TNPSC History Important Notes முழக்கங்கள்... முழங்கியவர்கள்
முழக்கங்கள்... முழங்கியவர்கள் Notes in Tamil PDF for TNPSC. TNPSC History Important Notes முழக்கங்கள்... முழங்கியவர்கள். முழக்கங்கள்... முழங்கியவர்கள் tnpsc pdf download. TNTET and TNPSC Important Notes Based on New Syllabus. TN Samacheer kalvi Guide. TNPSC History Important Notes முழக்கங்கள்... முழங்கியவர்கள் Online Stusy. TNPSC Online Study.
முழக்கங்கள்... முழங்கியவர்கள்
- செய் அல்லது செத்து மடி - காந்தி.
- கற்பி, ஒன்று சேர், புரட்சி செய் - அம்பேத்கர்.
- இந்தியா இந்தியர்களுக்கே - தயானந்த சரஸ்வதி
- வறுமையே வெளியேறு - இந்திரா காந்தி.
- சுதந்திரம் என் பிறப்புரிமை. அதை அடைந்தே தீருவேன்-திலகர்.
- டெல்லி சலோ - நேதாஜி.
- இன்குலாப் ஜிந்தாபாத் - பகத்சிங்.
- ரத்தத்தைக் கொடுங்கள். சுதந்திரம் தருகிறேன் - நேதாஜி.
- ஜெய் ஜகத் - வினோபா பாவே.
தேசபக்த புரட்சியாளர்கள்
- லாலா ஹர்தயாள் - சான் பிரான்சிஸ்கோவில் காதர் கட்சியை (Ghadr party) 1913-ல் துவக்கினார்.
- ஷியாம்ஜி கிருஷ்ணவர்மா லண்டனில் உள்ள இந்தியா ஹவுசிலிருந்து இந்திய விடுதலைக்குப் போராடிய புரட்சியாளர்.
- வ.வே.சு.ஐயர் வீர சாவர்க்கர் எழுதிய முதல் இந்திய சுதந்திரப் போர் பற்றிய மராத்திய நூலை war of Independence என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.
- சபாகர் சகோதரர்கள் (Chapakar Brothers) இந்தியாவின் முதல் அரசியல் படுகொலையான ராண்ட் படுகொலைக்குக் காரணமானவர்கள்
- சச்சின் சன்யால் - 'பண்டி ஜீவன்' என்ற இதழை நடத்தியவர். பசுவதி சரண் வோரா - Philosophy of Bomb என்ற புரட்சி நூலை எழுதியவர்.
- குதிராம் போஸ், புரஃபெல்ல சாக்கி - 1908-ல் முசாபர்பூர் ஜட்ஜ், கிங்ஸ்ஃபோர்ட்மீது வெடிகுண்டு வீசினர்.
- மதன்லால் திங்ரா - 1909-ல் லண்டனில் கானல் வில்லியம் கர்சன் வெய்லியை சுட்டுக் கொன்றார்.
- ராஷ் பிகாரி போஸ், சச்சின் சன்யால் - டெல்லியில் வைசிராய் ஹார்டிஞ் பிரபு மீது வெடிகுண்டு வீசினர் (டெல்லி சதி வழக்கு).
- ராம் பிரசாத் பிஸ்மில் நடைபெற்றது. 1925-ல் இவர் தலைமையில் ககோரி ரயில் கொள்ளை
- அஸஃபுல்லா ககோரி ரயில் கொள்ளையில் பங்கேற்றதற்காக ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்ட (முதல் முஸ்லிம்) புரட்சியாளர்.
- பகத்சிங், சுகதேவ், ராஜகுரு -லாலா லஜபதி ராய் மீது லத்தி தாக்குதல் நடத்திய சாண்டர்ஸ் என்ற போலீஸ்காரரை 1928, டிசம்பர் 17-ம் நாள் சுட்டுக் கொன்றனர் (லாகூர் சதி வழக்கு).
- பகத்சிங், படுகேஷ்வர் தத் 1929-ல் பாராளுமன்றத்தின் மீது வெடிகுண்டு வீசினர்.
- ஜதின்தாஸ் ஜெயில் கொடூரங்களை எதிர்த்து 63 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்த (1929) புரட்சியாளர்.
- முஸாபர் அகமது - 31 கம்யூனிஸ்டுகள் மீது தொடரப்பட்ட மீரட் சதி வழக்கில் (1929) நாடு கடத்தப்பட்டவர்.
- சூர்யாசென் சிட்டகாங் ஆயுதக் கிடங்கு புரட்சியை (1930). வழிநடத்தியவர்.
சுதந்திரப் போராட்டத்தில் பத்திரிகைகள்
- யங் இந்தியா - காந்திஜி.
- நியூ இந்தியா அன்னி பெசன்ட்,
- இந்தியா, விஜயா - பாரதியார்.
- கேசரி, மராட்டா -பால கங்காதர திலகர்.
- நேஷனல் ஹெரால்ட் ஜவஹர்லால் நேரு.
- இண்டிபெண்டன்ட் - மோதிலால் நேரு.
- பெங்காலி- சுரேந்திரநாத் பானர்ஜி.
- தி ஹிண்டு சுப்பிரமணிய ஐயர்.
- அல்ஹிலால் - அபுல்கலாம் ஆஸாத்.
- நவசக்தி, தேச பக்தன் - திரு.வி.கல்யாண சுந்தரனார்.
- ஞான பானு சுப்ரமணிய சிவா.
- பால பாரதி வ.வே.சு.ஐயர்.
- காமன் வீல் அன்னி பெசன்ட்.
இது, இவர்
- மூன்று ரத்தினங்களைப் போதித்தவர் மகாவீரர்,
- நான்கு உண்மைகளைப் போதித்தவர் புத்தர்.
- இக்தா முறையை அறிமுகப்படுத்தியவர் இல்டுமிஷ்.
- பட்டா முறையை அறிமுகப்படுத்தியவர் ஷெர்ஷா.
- Token Currency முறையை அறிமுகப்படுத்தியவர் முகமது பின் துக்ளக்.
- ஜசியா வரியை பிராமணர்களுக்கும் நீட்டித்தவர் பெரோஸ்ஷா துக்ளக்.
- இந்துக்கள் மீதான ஐசியா வரியை நீக்கியவர் அக்பர்.
- இந்துக்கள் மீது மீண்டும் ஐசியா வரியை விதித்தவர் ஔரங்கசீப்.
- தங்க நாணயங்களை வெளியிட்ட முதல் இந்திய மன்னர்கள் இந்தோ கிரேக்கர்.
- தூய்மையான தங்க நாணயங்களை வெளியிட்டவர்கள் குஷாணர்கள்.
- அதிக எண்ணிக்கையில் தங்க நாணயங்களை வெளியிட்டவர்கள் குப்தர்கள்.