TNPSC History Important Notes Vedic civilization
Vedic civilization. வேதகால நாகரிகம் in Tamil PDF for TNPSC. TNPSC History Important Notes வேதகால நாகரிகம் .வேதகால நாகரிகம் tnpsc pdf download. TNTET and TNPSC Important Notes Based on New Syllabus. TN Samacheer kalvi Guide. TNPSC History Important Notes வேதகால நாகரிகம் Online Stusy. TNPSC Online Study.
Vedic civilization | வேதகால நாகரிகம்
- சிந்து சமவெளி நாகரிகத்துக்குப் பின் இந்தியாவில் தோன்றியது வேதகால நாகரிகம்.
- வேதகால நாகரிகம் ஆரிய நாகரிகம்' என்றும் அழைக்கப்படுகிறது.
- வேதகாலம் இரு வகைப்படும். அவை: முற்பட்ட வேதகாலம் (கி.மு. 1600 முதல் கி.மு. 1000 வரை) பிற்பட்ட வேதகாலம் கி.மு. 1000 முதல் கி.மு. 600 வரை).
- வேதகால நாகரிகம் பற்றி அறிய உதவுவது வேதங்கள், உபநிடதங்கள். இதிகாசங்கள்.புராணங்கள்,
- வேதங்கள்: ரிக், யஜுர், சாம, அதர்வணம் என நான்கு வகை.
- வேதங்களில் பழமையானது ரிக் வேதம்.
- ரிக் வேதத்தில் 1,028 துதிப் பாடல்கள் உள்ளன.
- காயத்ரி மந்திரம் ரிக் வேதத்தில் இடம்பெற்றுள்ளது.
- யஜுர் வேதம் சடங்குகள் பற்றிக் குறிப்பிடுகிறது.
- இந்திய இசைசு கலைக்கான தொடக்கம், சாம வேதத்தில் காணப்படுகிறது.
- அதர்வண வேதம், மாந்திரீகம் (பில்லி, சூன்யம்) பற்றிக் குறிப்பிடுகிறது.
- உபதிடதங்கள்: மொத்தம் 108.
- ரிக் வேத காலத்தில் ஆரியர்கள் சப்த சிந்து பகுதியில் குடியேறினார்கள்.
- ஆரியர்கள், தங்கள் தலைவரை 'ராஜன்' என்று அழைத்தனர். ஆரியர்கள் சோம பானம், சுரா பானம் ஆகியவற்றை அருந்தினர்.
- ரிக் வேதத்தின் புருஷசுகத மண்டலத்தில் வர்ணாசிரமக் கொள்கை இடம்பெற்றது. ராஜனுக்கு அறிவுரை கூற, 'சபா' என்ற மூத்தோர் சபையும், 'சமிதி' என்ற பொது சபையும் இருந்தன.
- முற்பட்ட வேத காலத்தில் சமூகத்தில் வர்ணாஸ்ரமம் இல்லை. ரிக் வேத காலத்தில் சமூகத்தில் பெண்கள் நிலை உயர்ந்திருந்தது.
- ரிக் வேத காலத்தில் கல்வி அறிவால் புகழ்பெற்ற பெண்மணிகள்: மைத்ரேயி, கார்த்தி,
- பிற்பட்ட வேத காலத்தில் பெண்களின் நிலை பின் தங்கியது.
- பிற்பட்ட வேத காலத்தில் வர்ணாஸ்ரம கொள்கை நிலைபெற்றது.
- பிற்பட்ட வேத காலம் இதிகாச காலம் எனவும் அழைக்கப்படுகிறது.
- ஆரியர்கள், இயற்கைச் சக்திகளை கடவுளாக வழிபட்டனர்.
- இந்திரன் (இடி, மின்னல், போர்), வருணன் (மழை), அக்னி (நெருப்பு), மாருதி (காற்று); ருத்ரன் (விலங்கு) ஆகியோர் முக்கிய வேத காலக் கடவுள்கள்.
Buddhism| பௌத்தம்
- கி.மு. 6-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் புத்த சமயம் தோன்றியது.
- புத்த சமயத்தைத் தோற்றுவித்தவர்: புத்தர்.
- புத்தரின் இயற்பெயர்: சித்தார்த்தர்.
- சித்தார்த்தர் கபிலவாஸ்து நாட்டிலுள்ள லும்பினியில் பிறந்தார். சித்தார்த்தரின் பெற்றோர்: சுத்தோதனர், மகாமாயா.
