இந்திய அரசியலமைப்பு வரலாறு - Indian constitution Important Notes | TNPSC Online Study
TNPSC Indian constitution Important Notes in Tamil. History of the Constitution of India. இந்திய அரசியலமைப்பு வரலாறு. Indian polity notes for tnpsc in tamil pdf. tnpsc indian constitution in tamil pdf. indian polity k.venkatesan pdf in tamil free download. indian polity by venkatesan pdf in tamil free download. tnpsc indian constitution questions in tamil pdf. TNPSC Tamil. TNPSc Group 2, 2A, 4 and VAO All Important Notes. TN Books NEW Download PDF.
இந்திய அரசியலமைப்பு வரலாறு
- முஸ்லிம்களுக்கு தனித் தொகுதிகள் - மின்டோ மார்லி சீர்திருத்தம் (1909).
- வைஸ்ராயின் ஆலோசனைக் குழுவில் ஓர் இந்திய உறுப்பினர் நியமனம் மின்டோ மார்லி சீர்திருத்தம்.
- வைஸ்ராய் ஆலோசனைக் குழுவில் இடம்பெற்ற முதல் இந்திய உறுப்பினர் எஸ்.பி.சின்ஹா.
- மாநிலங்களில் இரு அவைகள் கொண்ட சட்டசபை - மான்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தம் (1919).
- மாநில இரட்டை ஆட்சி’முறை (Dyarchy in provinces) மான்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தம். (மான்ட்போர்ட் சீர்திருத்தம்).
- இரட்டை ஆட்சிமுறையில் அதிகாரம் மிக்க துறைக்கு பிரிட்டிஷ் அமைச்சர்களும் குறைந்த அதிகாரம் உள்ள நியமிக்கப்பட்டார்கள். துறைகளுக்கு இந்திய அமைச்சர்களும்
- மான்ட்போர்ட் சீர்திருத்தம் அதிக பலன் அளிக்கவில்லை.
- மான்ட்போர்ட் சீர்திருத்தம் குறித்து ஆராய 1927-ல் சைமன் கமிஷன் அமைக்கப்பட்டது.
- சைமன் கமிஷனில் இந்திய உறுப்பினர்கள் இல்லாததால் அது இந்தியர்களால் புறக்கணிக்கப்பட்டது.
- இந்தியர்களுக்கு அரசியலமைப்பு எழுதும் ஆற்றல் இல்லை என்றார் லார்ட் பிர்ஹன்வுட்
- பிர்ஹன்வுட்டின் சவாலுக்கு எதிராக, 1928-ல் நேருவின் அறிக்கை வெளியிடப்பட்டது.
- நேரு அறிக்கை (1928) மோதிலால் நேருவால் தயாரிக்கப்பட்டது.
- நேரு அறிக்கையில் இந்தியாவுக்கு டொமினியன் அந்தஸ்து கோரப்பட்டது.
- டொமினியன் அந்தஸ்து என்பது பிரிட்டிஷ் மேலாதிக்கத்துக்கு உட்பட்ட சுயாட்சி.
- ஜவஹர்லால் நேரு, நேதாஜி போன்றோர் முழு விடுதலை கோரலாம் என்றார்கள்.
- முழு விடுதலைத் தீர்மானத்தை, 1929-ல் கொண்டு வரலாம் என்றார் காந்திஜி.
- லாகூர் காங்கிரஸ் மாநாட்டில் (1929) முழு விடுதலைத் தீர்மானம் நிறைவேறியது.
- இந்திய ஆட்சி அதிகாரம் குறித்து ஆராய லண்டனில் வட்டமேஜை மாநாடுகள் நடைபெற்றன.
- 1, 2, 3-ம் வட்டமேஜை மாநாடுகள் முறையே 1930, 1931, 1932-ல் நடைபெற்றன.
- காந்தியடிகள் இரண்டாம் வட்டமேஜை மாநாட்டில் கலந்துகொண்டார்.
- முதல், மூன்றாம் வட்டமேஜை மாநாடுகளை காங்கிரஸ் புறக்கணித்தது.
- மூன்று வட்டமேஜை மாநாடுகளிலும் கலந்துகொண்ட இந்தியத் தலைவர் டாக்டர் அம்பேத்கர்.
- 1932-ல் தாழ்த்தப்பட்டவர்களுக்கு பிரிட்டிஷ் அரசு தனித்தொகுதிகள் அறிவித்தது.
- தாழ்த்தப்பட்டோருக்கான தனித்தொகுதி அறிவிப்பு 'மெக்டொனால்ட் விருது' எனப்பட்டது.
