TNPSC - GEOGRAPHY WIND
Important Notes | TNPSC-TNTET Online Study
புவியியல் (GEOGRAPHY) | காற்று (WIND)
TNPSC - GEOGRAPHY UNIVERSE WIND Important Notes. TNPSC - TNTET Online Study, TNPSC Geography Group 1, Group 2, Group 4, VAO Important Notes. TNPSC History Gr 1, Gr 2, Gr 4, NAO, TNTET, SI, Police, Bank Po. Post Office, All Exams Important Points. TN Samacheer kalvi Guide .6th Tamil all in one Notes TNPSC 6th Tamil.
காற்று (WIND)
- கோள் காற்று,பருவ காற்று, மாறும் காற்று என காற்று மூவகைப்படும்
- புவியின் வெவ்வேறு அட்சப்பகுதியில் ஏற்படும் வெப்ப மற்றும் அழுத்தமாற்றத்தின் காரணமாக வீசும் காற்று கோள் காற்று
- கோள் காற்று மூவகைப்படும். அவை, வியாபாரக்காற்று, மேல் காற்று, துருவ கீழ்காற்று
- துணை வெப்ப அதிக அழுத்தமண்டலத்தில் இருந்து டால்டிரம் நோக்கி வீசும் காற்றுகள் வியாபாரக்காற்றுகள் (Trade Winds)
- துணை வெப்ப அழுத்தமண்டலத்தில் இருந்து துணை துருவ மண்டலத்தை நோக்கி வீசும் காற்றுகள் மேல் காற்றுகள்.
Trade Winds என்ற சொல்லுக்கு 'வியாபாரக்காற்றுகள்' என்ற மொழிபெயர்ப்பு | பொருத்தமானதல்ல. Trade என்ற ஜெர்மானிய சொல்லுக்கு Track என்பது பொருள். Track Wind என்பது ஒரு குறிப்பிட்ட திசையில் வழி மாறாமல் வீசும் காற்று. எனவே, Trade Winds என்பதைத் தமிழில் 'வழிமாறாக் காற்று' என்பதே பொருத்தமானது என்பர் சிலர். பழங்காலம் முதல் இந்தக் காற்று கடல் வணிகத்துக்கு உதவி வருவதால் இதை 'வியாபாரக் காற்று' என்று அழைப்பதில் தவறில்லை என்பவரும் உண்டு.
- மேல் காற்றுகள் 40 டிகிரி அட்சம் முதல் 60 டிகிரி அட்சம் வரை அரைக் கோளங்களில் வீசுகின்றன.
- மேல் காற்றுகள் வீசும் அட்சத்தின் அடிப்படையில் அவை கர்ஜிக்கும் நாற்பதுகள், அதிகோப ஐம்பதுகள், அலறும் அறுபதுகள் என மூவகைப்படும்.
- துருவ கீழ்காற்றுகள் என்பவை அழுத்தம் மிக்க துருவப்பகுதியில் அழுத்தம் குறைந்த துணை துருவப்பகுதி நோக்கி வீசுபவை.
- பருவ காற்றுகள் என்பவை ஒரு குறிப்பிட்ட பருவத்தில், ஒரு குறிப்பிட்ட திசையில் வீசுபவை.
- தலக்காற்றும் சூறாவளிகளும் எதிர் சூறாவளிகளும் மாறும் காற்றுகள் எனப்படுகின்றன.
திசை மாறும் காற்றுகள்
- நகரும் வாயு (Air) காற்று (Wind) எனப்படுகிறது.
- அழுத்த வேறுபாடே காற்று வீசுவதற்கு முக்கிய காரணமாகும்.
- அதிக அழுத்த பகுதிக்கும் குறைந்த அழுத்த பகுதிக்கும் உள்ள சாய்மானம் அழுத்த வாட்டம்
- அழுத்த வாட்டத்தின் (Pressure Gradient) திசையே காற்று வீசும் திசையைத் தீர்மானிக்கிறது.
- புவியின் தற்சுழற்சியால் ஏற்படும் கோரியாலிஸ் விசை காற்றின் திசையை மாற்றுகிறது.
- கோரியாலிஸ் விசைக்கு ஏற்ப வட அரைக்கோளத்தில் வீசும் காற்று தன் வலப்பக்கமும் தென் அரைக்கோளத்தில் வீசும் காற்று தன் இடப்பக்கமும் விலகல் அடைவதற்கு பெரல் விதி என்று பெயர்
தல்க் காற்றுகள்
- Chinook: ராக்கி மலைப் பகுதியில் வீசும் வெப்ப உலர் காற்று.
- Foehn:ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் வீசும் வெப்ப உலர் காற்று.
- Khamsin:எகிப்தில் வீசும் வெப்ப உலர் காற்று.
- Sirocco:சகாராவில் இருந்து மத்திய தரைகடல் பகுதி நோக்கி வீசும் வெப்ப ஈரக் காற்று.
- Solano:
- சகாராவில் இருந்து ஐபீரிய தீபகற்பம் நோக்கி வீசும் வெப்ப ஈரக் காற்று.
- Harmattan : மேற்கு ஆப்ரிக்காவின் உட்பகுதியில் இருந்து வீசும் வெப்ப உலர் காற்று.
- Mistral:ஆல்ப்ஸ் மலைப் பகுதியிலிருந்து பிரான்ஸ் நோக்கி வீசும் கடும் குளிர் காற்று.
- Punas:ஆன்டிஸ் மலை மேற்கு பகுதி நோக்கி வீசும் குளிர் உலர்காற்று.
- Blizzard:துந்திரபகுதியில் வீசும் பனிப்புயல்.
- Bora:ஹங்கேரியில் இருந்து வீசும் குளிர் உலர் காற்று.
- Santa Ana : தெற்கு கலிபோர்னியப் பகுதியில் வீசும் உலர் காற்று.
- Norwester :நியூசிலாந்தில் வீசும் வெப்ப உலர் காற்று.
- Levanter:ஸ்பெயினில் வீசும் குளிர் காற்று.
- Purga: ரஷ்ய துந்திரப் பகுதியில் வீசும் குளிர் காற்று.
- Brickfielder: ஆஸ்திரேலியாவில் வீசும் அனல் காற்று.