- சித்தார்த்தரின் மனைவி: யசோதரா; மகன்: ராகுலன். சித்தார்த்தரின் வளர்ப்புத் தாய்: கௌதமி.
- புத்தர் என்ற பெயருக்கு பொருள்: ஞானம் பெற்றவர்.
- கயாவில் ஓர் அரசமரத்தின் (போதி மரம்) அடியில் புத்தர் ஞானம் பெற்றார்.
- சாக்கிய நாட்டில் பிறந்ததால் சாக்கிய முனி என்றும் அவர் அழைக்கப்படுகிறார்.
- புத்தர், தன் முதல் போதனையை வழங்கிய இடம் சாரநாத்.
- புத்தரின் வளர்ப்புத் தாயான 'கௌதமி'யின் பெயரைச் சேர்த்து 'கௌதம புத்தர்' என்றனர்.
- புத்தரின் போதனைகள் அடங்கிய நூல்கள்: திரி பீடகங்கள்.
- சுத்த பீடகம், அபிதம்ம பீடகம், விநய பீடகம் ஆகிய மூன்றுமே திரி பீடகங்கள்.
- புத்த சமயக் கருத்துகள் பாலி மொழியில் அமைந்தவை.
- அசோகர், கனிஷ்கர் போன்ற அரசர்களால் புத்த சமயம் வெளிநாடுகளில் பரவியது.
- கனிஷ்கர் காலத்தில் புத்த சமயம், ஹீனயானம், மஹாயானம் என்று பிரிந்தது. ஹீனயானப் பிரிவினர், புத்தரை ஒரு முனிவராகக் கருதினர்.
- மஹாயானப் பிரிவினர் புத்தரைக் கடவுளாக வழிபட்டனர்.
- புத்தர் மறைந்த இடம்: குஷி நகரம்.
- புத்தரின் பிறப்பைக் குறிப்பது தாமரை
- புத்தரின் துறவைக் குறிப்பது குதிரை
- புத்தர் ஞானம் பெற்றதைக் குறிப்பது போதி மரம்.
- புத்தரின் முதல் போதனையைக் குறிப்பது தர்ம சக்கரம்.
Jainism | சமணம்
- சமண சமயத்தை உருவாக்கியவர்: வர்த்தமான மகாவீரர்.
- மகாவீரர் வைசாலியில் உள்ள குந்டக் கிராமத்தில் பிறந்தார்.
- 24-வது, கடைசி தீர்த்தங்கரராகக் கருதப்படுபவர்: மகாவீரர்.
- தீர்த்தங்கரர் என்ற வார்த்தைக்குக் கோட்டை கட்டுபவர் என்று பொருள்.
- முதல் தீர்த்தங்கரர்: ரிஷபா.
- 23-வது தீர்த்தங்கரர்: பர்ஷவனாதர்.
- திருவள்ளுவரை 'சமணர்' என்று கருதுபவர்கள் முதல் திருக்குறளில் வரும் 'ஆதிபகவன்' என்பது முதல் தீர்த்தங்கரரான ரிஷப தேவரை குறிப்பதாகக் கொள்வார்கள்.
- மகாவீரர் கால் மரத்தடியில் ஞானம் பெற்றபின் 'ஜினா’ என்று அழைக்கப்பட்டார்.
- ஜினா என்றால் வெற்றிபெற்றவர் என்று பொருள். இந்தச் சொல்லில் இருந்து, ஜைனம், என்ற பெயர் உருவானது.
- சமண சமயத்தின் இரு பிரிவினர்: திகம்பரர் மற்றும் ஸ்வேதாம்பரர்.
- ஆடை அணியாத திகம்பரர்களின் தலைவர்: பத்ரபாகு.
- வெண்ணிற ஆடை அணிந்த ஸ்வேதாம்பரர்களின் தலைவர்: ஸ்தலபாகு.
- சமண சமயம் திகம்பரர்களால் தென்னிந்தியாவிலும், ஸ்வேதாம்பரர்களால் வட இந்தியாவிலும் பரவியது.
- ராஜஸ்தானத்தில் மவுன்ட் அபுவில் உள்ள தில்வாரா ஜெயின் கோயிலும், கர்நாடகத்திலுள்ள சிரவணபெல கோலாவும் சமணர்களின் புனிதத் தலங்கள்.