TNPSC - GEOGRAPHY INDIAN RIVERS, இந்திய மாநிலங்கள் - சில சிறப்புகள் Important Notes | TNPSC-TNTET Online Study
புவியியல் (GEOGRAPHY) | இந்திய மாநிலங்கள் - சில சிறப்புகள், இந்திய நதிகள் (INDIAN RIVERS), இந்திய நதிக்கரை நகரங்கள், முக்கிய இந்திய ஏரிகள்
TNPSC - GEOGRAPHY Important Notes. TNPSC - TNTET Online Study, TNPSC Geography Group 1, Group 2, Group 4, VAO Important Notes. TNPSC History Gr 1, Gr 2, Gr 4, NAO, TNTET, SI, Police, Bank Po. Post Office, All Exams Important Points. TN Samacheer kalvi Guide .6th Tamil all in one Notes TNPSC 6th Tamil.
இந்திய மாநிலங்கள் - சில சிறப்புகள்
- மக்கள் தொகை அதிகம் கொண்ட இந்திய மாநிலம் உத்தரப் பிரதேசம்.
- பரப்பளவில் பெரிய மாநிலம் - ராஜஸ்தான்.
- பரப்பளவில் சிறிய மாநிலம் கோவா.
- நீண்ட கடற்கரை கொண்ட மாநிலம் - குஜராத்,
- குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலம் சித்திம்.
- தேக்கு, சந்தனம், காபி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் - கர்நாடகம்.
- குச்சுபுடி நடனம் - ஆந்திராவில் தோன்றியது.
- பாங்ரா நடனம் - பஞ்சாப் மாநிலத்துக்குரியது.
- ஆங்கிலத்தை ஆட்சிமொழியாகக் கொண்ட மாநிலம் - நாகாலாந்து.
- ஒரிஸ்ஸாவின் பழைய பெயர் கலிங்கம்.
- திரிபுராவின் ஆட்சி மொழி பெங்காலி.
- அஸ்ஸாம் மாநிலத்தின் பழைய பெயர் காமரூபம்
- இந்தியாவில் 28 வது மாநிலம் ஜார்கண்ட்
- இந்தியாவில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் மாநிலம் மத்தியப் பிரதேசம்.
- பரதம் தமிழ்நாட்டின் பாரம்பரிய நடனம்.
- இந்தியாவின் அரிசிக்கிண்ணம் என்று அழைக்கப்படுவது
- சத்தீஸ்கர் என்பதற்கு 36 கோட்டைகள் என்று பொருள்.. சத்தீஸ்கர்
- இக்கத் என்ற கைத்தறித் துணி தயாரிக்கப்படும் மாநிலம் ஒரிஸ்ஸா,
- இந்தியாவில் அதிக மாம்பழம் ஏற்றுமதி செய்யும் மாநிலம் ஆந்திர பிரதேசம்,
- இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் மாநிலம் கர்நாடகா.
இந்திய நதிகள் (INDIAN RIVERS)
- நதிகளிலேயே பெரியது, நீளமானது கங்கை.
- கங்கை 2008ல் இந்தியாவின் தேசிய நதியாக அறிவிக்கப்பட்டது.
- கங்கை நதி, இமயமலையில் உள்ள கங்கோத்ரியில் உற்பத்தியாகிறது.
- கோமதி,காக்ரா, கண்டகி, கோசி, யமுனா ஆகியவை கங்கையின் துணை நதிகள்.
- கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சந்திக்கும் திரிவேணி சங்கமம் அலகாபாத்தில் உள்ளது.
- பிரம்மபுத்திரா நதி, இமயமலையிலுள்ள மானசரோவர் ஏரியில் உற்பத்தி ஆகிறது.
- பிரம்மபுத்திரா, தனது மொத்த நீளத்தில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே இந்தியாவில் பாய்கிறது.
- பிரம்மபுத்திராவுக்கு திபெத்தில் சாங்போ (Tsangpo) என்று பெயர்.
- உலகிலேயே மிகப்பெரிய ஆற்றுத் தீவான மஜூலி, பிரம்மபுத்திராவில் உள்ளது.
- பிரம்மபுத்திரா, செம்மண் நிலமான அஸ்ஸாமில் பாய்வதால் சிவப்பு ஆ எனப்படுகிறது.
- ஜீலம், சினாப், ராவி, பியாஸ், சட்லெஜ் என்பவை சிந்து நதியின் துணை நதிகள்.
- சிந்துவின் துணை நதிகளில் சட்லெஜ் நதி மட்டுமே முழுமையாக இந்தியாவில் பாய்கிறது.
- ராஜஸ்தானுக்குத் தண்ணீர் வழங்கும் இந்திரா காந்தி கால்வாய், சட்லெஜ் நதியில் அமைந்துள்ளது..
- சட்லெஜ் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பக்ராநங்கல்தான் உயரமான அணை. இந்தியாவிலேயே
- இந்தியாவின் மிக நீளமான அணையான ஹிராகுட், மகாநதியின் குறுக்கே அமைந்துள்ளது.
- தட்சிண கங்கை என்றழைக்கப்படும் கோதாவரி நதி தென்னிந்தியாவில் ஓடும் நதிகளில் மிகப்பெரியது.,
- ஒக்கேனக்கல், சிவசமுத்திரம் ஆகிய அருவிகள் காவிரி ஆற்றில் அமைந்துள்ளன.
- 'மணலாறு' என்றழைக்கப்படுவது பாலாறு.
- தாமிரபரணியின் வேறு பெயர் பொருநை
- காவிரியின் இன்னொரு பெயர் பொன்னி.
இந்திய நதிக்கரை நகரங்கள்
- ஆக்ரா -யமுனா
- அலகாபாத் - யமுனா, கங்கா
- கொல்கத்தா - ஹூக்ளி
- கட்டாக் -மகாநதி
- டெல்லி -யமுனா
- ஜாம்ஷெட்பூர் -சுபர்ணரேகா
- ஹைதராபாத் -முஸி
- ஹரித்வார் -கங்கை
- ஜபல்பூர்-நர்மதா
- லக்னோ-கோமதி
- லூதியானா-சட்லஜ்
- நாசிக்-கோதாவரி
- பாட்னா-கங்கை
- ஸ்ரீநகர்-ஜீலம்
- சூரத்-தப்தி
- வாரணாசி-கங்கை
- ரிஷிகேஷ்-கங்கை
- அயோத்யா-சரயு
- விஜயவாடா-கிருஷ்ணா
- தஞ்சாவூர்-காவிரி
- மதுரை-வைகை
- திருநெல்வேலி-தாமிரபரணி
முக்கிய இந்திய ஏரிகள்
- ஊலார் -காஷ்மீர்
- சில்கா -ஒரிஸ்ஸா
- லோக்டாக் -மணிப்பூர்
- சாம்பார் -ராஜஸ்தான்
- தால் -ஜம்மு காஷ்மீர்
- ஹுசைன் சாகர் -ஆந்திரா
- புலிகாட் (பழவேற் காடு) -தமிழ் நாடு, ஆந்திரா
- வீராணம் -கடலூர்
- செம்பரம்பாக்கம் -வேலூர்
- காவேரிபாக்கம் -செங்கல்பட்டு
- பூண்டி -திருவள்ளூர்
- புழல் -திருவள்ளூர்
- வால்பாறை -கோவை
- பெருஞ்சாணி -கன்னியாகுமரி
- பேச்சிப்பாறை -கன்னியாகுமரி