Videos

Alexander the Great TNPSC History Important Notes

Alexander the Great - TNPSC History Important Notes அலெக்ஸாண்டர் படையெடுப்பு | TNPSC Online Study

Alexander the Great. அலெக்ஸாண்டர் படையெடுப்பு in Tamil PDF for TNPSC. TNPSC History Important Notes அலெக்ஸாண்டர் படையெடுப்பு.அலெக்ஸாண்டர் படையெடுப்பு tnpsc pdf download. TNTET and TNPSC Important Notes Based on New Syllabus. TN Samacheer kalvi Guide. TNPSC History Important Notes அலெக்ஸாண்டர் படையெடுப்பு Online Stusy. TNPSC Online Study

அலெக்ஸாண்டர் படையெடுப்பு - TNPSC History Important Notes

அலெக்ஸாண்டர் படையெடுப்பு

  • மகத நாட்டை நந்தர்கள் ஆண்டபோது கி.மு. 326-ல் அலெக்ஸாண்டர் இந்தியாவின் மீது படையெடுத்தார்.
  • இந்தியாவின் மீது படையெடுத்த முதல் ஐரோப்பியர்: அலெக்ஸாண்டர்.
  • அலெக்ஸாண்டரை எதிர்த்துப் போரிட்ட இந்திய மன்னர்: போரஸ் என்ற புருஷோத்தமன்.
  • அலெக்ஸாண்டருக்கும் போரஸ் மன்னனுக்கும் (ஜீலம் நதிக்கரையில் நடந்த போர் 'ஹைடஸ்பஸ் போர்' எனப்படுகிறது.
  • அலெக்ஸாண்டரிடம் சரணடைந்த தட்சசீல மன்னரின் பெயர் அம்பி.

மௌரியப் பேரரசு

  • மகத நாட்டை ஆண்ட தனநந்தரைத் தோற்கடித்து, சந்திரகுப்த மௌரியர், மௌரிய வம்சத்தைத் துவக்கினார்.
  • சந்திரகுப்த மௌரியரின் அரசியல் குரு: சாணக்கியர்.
  • அலெக்ஸாண்டரின் படைத் தலைவரான செல்யூக்கஸ் நிகேடரை சந்திரகுப்த மௌரியர் தோற்கடித்தார்.
  • சந்திரகுப்த மௌரியர் அவைக்கு வந்த கிரேக்கத் தூதுவர்: மெகஸ்தனிஸ்.
  • மெகஸ்தனிஸ் எழுதிய நூல்: இண்டிகா.
  • சந்திரகுப்த மௌரியரின் மகன்: பிந்துசாரர்,
  • பிந்துசாரரின் மகன்: சக்கரவர்த்தி அசோகர்
  • கி.மு. 261-ல் நடந்த கலிங்கப் போரில், அசோகர் கலிங்கத்தை வென்றார். 
  • கலிங்கப் போர் நிகழ்வுகளால் மனம் மாறிய அசோகர், புத்த மதத்தைத் தழுவினார்.
  • அசோகரைப் புத்த மதத்துக்கு மாற்றிய புத்த பிட்சு: உபகுப்தர்.
  • மௌரியர்களின் முக்கிய கலைச் சின்னங்கள்: சாரநாத் சிம்மத் தூண், சாஞ்சி ஸ்தூபி,
  • சாணக்கியர் எழுதிய நூலான அர்த்த சாஸ்திரம், அரசு நிர்வாகத்தைப் பற்றியது. அசோகர், மூன்றாம் புத்த மாநாட்டை பாடலிபுத்திரத்தில் நடத்தினார். 3
  • அசோகர், தன் மகன் மகேந்திரனையும் மகள் சங்கமித்திரையையும் இலங்கைக்கு அனுப்பி புத்த மதத்தைப் பரப்பினார்.
  • புத்த மத நூல்கள், அசோகர் தன் நூறு சகோதரர்களைக் கொன்றுவிட்டு அரியணை ஏறியதாகக் குறிப்பிடுகின்றன.
  • அசோகரின் கல்வெட்டுகள் பிராமி, கரோஷ்டி, அராமிக் ஆகிய மொழிகளில் எழுதப்பட்டன.
  • அசோகர், தனது கல்வெட்டுகளில் 'தேவனாம்பிரிய பிரியதர்ஷி' என்ற பெயரால் குறிக்கப்படுகிறார்.
  • ''மாஸ்கி' என்ற இடத்திலுள்ள கல்வெட்டில் மட்டுமே அசோகர் என்ற பெயர் காணப்படுகிறது.
  • அசோகரின் 13-வது கல்வெட்டு பாண்டியர்களைப் பற்றி குறிப்பிடுகிறது. 
  • அசோகரின் கல்வெட்டுகளைப் படித்தவர் ஜேம்ஸ் பிரின்செப். கடைசி மௌரிய மன்னன் பிருகத்ரதா.
  • பிருகத்ரதா, புஷ்யமித்ர சுங்கரால் கொல்லப்பட்டார். 
  • மௌரியர் என்ற பெயர் மயிலைக் குறிக்கும் 'மயூர்' என்ற சொல்லிலிருந்து அல்லது சந்திர குப்த மௌரியரின் தாயாரின் பெயரான 'முராட் என்பதிலிருந்து வந்திருக்கலாம் என்பர்.

