இந்திய அரசியலமைப்புச் சட்டம் - Indian constitution Important Notes | TNPSC Online Study
TNPSC Indian constitution Important Notes in Tamil. இந்திய அரசியலமைப்புச் சட்டம். Indian polity notes for tnpsc in tamil pdf. tnpsc indian constitution in tamil pdf. indian polity k.venkatesan pdf in tamil free download. indian polity by venkatesan pdf in tamil free download. tnpsc indian constitution questions in tamil pdf. TNPSC Tamil. TNPSc Group 2, 2A, 4 and VAO All Important Notes. TN Books NEW Download PDF.
இந்திய அரசியலமைப்புச் சட்டம்
- முகப்புரை (Preamble), 22 பகுதிகள் (Parts), 12 அட்டவணைகள் (schedules) கொண்டது.
- உலகின் மிகப் பெரிய அரசியலமைப்புச் சட்டம் இதுவே.
- இந்திய அரசியலமைப்புச் சட்டம் 395 விதிகள் (Articles) கொண்டது.
- 94 முறைகள் (2006 வரை) திருத்தப்பட்டுள்ளது.
- முகப்புரை இந்தியாவின் தன்மைகளைக் குறிப்பிடுகிறது.
- இந்தியா இறையாண்மையுள்ள (Sovereign), சமதர்மமுள்ள (Socialist), சமயச்சார்பற்ற (Secular), மக்களாட்சி (Democratic) - குடியரசு (Republic).
- இறையாண்மை என்பது இந்தியாவின் உள்நாட்டு, வெளிநாட்டு விஷயங்களில் பிற நாடுகள் இந்தியா பெற்றுள்ள சுதந்திரமான ஆற்றலைக் குறிக்கும்.
- ஏழை, பணக்காரர் வேறுபாடின்றி கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் அனைவரும் சமவாய்ப்பு பெறுவதே சமதர்மம்.
- அரசு எந்த மதத்தையும் சார்ந்ததல்ல என்பதே சமயச்சார்பின்மை.
- சமதர்மமுள்ள (Socialist), சமயச்சார்பற்ற (Secular) என்ற சொற்கள் 42ஆவது சட்டத் திருத்தத்தின் மூலம் நம் அரசியல் சட்டத்தில் சேர்க்கப்பட்டன.
- இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உலகின் பல்வேறு நாடுகளின் அரசியலமைப்புச் சட்டங்களிலிருந்து பெறப்பட்ட பகுதிகள் உள்ளன.