பங்கு வர்த்தகம் - Economic Reform Advisory Committees | TNPSC - Online Study
Stock trading.பங்கு வர்த்தகம் TNPSC Economics Questions in Tamil pdf. (ECONOMY) பங்கு வர்த்தகம். TNPSC Economics Important Notes in Tamil for Group 2, Gr 2A, Gr 4, VAO Economy TN Start Board Syllabus Important Notes. tnpsc economics syllabus. Economics Online Test. TNPSC Economics study materials in Tamil medium and English Medium for Group 1, Group 2, Group 2A, Group 4 and VAO and also State Competitive Exams like TNUSRB, TRB, TET, TNEB, etc. TNPSC Online Study also provided the Topic wise Previous Year TNPSC Economy Questions and also other exams for you. TN Samacheer kalvi Guide.
பங்கு வர்த்தகம்
- ஒரு நிறுவனம் முதலீட்டை பெருக்கவும், தொழிலை விரிவு படுத்தவும் கடன் பத்திரம், பங்கு பத்திரங்களை வெளியிடுகிறது.
- ஒரு நிறுவனத்தின் கடன் பத்திரத்தை (Debentures) வாங்கி வைத்திருப்பவர்கள் அந்நிறுவனத்திற்கு கடன் ஈந்தவர் (Creditors) ஆவார்.
- ஒரு நிறுவனத்தின் பங்கு பத்திரத்தை வாங்கி வைத்திருப்பவர்கள் அந்நிறுவனத்திற்கு முதலாளிகளாகக் (Owners) கருதப்படுவர்.
- கடன் பத்திரம் வைத்திருப்பவர் ஆண்டு தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை வட்டியாகப் பெறுவர்.
- பங்கு தாரர், கம்பெனியின் லாப, நட்டத்துக்கு ஏற்றவாறு ஆண்டு தோறும் பலன் பெறுவார்.
- இந்தியாவில் பங்கு வர்த்தகத்தை நிர்வகிக்க 1992-ல் SEBI தொடங்கப்பட்டது.
- SEBI- Security Exchange Board of India.
- BSI, Nifty போன்றவை பங்கு வர்த்தகக் குறியீட்டெண்கள்.
- BSI Bombay Sensitive Index என்பது மும்பை பங்கு வர்த்தக நிறுவனத்தின் குறியீட்டு எண்.
- Nifty என்பது தேசியப் பங்கு வர்த்தக நிறுவனத்தின் குறியீட்டு எண்.
- Nifty - National Index Fifty.
- எந்த நிறுவனத்தின் பங்குகள் லாபத்தில் செல்கின்றனவோ/முன்னிலையில் உள்ளனவோ, அவை Blue Chip கம்பெனிகள் எனப்படும்.
- BSI, 200-க்கும் மேற்பட்ட Blue Chip கம்பெனிகளின் பங்குகளின் நிலைமையைப் பொறுத்து அமைவது.
- Nifty, முக்கியமான 30 Blue Chip கம்பெனிகளின் பங்குகளின் நிலைமையைப் பொறுத்து அமைவது.
- தேசிய பங்கு வர்த்தகத் நிறுவனமும் (NSI), மும்பையிலேயே உள்ளது.
- பங்கு வர்த்தக துறையில் மும்பையில் Dalal Street, அமெரிக்காவின் Wall Street இரண்டும் புகழ் பெற்றவை.
- பங்குச் சந்தையில் பங்குகளின் விலை குறையப்போவதாக எண்ணி பங்குகளை விற்த முயல்பவரை கிரடி' (Bear) என்பர்.
- பங்குச் சந்தையில் பங்குகளின் விலை ஏறப் போவதாக எண்ணி பங்குகளை வாங்கிக் குவிப்பவர்(காளை' (Bull) எனப்படுவர்.
- பங்குகளை உடனுக்குடன் வாங்கி விற்பவர் மான்' (Stag) எனப்படுவர்.
யூரோ கரன்ஸி
- ஐரோப்பிய யூனியன் நாடுகள் [மாஸ்டிரிக் ஒப்பந்தப்படி தங்களுக்கு ஒரே நாணய முறையை ஏற்படுத்த முடிவு செய்தனர்.
- ஐரோப்பியாவின் பொது நாணயமான யூரோ 2000-ல் புழக்கத்திற்கு வந்தது
- ஐரோப்பிய யூனியன் நாடுகளில் இங்கிலாந்து, டென்மார்க், சுவிட்சர்லாந்து ஆகியன பொது கரன்ஸி முறையில் சேரவில்லை. ★
உலக வங்கியும் பன்னாட்டு பண நிதியமும்
- உலக வங்கி, பன்னாட்டு பண நிதியம் ஆகிய இரண்டும் (பிரெட்டன் வுட் இரட்டையர்கள் என்று அழைக்கப்படுகின்றன.
