Videos

Poverty threshold - Economics TNPSC Online Study

வறுமைக்கோடு - Economic Reform Advisory Committees | TNPSC - Online Study

Poverty threshold.வறுமைக்கோடு TNPSC Economics Questions in Tamil pdf.  (ECONOMY) வறுமைக்கோடு. TNPSC Economics Important Notes in Tamil for Group 2, Gr 2A, Gr 4, VAO Economy TN Start Board Syllabus Important Notes. tnpsc economics syllabus. Economics Online Test. TNPSC Economics study materials in Tamil medium and English Medium for Group 1, Group 2, Group 2A, Group 4 and VAO  and also State Competitive Exams like TNUSRB, TRB, TET, TNEB, etc. TNPSC Online Study also provided the Topic wise Previous Year TNPSC Economy Questions and also other exams for you. TN Samacheer kalvi Guide.

Poverty threshold | TNPSC - Online Study


வறுமைக்கோடு


  • இந்தியாவில் வறுமைக்கோடு, ஒருவர் நாளொன்றுக்கு பெறும் கலோரி அளவினால் தீர்மானிக்கப்படுகிறது.
  • நகர்ப்புறத்தில் நாளொன்றுக்கு 2,100 கலோரிகளுக்கு குறைவாகப் பெறுவோர் வறுமைக் *கோட்டுக்குக் கீழ் உள்ளோர் எனப்படுவர்.
  • கிராமப்புறத்தில் நாளொன்றுக்கு 2,400 கலோரிகளுக்கு குறைவாகப் பெறுவோர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளோர் எனப்படுவர்.
  • இந்தியாவில் வறுமைக்கோடு, கணக்கீட்டிற்கான முறை லக்தவாலா கமிட்டியின் பரிந்துரைப்படி அமைந்துள்ளது.
  • இந்தியாவில் வறுமைக்கோட்டிற்கு கீழே வசிக்கும் நபர்களை அதிகம் கொண்ட மாநிலம் பீகார்.

வேலை


  • அமைப்பு வேலையின்மை (Structural Unemployment) உற்பத்தி திறன் குறைவினால் வருவது.
  • வெளிப்படை வேலையின்மை (Open Unemployment) படித்த மற்றும் படிக்காத மக்களிடையே காணப்படும் வேலையின்மை
  • மறைமுக வேலையின்மை (Disguised Unemployment) உற்பத்திக்கு பங்களிப்பு செய்யாமல் ஒருவர் வேலையில் இருப்பது: அவரை நீக்கினாலும் உற்பத்தித் திறன் மாறாது.
  • பருவகால வேலையின்மை (Seasonal Unemployment) விவசாயத் துறையில் வருடம் முழுவதும் வேலை இருப்பதில்லை குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே இருக்கும்.
  • இடைக்கால் வேலையின்மை (interrmittent Unemployment) ஒருவர் ஒரு பணியில் இருந்துட மற்றொரு பணிக்கு மாறும்போது ஏற்படுகிறது.
  • உராய்வு வேலையின்மை (Frictional Unemployment) சந்தை நிலவர மாற்றத்தால் தேவை குறைவு மற்றும் புதிய தொழிலநுட்ப அறிமுகம் காரணமாக ஏற்படுவது.
  • அமைப்புச் சார்ந்த மற்றும் அமைப்புச் சாரா பணிகளில் இருப்பவர்கள் 39.7 கோடி
  • 2.8 கோடி பேர்கள் மட்டும் அமைப்புச் சார்ந்த பணியில் உள்ளனர்.
  • 23.7 கோடி பேர் விவசாயத் துறையில் பணியில் உள்ளனர்.
  • 2001-ம் ஆண்டு கணக்கெடுப்பிள்படி இந்தியாவில் மொத்தமுள்ள பணியாளர்கள் 40.2 கோடி
  • 31.3 கோடி பேர் முக்கிய பணிகளிலும் 8.9 கோடி பேர் விளிம்பு நிலை பணிகளிலும் உள்ளனர்.
  • அமைப்புச் சார்ந்த பணியில் உள்ளவர்களில் 17.8% பெண்கள், மொத்த பெண்கள் தொகையில் 25.6% பேர் பணியில் உள்ளனர்.

