TNPSC History Important Notes சங்க காலப் புலவர்கள்
சங்க காலப் புலவர்கள் in Tamil PDF for TNPSC. TNPSC History Important Notes சங்க காலப் புலவர்கள்.சங்க காலப் புலவர்கள் tnpsc pdf download. TNTET and TNPSC Important Notes Based on New Syllabus. TN Samacheer kalvi Guide. TNPSC History Important Notes சங்க காலப் புலவர்கள் Online Stusy. TNPSC Online Study.
சங்க காலப் புலவர்கள்
- அதியமாளிடம் நெல்லிக் கனி பெற்றவர்: ஔவையார்.
- நலங்கிள்ளிக்கும் நெடுங்கிள்ளிக்கும் சமாதானம் செய்து வைத்தவர்: கோவூர்கிழார்.
- வரி போடும் முறையை பாண்டியன் அறிவுடை நம்பிக்கு அறிவுறுத்திப் பாடியவர்: பிசிராந்தையார்.
- பாரியோடு நட்பு பாராட்டியவர்: கபிலர்.
- பேகன், அவன் மனைவி கண்ணகியைப் பிரிவதைத் கடிந்து உரைத்தவர்: பரணர்.
- கடைச் சங்கத்தின் தலைமைப் புலவர்: நக்கீரர்.
- நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே' என சிவபெருமானோடு வாதிட்டவர்: நக்கீரர்.
- முரசுக் கட்டிலில் படுத்துறங்கிய புலவர்: மோசிகீரனார்.
- மலையமான் மக்களை கிள்ளிவளவன் கொல்லாமல் காத்தவர்: பிசிராந்தையார்.
- கோப்பெருஞ்சோழனின் நண்பர்: பிசிராந்தையார்.
- முடி நரைக்காததற்குக் காரணம் கூறி பாடியவர்: பிசிராந்தையார்.
- புறநானூற்றில் அதிக எண்ணிக்கையில் பாடல்கள் பாடியவர்: ஒளவையார்.
- அதியமானின் தூதுவராக தொண்டைமானிடம் சென்று இருவருக்கும் இடையே நடக்க இருந்த போரை தன் பாட்டு திறத்தால் தடுத்தவர் ஒளவையார்.
- கபிலரை புலன் அழுக்கற்ற அந்தணாளன் என்று பாராட்டியவர்ருப்பிசலையார்.
- கபிலரும் பரணரும் சங்ககாலத்தில் 'கபிலபரணர்' என போற்றப்பட்ட சங்க கால இரட்டையர்கள்,
- பொன்முடியாரும் அரிசில்கிழாரும் இணைந்து பாடிய நூல் தகடூர் யாத்திரை.
- கோப்பெருஞ்சோழனோடு வடக்கிருந்து உயிர் விட்டவர் பிசிராந்தையார்.
- கோப்பெருஞ்சோழனோடு வடக்கிருக்க முன்வந்த மற்றொரு புலவர் பொத்தியார்.
- இலக்கண நூல் இயற்றிய பெண்பாற்புலவர்: காக்கை பாடினியார்.
- புத்த மதத்தைச் சேர்த்த சங்கப் புலவர்: இளம்போதியார்.
- சமண மதத்தைச் சேர்ந்த புலவர்: உலோச்சனார்.
- ‘ஈன்று புறந்தருதல்’ எனத் தொடங்கும் பாடலைப் பாடிய பெண்பாற்புலவர். பொன்முடியார்.
- கணைக்கால் இரும்பொறையைக் கவிதை பாடி மீட்டவர்: பொய்கையார்.
- இளந்தத்தன் என்ற புலவரை ஒற்றர் எனக் கருதி கொல்ல முயன்ற நெடுங்கிள்ளியைத் தடுத்தவர்: கோவூர்க்கிழார்
- வரலாற்றுப் புலவர் என்று அழைக்கப்பெற்றவர் மாமூலனார்.
- மோரியர் (மௌரியா) படையெடுப்பு பற்றி பாடிய சங்கப் புலவர் மாமூலனார்.
- சங்க புலவர்களில் அதிக பாடல்கள் பாடியவர் கபிலர்.