உச்ச நீதிமன்ற அதிகாரங்கள் - Indian constitution Important Notes | TNPSC Online Study
TNPSC Indian constitution Important Notes in Tamil. உச்ச நீதிமன்ற அதிகாரங்கள் | Powers of the Supreme Court . Indian polity notes for tnpsc in tamil pdf. tnpsc indian constitution in tamil pdf. indian polity k.venkatesan pdf in tamil free download. indian polity by venkatesan pdf in tamil free download. tnpsc indian constitution questions in tamil pdf. TNPSC Tamil. TNPSc Group 2, 2A, 4 and VAO All Important Notes. TN Books NEW Download PDF.
உச்ச நீதிமன்ற அதிகாரங்கள் | Powers of the Supreme Court
- இந்தியாவிலேயே உச்சபட்ச நீதி அதிகாரம் கொண்ட அமைப்பு உச்ச நீதிமன்றமாகும்.
- உச்ச நீதிமன்றம் மத்திய மாநில அரசுகளுக்கு இடையேயான பிரச்னைகள் குறித்த வழக்குகளை விசாரிக்கின்றது.
- உச்ச நீதிமன்றத்தின் ஆள் ரையை (Jurisdiction) நான்கு வகைப்படும்.
- தனி ஆள் வரை (அ) முதலேற்பு ஆள் வரை
- மேல் முறையீட்டு ஆள் வரை
- நீதிப் பேராணை ஆள் வரை
- ஆலோசனை ஆள் வரை
- மத்திய, மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சனை குறித்த வழக்குகள், இரு மாநிலங்களுக்கு இடையேயான பிரச்னை குறித்த வழக்குகளை நீதிமன்றம் தனி ஆள் nவரை கீழ் விசாரிக்கிறது.
- இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படும்போது, உறுப்பு 32ன் கிழ் நீதிப் பேராணை கோரி அவர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகலாம்.
- முக்கிய சட்டசிக்கல்கள் குறித்து இந்திய குடியரசுத் தலைவர் கேட்கும்பட்சத்தில் உறுப்பு 143-ன் கீழ் உச்ச நீதிமன்றம் அவர்களுக்கு ஆலோசனை வழங்குகிறது.
- உச்ச நீதிமன்றம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் உணர்வை பாதுகாப்பதால் அதனை அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலன் என்கிறோம்.
- உச்ச நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளுக்கு தண்டனை வழங்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்துக்கே உண்டு. இதனால் உச்ச நீதிமனறம் மதிப்புறு நீதி மன்றம் எனப்படுகிறது.
- பாராளுமன்றம் கொண்டு வருகின்ற சட்டங்கள் அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரண்படாமல் உள்ளனவா என்பதை உச்ச நீதிமன்றம் பரீசிலிப்பதற்கு நீதித் துறை புனராய்வு (Judicial Review) என்று பெயர்.
- நிர்வாகத் துறையின் செயல்பாட்டு வேகம் மட்டுப்படும்போது உச்ச நீதிமன்றம் தலையிட்டு நிர்வாகத் துறையின் செயல்பாட்டை முடுக்குவதற்கு நீதித் துறை செயல்முனைப்பு வாதம் (Judicial Activism) என்று பெயர்.