வறுமை ஒழிப்புத் திட்டங்கள்


  • ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம் (IRDP) 1978.
  • சுய வேலை வாய்ப்புக்கான கிராமப்புற இளைஞர்களுக்கான பயிற்சித் திட்டம் (TRYSEM) 1979.
  • தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் - 1980.
  • ஊரக பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம் (DWACRA) 1982.
  • ஊரக நிலமற்றோர் வேலை வாய்ப்பு உத்திரவாதத் திட்டம் - 1983.
  • இந்திரா அவாஸ் யோஜனா - 1985.
  • ஜவகர் ரோஜ்கார் யோஜனா -1989.
  • பிரதம மந்திரியின் ரோஜ்கார் யோஜனா-1993.
  • மில்லியன் கிணறுகள் திட்டம் 1996
  • கங்கா,கல்யான் யோஜனா 1997.
  • சுவர்ண ஜெயந்தி கிராம சுவராஜ்கர் யோஜனா 1999.
  • பாரத் நிர்மான் யோஜனா 2005.
  • தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதிச் சட்டம் 2006ம் ஆண்டு துவங்கப்பட்டது. கிராமப்புற தொழிலாளர்களுக்கு வருடத்திற்கு 100 நாள் வேலை வழங்குவது இதன் முக்கிய நோக்கம்.
  • தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டம் (MGNREGP) பிப்ரவரி 2, 2006-ம் ஆண்டு துவங்கப்பட்டது.
  • தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்துடன் SGRY, NFFWP திட்டங்கள் உள்வாங்கப்பட்டன.

மக்கள் தொகை


  • உலகில் மக்கள் தொகை மிகுந்த நாடு சீனா.
  • உலகில் மக்கள் தொகை மிகுந்த இரண்டாவது நாடு இந்தியா.
  • மால்தூஸின் கருத்துப்படி மக்கள்தொகைப் கம் பெருக்கல் விகிதத்தில் அதிகரிக்கிறது (Geometric Progression). உணவுப் பொருள் உற்பத்தி கூட்டல் விகிதத்தில், அதிகரிக்கிறது (Arthimatic Progression).
  • முதன்முதலில் இந்திய மக்கள்தொகை கணக்கெடுக்கப்பட்ட ஆண்டு 1872.
  • இந்தியாவின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 10 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறுகிறது.
  • 2011-ம் ஆண்டு எடுக்கப்பட்ட சென்சஸ் சுதந்திரத்துக்குப் பின் எடுக்கப்பட்ட 7-வது சென்சஸ் (1872-ல் இருந்து 15-வது சென்சஸ்)
  • இந்தியாவில் மக்கள் நெருக்கம் மிகுந்த மாநிலம் மேற்கு வங்காளம்.
  • இந்தியாவில் மக்கள் நெருக்கம் குறைந்த மாநிலம் அருணாசலப் பிரதேசம். (17)
  • யூனியன் பிரதேசங்களில் மக்கள் நெருக்கம் மிகுந்தது டெல்லி. (11,297)
  • இந்தியாவின் மக்கள் நெருக்கம்: ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 382 பேர் (2011 சென்சஸ்); 325 பேர் (2001 சென்சஸ்).

பாலின விகிதம்

  • 1000 ஆண்களுக்கு எவ்வளவு பெண்கள் உள்ளனர் என்பதே பாலின விகிதம்,
  • ஆண்களைவிட பெண்கள் அதிகமுள்ள மாநிலம் கேரளா. (பாலின விகிதம் - 1084) 
  • பாலின விகிதம் குறைவாக உள்ள மாநிலம் ஹரியானா பாலின விகிதம் - 877) 

எழுத்தறிவு விகிதம்


  • எழுத்தறிவு விகிதம் 7 வயதுக்கு மேல் கணக்கிடப்படுகிறது. இந்தியாவில் எழுத்தறிவு விகிதம் 74.04% (2011 சென்சஸ்); 64.83% (2001 சென்சஸ்).
  • எழுத்தறிவு விகிதத்தில் முதலிடம் பிடிக்கும் மாநிலம் கேரளா (93.91%)
  • எழுத்தறிவு விகிதத்தில் 2-வது இடத்தைப் பிடிப்பது லட்சத்தீவு (92.28%).
  • எழுத்தறிவு விகிதத்தில் 3-வது இடத்தைப் பிடிப்பது மிஸோரம் (91.58%).
  • 2011-ம் ஆண்டு சென்சஸ் படி தமிழ்நாடு எழுத்தறிவு விகிதம் 80.33%
  • குறைவான எழுத்தறிவு விகிதமுள்ள மாநிலங்கள் பீகார் (63.82%) மற்றும் அருணாச்சலப் பிரதேசம் (66.95%),

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.