Videos

சங்ககாலத் தமிழ் மன்னர்கள் - TNPSC History Important Notes

TNPSC History Important Notes சங்ககாலத் தமிழ் மன்னர்கள் | TNPSC Online Study

சங்ககாலத் தமிழ் மன்னர்கள் in Tamil PDF for TNPSC. TNPSC History Important Notes சங்ககாலத் தமிழ் மன்னர்கள்.சங்ககாலத் தமிழ் மன்னர்கள் tnpsc pdf download. TNTET and TNPSC Important Notes Based on New Syllabus. TN Samacheer kalvi Guide. TNPSC History Important Notes சங்ககாலத் தமிழ் மன்னர்கள் Online Stusy. TNPSC Online Study

சங்ககாலத் தமிழ் மன்னர்கள் - TNPSC History Important Notes

சங்ககாலத் தமிழ் மன்னர்கள்

சேரர்

  • சேரர்களின் தலைநகரம்-வஞ்சி
  • துறைமுகங்கள்-தொண்டி, முசிறி.
  • சின்னம்-வில், அம்பு,
  • அடையாளப்பூ-பனம் பூ
  • சேர அரசர்களில் தலைசிறந்தவன்: சேரன் செங்குட்டுவன்.
  • சேரர்கள் 'கேரள புத்திரர்கள்' எனப்படுவர்.
  • "முதல் சேர மன்னன்: பெருஞ்சோற்று உதியலாதன்.
  • பத்து சேர மன்னர்கள் பற்றிய வரலாற்று நூலே பதிற்றுப் பத்து.
  • இமயத்தை வென்ற இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், செங்குட்டுவனின் தந்தை,
  • பாலை கௌதமனால் புகழப்பட்ட பல் யானைச் செல்கெழுகுட்டுவன், நெடுஞ்சேரலாதனின் தம்பி,
  • பூழி நாட்டை வென்ற சேரன்: களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல்,
  • கண்ணகிக்குக் கோயில் கட்டியவன்: சேரன் செங்குட்டுவன்.
  • ‘கடல் பிற்கோட்டிய செங்குட்டுவன்’ செங்குட்டுவனின் வேறு பெயர். 
  • காக்கை பாடினியார்க்கு துலாம் (7 கிலோ) பொன் அளித்தவன் ஆடுகோட்பாட்டு சேரலாதன்;
  • ஆடுகோட்பாட்டு சேரலாதன் ஆடற்கலையில் வல்லவனாகத் திகழ்ந்தான். 
  • கண்ணுக்கு எட்டிய வரை இருந்த நாட்டை கபிலருக்கு அளித்தவன் செல்வக்கடுங்கோ வாழியாதன்.
  • முரசுக் கட்டிலில் உறங்கிய மோசிகீரனாருக்குக் கவரி வீசியவன் பெருஞ்சேரல் இரும்பொறை.
  • ஐங்குறுநூற்றைத் தொகுப்பித்தவன் யானைகட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை 
  • மகாபாரதப் போரில் கௌரவர் மற்றும் பாண்டவர் படைகளுக்கு உணவு அளித்தவன்
  • பெருங்சோற்று ஊதியலாதன். 'சேரா, உன் நாடு பொன் நாடு' என்று சேர நாட்டை வாழ்த்தியவர் ஒளவையார் *

சோழர்

  • சோழர்களின் தலைநகரம்- உறையூர்,
  • துறைமுகம்-காவிரிப்பூம்பட்டினம்.
  • சின்னம்-புலி
  • அடையாளப் பூ -ஆத்தி,
  • கரிகாற் சோழனின் வேறு பெயர்: திருமாவளவன்.
  • கரிகாற் சோழனின் தந்தை பெயர்: இளஞ்சேட் சென்னி.
  • வெண்ணி, வாகைப் பறந்தலை போர்க் களங்களில் வென்றவன்: கரிகாலன்.
  • பட்டினப்பாலை பாடிய உருத்திரங்கண்ணனாருக்கு 6 ஆயிரம் பொன் பரிசளித்தவன்: காகாலன்
  • கணைக்கால் இரும்பொறையைத் தோற்கடித்த சோழன் - செங்கணான்.

பாண்டியர்

  • பாண்டியர்களின் தலைநகரம்-மதுரை
  • துறைமுகம்- கொற்கை.
  • சின்னம்-மீன்
  • அடையாளப்பூ-வேம்பு.
  • பாண்டிய அரசர்களில் தலைசிறந்தவன்: நெடுஞ்செழியன்.
  • முதல் தமிழ்ச் சங்கத்தை ஆதரித்த பாண்டிய மன்னர்கள் 89 பேர்.
  • இடைச் சங்கத்தை ஆதரித்த பாண்டியர்கள் 59 பேர்.
  • கடைச் சங்கத்தை ஆதரித்த பாண்டியர்கள் 49 பேர்.
  • தொல்காப்பியம், நிலந்திரு திருவிற்பாண்டியன் அவையில் அரங்கேறியது.
  • நற்றிணையைத் தொகுத்தவன்: பன்னாடு தந்த பாண்டியன்.
  • அகநானூறைத் தொகுத்தவன்: பாண்டியன் உக்கிரப் பெருவழுதி
  • 'உண்டாலம்ம இவ்வுலகம்' பாடலை இயற்றியவன்: கடலுள் மாய்ந்த பெருவழுதி. 
  • சேர, சோழர் மற்றும் ஐந்து சிற்றரசர்கள் கொண்ட கூட்டுப் படையைத் தோற்கடித்த பாண்டிய மன்னன் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்.
  • மதுரைக் காஞ்சி, தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் மீது பாடப்பட்டது.

குறுநில மன்னர்கள்

  • சங்க கால குறுநில மன்னர்கள் 'வேளிர்' எனப்பட்டனர்.
  • முல்லைக்குத் தேர் கொடுத்தவன் பறம்பு மன்னன் பாரி 
  • ஔவைக்கு நெல்லிக் கனி ஈந்தவன்: குதிரை மலை மன்னன் அதியமான்.
  • மயிலுக்குப் போர்வை தந்தவன்: பழனி மலை மன்னன் பேகன்.
  • பொதிய மலையை ஆண்ட அரசன்: நள்ளி,
  • கோடை மலையை ஆண்ட அரசன்; கடிய நெடுவேட்டுவன்.
  • நன்னன்சேய் நன்னன் என்ற குறுநில மன்னன் மீது மலைபடுகடாம் பாடப்பட்டது.
  • ஓய்மா நாட்டு நல்லியக் கோடன் மீது சிறுபாணாற்றுப்படை பாடப்பட்டது.
  • தொண்டைமான் இளந்திரையான் மீது பெரும்பாணாற்றுப்படை பாடப்பட்டது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.