜனவரி 26-ஐ நினைவுகூரும் வண்ணமே பிற்காலத்தில் ஜனவரி 26 குடியரசு தினமாக ஆக்கப்பட்டது.
  • காந்தியடிகள் 1930-ல் சட்ட மறுப்பு இயக்கத்தைத் தொடங்கினார்.
  • உப்பு சத்யாகிரகம் (தண்டி யாத்திரை) சட்ட மறுப்பு இயக்கத்தின் ஓர் அங்கம்.
  • காந்தியடிகள் சபர்மதி ஆசிரமத்திலிருந்து தண்டிக்கு 231 மைல்கள் நடந்து சென்று உப்பு காய்ச்சினார்.
  • 1931-ல் காந்தி இர்வின் ஒப்பந்தத்தால், சட்ட மறுப்பு இயக்கம் கைவிடப் பட்டது.
  • லண்டனில் நடந்த இரண்டாம் வட்டமேஜை மாநாட்டில் (1931) காந்திஜி கலந்து கொண்டார். வெளியிடப்பட்டது
  • வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை காந்திஜி 1942ல் தொடங்கினார். 
  • வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகஸ்ட் புரட்சி என்றும் அழைக்கப்படுகிறது.
  • ஆகஸ்ட் புரட்சிக்கு காந்தி தந்த முழக்கம்: செய் அல்லது செத்துமடி 
  • காந்திஜி நடத்திய இதழ்கள்:யங் இந்தியா, நவஜீவன், ஹரிஜன். 
  • காந்திஜி, 1948 ஜனவரி 30-ம் தேதி (நாதுராம் கோட்ஸே என்பவனால் சுட்டுக் கொல்லப்பட்டா.
  • காந்திஜியின் கடைசி வாசகம்: ஹே ராம்! 
  • காந்திஜியின் நினைவுநாள் தியாகிகள் தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது...
  • காந்திஜியை முதன்முதலாக "தேசப் பிதா என்றழைத்தவர்: சுபாஷ் சந்திர போஸ். காந்திஜியின் சுயசரிதை: சத்திய சோதனை. அதை நவஜீவன் இதழில் தொடராக குஜராத்தி மொழியில் எழுதினார்.
  • சத்திய சோதனையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்: மகாதேவ் தேசாய்,
  • காந்திஜி சிறையில் கழித்த மொத்த நாட்கள்: 2,338. 
  • காந்திஜி அதிக நாட்கள் இருந்த சிறை: எரவாடா சிறை, பூனா.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.