சாதவாகனர்கள்

  • மௌரியர்களுக்குப்பின் இந்தியாவை ஆண்ட அரசர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் சாதவாகனர்கள்.
  • சாதவாகனர்கள் பழங்கால ஆந்திராவை ஆண்டனர். 
  • சாதவாகனர்களின் தலைநகரம்: பிரதிஸ்தான். 
  • சாதவாகனர்கள், (ஆந்திர புத்திரர்கள்” என்று அழைக்கப்படுகின்றனர். 
  • சாதவாகனர் மரபைத் தொடங்கியவர் சிமுகா.
  • சாதவாகன மன்னர்கள் தங்கள் பெயரைத் தங்களின் தாயின் பெயரோடு சேர்த்து எழுதினர்
  • புகழ்மிக்க சாதவாகன மன்னர்கள் கௌதமி புத்திர சதகர்னி (கி.பி. 106-110) மற்றும் வசிஷ்டி புத்திர புலமாயி (கி.பி. 130 -154).
  • சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் சதகர்னியை 'நூற்றுவர் கன்னர்) என்று குறிப்பிடுகிறார்.
  • சதகர்னி என்ற வடமொழிப் பெயருக்கான தமிழ்ப் பெயரே 'நூற்றுவர் கன்னர்' என்பது.
  • சேரன் செங்குட்டுவன் நூற்றுவர் கன்னரோடு நட்பு பாராட்டியதாக இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார்

குஷாணப் பேரரசு

  • குஷாணர்கள் யூச்சி என்ற பழங்குடியினத்தைச் சார்ந்தவர்கள்.
  • குஷாண வம்சத்தின் முதல் அரசர் முதலாம் கட்பீசஸ்.
  • கி.பி. 78-ல் அரசு ஏற்ற குஷாண அரசரான கனிஷ்கர், சக ஆண்டைத் தொடங்கினார்
  • கனிஷ்கரின் தலைநகர்: புருஷபுரம் (பெஷாவர்).
  • கனிஷ்கர் கைப்பற்றிய சீனப் பகுதிகள்: காஷ்கர், யார்கண்ட், கோட்டான். = கனிஷ்கர், 4-வது புத்த மாநாட்டை காஷ்மீரில் கூட்டினார்.
  • கனிஷ்கர் கால புத்த மதம்: மஹாயானம்.
  • அஷ்வகோஷர் 'புத்த சரிதம்' என்ற நூலை எழுதினார். 
  • கனிஷ்கர் புத்த மதத்தை பரப்பியதால் அவரை 'இரண்டாம் அசோகர்' என்று அழைத்தனர்.
  • கனிஷ்கர் காலத்தில் இருந்த புகழ்பெற்ற புத்த துறவிகள் வசுமித்திரர், அஷ்வகோஷர், நாகார்ஜுனர்.
  • கனிஷ்கர் காலத்தில் சரகர், சுஷ்ருதர் என்ற இரு மருத்துவ மேதைகள் வாழ்ந்தனர். 
  • சுஷ்ருதர், 'பிளாஸ்டிக் சர்ஜரியின் தந்தை' என அழைக்கப்படுகிறார். சரகர் புகழ்பெற்ற ஆயுர்வேத மருத்துவர்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.