- உலக வங்கி, பன்னாட்டு பண நிதியம் ஆகிய இரண்டும் பிரெட்டன் வுட் மாநாட்டு தீர்மானத்தின் படி (1945-4 ஆண்டு டிசம்பரில் தொடங்கப்பட்டன.
- உலக வங்கி, பன்னாட்டு பண நிதியம் ஆகியவற்றின் தலைமையகங்கள் வாஷிங்டனில் உள்ளன.
- உலகவங்கியில் 186 நாடுகளும், பன்னாட்டு பண நிதியத்தில் 185 நாடுகளும் உறுப்பு நாடுகளாகும்.
- உலக வங்கி நீண்ட கால கடன்களை வழங்கி ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகிறது
- உலகவங்கி IBRD, IDA, IFC, MIGA, ICSID என ஐந்து அங்கங்கள் கொண்டது.
- பன்னாட்டு பண நிதியம். ஒரு நாடு பொருளாதார சிக்கலில் இருக்கும்போது அந்த நாட்டுக்குகுறுகியகால கடவ ஆழங்கி அந்த நாட்டை மீட்டெடுக்கிறது.
- உலக வங்கி, பன்னாட்டு பண நிதியம் ஆகியவற்றின் நிதியாண்டு செப்டம்பர் மாதம் முதல் நாளில் தொடங்கும்.
- ஏதேனும் ஓர் உலக நாட்டின் பணத்திற்கு சர்வதேச சந்தையில் தேவை பெருகும் போது அந்தப் பணத்தை கடனாக தருவது உலக வங்கி. அந்தப் பணத்தை விற்பனை செய்வது பன்னாட்டு பண நிதியம் (Bank Lends and the Fund sells).
- பன்னாட்டு வணிக சமநிலையைப் பாதுகாப்பதும் உலக நாடுகளுக்கிடையே பண ஒத்துழைப்பை மேம்படுத்துவது ஆகியவை பன்னாட்டு பண நிதியத்தின் முக்கியப் பணிகள்.
- பன்னாட்டு பண திதியத்தின் நாணயம் அல்லது அதன் முதலீட்டு வளம் (Capital Resources) Special Drawing Rights எனப்படுகிறது.
- பன்னாட்டு பண நிதியத்தின் பணமான SDR ஐ 'காகிதத் தங்கம்' (Paper Gold) என்கிறோம்.
- பன்னாட்டு பண நிதியத்தின் ஒவ்வோர் உறுப்பு நாடும் தங்கள் ஒதுக்கீட்டுக்கு ஏற்ப பணம் அளித்து பன்னாட்டு நிதியத்தின் முதலீட்டு வளத்தை உருவாக்குகின்றன.
- பன்னாட்டு பண நிதியத்தில் அதிக ஒதுக்கீடு கொண்டிருக்கும் மூன்று நாடுகள் அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி.
- பன்னாட்டு பண நிதியத்தில் அதிக ஒதுக்கீடு கொண்டிருக்கும் நாடுகளில் இந்தியா 13 வது இடத்தில் உள்ளது.
- பன்னாட்டு பண நிதியத்தின் மொத்த ஒதுக்கீட்டில் இந்தியாவின் பங்களிப்பு 1.9%
- பன்னாட்டு பண நிதியத்தின் கொள்கை முடிவுகளில் வாக்களிக்கும் உரிமை அதன் உறுப்பு நாடுகளுக்கு அவை கொண்டுள்ள ஒதுக்கீட்டைப் பொருத்து அமைகிறது.
- பன்னாட்டு பண நிதியத்தின் உறுப்பு நாடுகள் தங்கள் ஒதுக்கீட்டிற்கான பணத்தை 25நிலைச் சொத்தாகவும் (Reserve assets) மீதத்தை தங்கள் நாட்டுப் பணமாகவும் வழங்கலாம்.
- ஒவ்வொரு நாடும் தான் செலுத்த வேண்டிய BOP (Balance Of Payment) க்கு தனது நாட்டு இருப்பில் உள்ள அந்நிய செலாவணி போக அதிகப்படியான பணத்தை பன்னாட்டு பண நிதியத்திடமிருந்து தங்கள் ஒதுக்கீட்டிற்கு ஏற்ப பெற்றுக்கொள்ளலாம்.
- பன்னாட்டு பண நிதியம் ஆண்டுதோறும் உலக போட்டி அறிக்கையை வெளியிடுகிறது.