முக்கியமான பகுதிகள் - Indian constitution Important Notes | TNPSC Online Study
TNPSC Indian constitution Important Notes in Tamil. முக்கியமான பகுதிகள். Indian polity notes for tnpsc in tamil pdf. tnpsc indian constitution in tamil pdf. indian polity k.venkatesan pdf in tamil free download. indian polity by venkatesan pdf in tamil free download. tnpsc indian constitution questions in tamil pdf. TNPSC Tamil. TNPSc Group 2, 2A, 4 and VAO All Important Notes. TN Books NEW Download PDF.
முக்கியமான பகுதிகள்
- பகுதி I இந்திய அரசின் எல்லைப் பகுதிகள் (உறுப்பு 1-4).
- பகுதி II இந்திய குடியுரிமை (உறுப்பு 5-11).
- பகுதி III அடிப்படை உரிமைகள் (உறுப்பு 12-35).
- பகுதி IV அரசு நெறிமுறைக் கோட்பாடுகள் (உறப்பு 36-51,
- பகுதி IV A அடிப்படைக் கடமைகள் (உறுப்பு 51A).
- பகுதி V குடியரசுத் தலைவர், மத்திய அரசாங்கம், உச்ச நீதிமன்றம் (உறுப்பு 52-151).
- பகுதி VI ஆளுநர், மாநில அரசாங்கம், உயர் நீதிமன்றம் (உறுப்பு 152-237).
- பகுதி VII முதல் அட்டவணையில் இடம்பெற்றிருந்த PART B மாநிலங்கள் தொடர்பானது (உறுப்பு 238); 1956-ல் கொண்டுவரப்பட்ட ஏழாவது சட்ட திருத்தத்தின்படி நீக்கப்பட்டது. .
- பகுதி VIII யூனியன் பிரதேசங்கள் (உறுப்பு 239-242).
- பகுதி IX பஞ்சாயத்து ராஜ் (உறுப்பு 243–243O).
- பகுதி IX-A நகராட்சிகள் (உறுப்பு 243P 243ZG)
- பகுதி X பழங்குடியினர் பகுதிகள் (உறுப்பு 244-244A).
- பகுதி XI மத்திய மாநில உறவுகள் (உறுப்பு 245-263).
- பகுதி XII நிதி, சொத்து, ஒப்பந்தங்கள். உரிமை வழக்குகள் ஆகியவை (உறுப்பு 264-300A).
- பகுதி XIII இந்திய ஆட்சிப்பரப்புக்குள்ளாக வணிகம், பெருவணிகம், மற்றும் வணிகப் போக்குவரத்து தொடர்பு (உறுப்பு 301 307).
- பகுதி XIV மத்திய, மாநில அரசுப்பணிகள் தேர்வாணையங்கள் (உறுப்பு 308-323),
- பகுதி XV தேர்தல் (உறுப்பு 324-329).
- பகுதி XVI ஆங்கிலோ இந்தியர், பிற்பட்டோர் தாழ்த்தப்பட்டோர், பழங் குடியினருக்கான சிறப்பு சலுகைகள் (உறுப்பு 330-342).
- பகுதி XVII ஆட்சிமொழிகள் 343-351).
- பகுதி XVIII அவசரநிலைப் பிரகடளம் (உறுப்பு 352-360).
- பகுதி XX அரசியல் சட்டத் திருத்த முறைகள் (உறுப்பு 368).
- பகுதி XXI தற்காலிக, இடைக்கால சிறப்பு அதிகாரங்கள் (உறுப்பு 369-392).
- பகுதி XXII அரசியலமைப்புச் சட்டத்தின் தொடக்கம், நீக்கம், அதிகாரபூர்வ பனுவல் (உறுப்பு 393-395),
அரசமைப்புச் சட்டத்தின் பகுதிகளும் அவற்றின் நோக்கங்களும்
- இந்திய அரசியல் சட்ட முகவுரை இந்திய அரசியல் அமைப்பின் நோக்கத்தையும், நம்பிக்கையையும் பறைசாற்றுகிறது.
- அரசமைப்புச் சட்டம் பகுதி III-ல் இடம் பெற்றுள்ள அடிப்படை உரிமைகளின் முக்கிய நோக்கம், அரசரிங்கத்தின் எதேச்சாதிகாரத்தைக் கட்டுப்படுத்துவதாகும் (Limited Government).
- பகுதி IVல் இடம் பெற்றுள்ள அரசு நெறிமுறைக் கோட்பாடுகளின் முக்கிய நோக்கம், நல அரசை (Welfare State) உருவாக்குதலாகும்.
- பகுதி IV-A-ல் உள்ள அடிப்படை கடமைகளின் நோக்கம் குடிமக்களின் பொறுப்பு உணர்ச்சியை மேம்படுத்துவதாகும்.
- பகுதி IX-ல் புல்லிதழ் ஜனநாயகம் (Grassroot level Democracy) எனப்படும் அதிகார பரவலாக்கல் (Democratic Decentralization) என்ற கொள்கைப்படி உள்ளாட்சி மற்றும் நகராட்சிகளை உருவாக்குதல்.
எது எங்கிருந்து வந்தது
- அடிப்படை உரிமைகள் - யு.எஸ்.ஏ.
- நீதிப் புனராய்வு - யு.எஸ்.ஏ.
- அடிப்படைக் கடமைகள் - யு.எஸ்.எஸ்.ஆர்.
- அரசு நெறிமுறைக் கோட்பாடுகள் - அயர்லாந்து
- அவசர நிலைப் பிரகடனம் - - ஜெர்மனி.
- கூட்டாட்சி முறை முடிவி) - கனடா.
- பாராளுமன்ற ஆட்சிமுறை - இங்கிலாந்து.
- சட்டத்தின் ஆட்சி - இங்கிலாந்து.
- அதிகார பொதுப் பட்டியல் - ஆஸ்திரேலியா.
- அரசியல் சட்டத்திருத்த முறை - தென் ஆப்பிரிக்கா.
- ராஜ்யசபா நியமன எம்.பி-க்கள் - அயர்லாந்து.