- மெக்டொனால்ட் விருதை அறிவித்த பிரிட்டிஷ் பிரதமர், ராம்சே மெக்டொனால்ட்.
- மெக்டொனால்ட் விருது' இந்துக்களைப் பிரிக்கும் முயற்சி என்றார் காந்தி,
- மெக்டொனால்ட் விருதை எதிர்த்து காந்தியடிகள் உண்ணாவிரதம் இருந்தார்.
- காந்திஜிக்கும் அம்பேத்கருக்கும் இடையே ‘பூனா ஒப்பந்தம்' ஏற்பட்டது (1932).
- பூனா ஒப்பந்தப்படி காங்கிரஸ் தொகுதிகளிலேயே தாழ்த்தப்பட்டோர் போட்டியிட்டனர்.
- 1935-ம் ஆண்டுச் சட்டப்படி மாநிலங்களில் சுயாட்சி ஏற்பட்டது.
- 1935-ம் ஆண்டுச் சட்டப்படி மத்தியில் இரட்டை ஆட்சி ஏற்பட்டது.
- 1939-ல் இரண்டாம் உலகப்போர் தொடங்கியது.
- 1940-ல் ஆகஸ்ட் அறிக்கை வெளியிடப்பட்டது.
- ஆகஸ்ட் அறிக்கை, உலகப்போருக்குப் பின் இந்தியாவுக்கு அதிகாரம் வழங்கப்படும் என்றது.
- கிரிப்ஸ் தூதுக்குழு 1942-ல் இந்தியா வந்தது.
- கிரிப்ஸ் தூதுக்குழு இந்தியாவுக்கு டொமினியன் அந்தஸ்து வழங்கப்படும் என்றது.
- கிரிப்ஸ் தூதுக்குழு அறிக்கையை, 'திவாலாகும் வங்கியின் பின்தேதியிட்ட காசோலை' Post dated cheque in a failing bank) என்றார் காந்தியடிகள்.
- அமைச்சரவை தூதுக்குழு (1946) அறிவுரைப்படி இந்திய அரசியல் நிர்ணய சபை அமைக்கப்பட்டது.
- அமைச்சரவை தூதுக்குழுவின் தலைவராக இருந்தவர் சர் பெத்திக் லாரன்ஸ்.
- அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
- டாக்டர் அம்பேத்கர் மகாராஷ்ட்ராவிலிருந்து அரசியல் நிர்ணய சபைக்குத் தேர்வானார்.
- அரசியல் நிர்ணய சபையின் தற்காலிகத் தலைவராக இருந்தவர் சச்சிதானந்த சின்ஹா,
- அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் டிசம்பர் 9, 1946-ல் நடைபெற்றது.
- இந்திய விடுதலைச் சட்டம் ஜூலை 1, 1947-ல் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் நிறைவேறியது.
- அரசியல் நிர்ணய சபையின் நிரந்தரத் தலைவராக ராஜேந்திர பிரசாத தேர்ந்தெடுக்கப்பட்டார்
- அரசியலமைப்புக்கான குறிக்கோள் தீர்மானம் ஜனவரி 22, 1947-ல் நேருவால் முன்மொழியப்பட்டது.
- அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழுத் தலைவர் டாக்டர் அம்பேத்கர்.
- அரசியலமைப்புச் சட்டம் 1948 பிப்ரவரியில் தயாரானது.
- அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் நவம்பர் 26, 1949.
- அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாளே இந்திய சட்ட தினம்
- அரசியலமைப்புச் சட்டம் செயல்படுத்தப்பட்ட நாள் ஜனவரி 26, 1950.
- அரசியலமைப்புச் சட்டம் செயல்படுத்தப்பட்ட நாளே இந்திய குடியரசு தினம்.
- அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்கள் 299 பேர்.
- இரண்டாண்டுகள் 11 மாதம் 18 நாட்கள் அரசியல் அமைப்பு சபை கூடி விவாதித்து அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கியது.
- 1950 ஜனவரி 26-ம் நாள் இந்திய குடியரசு மலர்ந்த போது அரசியல் அமைப்பு சபை
- நாடாளுமன்றமாக மாறியது. அதன் தலைவர் இந்திய குடியரசுத் தலைவரானர்.
- 50 ஆண்டுகளுக்குப் பின் ஹெச்.என்.வெங்கடாசலய்யா தலைமையில் அரசியலமைப்புச் சட்ட செயல்பாடு பற்றி அறிய குழு அமைக்கப்பட்டது.