TNPSC - GEOGRAPHY MOUNTAINS
Important Notes | TNPSC-TNTET Online Study
புவியியல் (GEOGRAPHY) | இந்திய மலைகள் (MOUNTAINS OF INDIA)
TNPSC - GEOGRAPHY MOUNTAINS OF INDIA Important Notes. TNPSC - TNTET Online Study, TNPSC Geography Group 1, Group 2, Group 4, VAO Important Notes. TNPSC History Gr 1, Gr 2, Gr 4, NAO, TNTET, SI, Police, Bank Po. Post Office, All Exams Important Points. TN Samacheer kalvi Guide .6th Tamil all in one Notes TNPSC 6th Tamil.
இந்திய மலைகள் (MOUNTAINS OF INDIA)
- உலகிலேயே மிக உயரமான மலை - இமயமலை.
- மிக உயர்ந்த சிகரம் - எவரெஸ்ட். உயரம் - 8848 மீட்டர்.
- உயர்ந்த இந்திய இமயமலைச் சிகரம் கஞ்சன் ஜங்கா.
- காட்வின் ஆஸ்டின் (K2) என்ற உயர்ந்த சிகரம் காரகோர மலையில் அமைந்துள்ளது.
- டென்சிங் நார்கே, எட்மண்ட் ஹிலாரி இருவரும் 1953-ம் ஆண்டு எவரெஸ்டில் ஏறினர்.
- எவரெஸ்ட் சிகரத்தை நேபாள நாட்டினர் சாகர்மாதா) என்று அழைக்கின்றனர்.
- எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்தியர் மன்மோகன்சிங் ஹோக்லி,
- எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் தமிழர் சந்தோஷ் குமார் (2010)
- ராஜஸ்தானிலுள்ள ஆரவல்லிதான் இந்தியாவில் மிகப் பழமையான மலை.
- விந்திய, சாத்புரா மலைகள் தென்னிந்தியாவின் வட எல்லைகளாக இருக்கின்றன.
- கிழக்குத் தொடர்ச்சி, மேற்குத் தொடர்ச்சி மலைகள் சந்திக்கும் இடம் நீலகிரி.
- இமயமலையில் உள்ள புனிதத் தலங்கள் ஹரித்வார். ரிஷிகேஷ்.
- நைனிடால், முசௌரி, டார்ஜிலிங் ஆகிய கோடை வாசஸ்தலங்கள் இமயமலையில் உள்ளன
இமயமலை (HIMALAYAS)
- 'டெத்திஸ்' என்ற கடலே கண்ட நகர்வின்போது உயர்ந்து இமயமலையானது.
- உலகிலுள்ள இளமையான மலைகளில் இமயமும் ஒன்று.
- இமயமலை 'மடிப்பு மலைகள்' வகையைச் சேர்ந்தது.
- காஷ்மீர் முதல் அருணாச்சல் வரை 2500 கி.மீ. நீளத்திற்கு பரவியுள்ளது
- ஹிமாலயா என்ற சொல்லுக்கு 'பனியின் உறைவிடம் என்பது பொருள்.
- இமயத்தின் அகவும் கிழக்கில் 150 கிழி ஆகவும் மேற்கில் 400 கி.மீ. ஆகவும்
- இமயத்தின் மூன்று பிரிவுகள்: ஹிமாத்ரி, ஹிமாச்சல், சிவாலிக்...
- எவரெஸ்ட் (8848 மீ) கஞ்சன் ஜங்கா, நங்கபர்வத், நந்தாதேவி போன்ற உயர்த்த சிகரங்களைக் கொண்டது ஹிமாத்திரி.
- ஹிமாதரியில் கங்கோத்ரி யமுனோத்ரி போன்ற பல பனியாறுகள் உற்பத்தியாகின்றன.
- ஜோஜிலா (காஷ்மீர்) சிப்கிலா (ஹிமாச்சல பிரதேஷ்) நாதுலா மற்றும் ஜெலப்லா (சிக்கிம்) போன்ற கணவாய்கள் ஹிமாத்ரியில் உள்ளன.
- மலையை நிலப்பகுதியோடு இணைக்கும் இயற்கையான வழிகளே கணவாய்கள்.
- ஹிமாத்ரியின் சராசரி உயரம் 6100 மீட்டர்.
- ஹிமாத்ரியில் முக்கிய கோடை வாழிடங்களும், புனித தலங்களும் உள்ளன.
- ஹிமாதரியிலுள்ள கோடை வாழிடங்கள்: சிம்லா (ஹிமாச்சல பிரதேசம்), முசௌரி, நைனிடால் (உத்தர்காண்ட்ட)
- ஹிமாத்ரியிலுள்ள புனித தலங்கள்: அமர்நாத், கேதர்நாத், பத்ரிநாத்.
- ஹிமாத்ரிக்கும் ஹிமாச்சலுக்குமிடையே அழகிய பள்ளத்தாக்குகளும் ஏரிகளும் உள்ளன.
- பள்ளத்தாக்குகள்: காஷ்மீர் பள்ளத்தாக்கு, குலு பள்ளத்தாக்கு.
- ஏரிகள்: தால் ஏரி, ஊலார் ஏரி.
- இமயத்தின் அடி மற்றும் தெற்கு பகுதியான 'சிவாலிக்'கின் சராசரி உயரம் 1000 மீட்டர்.
- சிவாலிக், ஹிமாச்சலுக்கு இடையே நீளவாக்கில் அமைந்த பள்ளத்தாக்குகள் 'டூன்' எனப்படும்.
- டூன்களில் முக்கியமான 'டேராடூன்', உத்தர்காண்ட் மாநிலத்தின் தலைநகராகும்.
- சிவாலிக் சரிவுகளில் அடர்ந்த காடுகள் உள்ளன.
- படையெடுப்புகளைத் தடுக்கும் இயற்கைத்தடையாகவும், பனிப்புயல் போன்றவற்றைத் தடுக்கும் புவியியல் தடையாகவும் உள்ளது.
- இமயத்தின் தொடர்ச்சியாக கிழக்கில் அமைந்த குன்றுகள் 'பூர்வாச்சல்' எனப்படும்.
- பூர்வாச்சல் தொடர் பட்கைபும், நாகா, லுசாய், காரோ, காசி, ஜெயந்தியா என ஆறு குன்றுகளைக் கொண்டது. .
- பட்கையும், நாகா, லுசாய் குன்றுகள் இந்தியாவை மியான்மரிலிருந்து பிரிக்கின்றன.
- காரோ, காசி, ஜெயந்தியா குன்றுகள் மேகாலாயா மாநிலத்தில் அமைந்துள்ளன.
- இமயத்திற்கு வடக்கே அமைந்த காரகோரம், லடாக், ஷஷ்கர் தொடர்கள் 'டிரான்ஸ் ஹிமாலயா' எனப்படும்
- காட்வின் ஆஸ்டின் எனப்படும் 8611 மீட்டர் உயரமுடைய K காரகோரத்தில் உள்ளது. இந்தியாவில் உயரமான பீடபூமியான லடாக் பீடபூமி காஷ்மீருக்கு வடகிழக்கில் உள்ளது.
- நீளமான பனியாறான சியாச்சின் காரகோரத்தில் உள்ளது. சியாச்சின் பகுதியே உலகிலேயே உயரமான போர்க்களம்.