TNPSC History Important Notes ஆரியர், திராவிடர் தோற்றம் பற்றிய கருத்துகள்
TNPSC History Important Notes Aryans and Dravidians. Comments on the origin of Aryans and Dravidians. ஆரியர், திராவிடர் தோற்றம் பற்றிய கருத்துகள் in Tamil PDF for TNPSC. TNPSC History Important Notes ஆரியர், திராவிடர் தோற்றம் பற்றிய கருத்துகள்.ஆரியர், திராவிடர் தோற்றம் பற்றிய கருத்துகள் tnpsc pdf download. TNTET and TNPSC Important Notes Based on New Syllabus. TN Samacheer kalvi Guide. TNPSC History Important Notes ஆரியர், திராவிடர் தோற்றம் பற்றிய கருத்துகள் Online Stusy. TNPSC Online Study.
Aryans and Dravidians
ஆரியர், திராவிடர் தோற்றம் பற்றிய கருத்துகள்
- அதர்வண வேதம் ஆரியர்) அல்லாதவர்களின் வேதம் என்று குறிப்பிடப்படுகிறது.
- ராவணன், சாம வேதம் பாடி சிவனை மகிழ்வித்தான் என்பது புராணச் செய்தி.
- ஆரியர் மத்திய ஆசியாவிலிருந்து வந்தார்கள் என்ற கொள்கையை வெளியிட்டவர் ம.மா மாக்ஸ்முல்லர்
- ஆரியாதளின் பூர்வீகம் ஆர்டிக் பிரதேசம் என்ற கருத்தை பால கங்காதர திலகர் வலியுறுத்தினார்.
- சுவாமி தயானந்த சரஸ்வதியின் கருத்துப்படி ஆரியர்கள் திபெத்திலிருந்து வந்தவர்கள்
- மானுட இயலார் குகா, ஆரியர்களைப் புதிய மத்திய தரைக்கடல் இனத்தவர்களாக வகைப்படுத்துகிறார்.
- ஆரியர்கள் இந்தியாவுக்குள் வந்தபோது அவர்களோடு சண்டையிட்ட கறுப்பு இனத்தவர்களை ரிக்வேதம் தாஸ்யூக்கள் என்று குறிப்பிடுகிறது.
- திராவிடர்களையே ரிக்வேதம் தாஸ்யூக்கள் என்று குறிப்பிடுவதாகக் கருதப்படுகிறது.
- சிந்து சமவெளி மக்களின் எழுத்து முறைக்கும் திராவிட நாகரிகத்துக்கும் உள்ள தொடாபை ஹீராஸ் பாதிரியார், ஐராவதம் மகாதேவன், அஸ்கோ பார்போலா போன்றோர் விளக்கி உள்ளனர்.
- பலுசிஸ்தானில் பேசப்படும் பிராகுய் என்ற மொழி திராவிட மொழி குடும்பத்தைச் சார்ந்தது என்பதை கால்டுவெல் எடுத்துக்காட்டியுள்ளார்.
- திராவிட இனம் குமரிக் கண்டம் என்னும் லெமூரியா கண்டத்தில் தோன்றியது' என்ற கருத்தை மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் முன் வைத்தார்.
- இறந்தவர்களைப் புதைத்தல், கடல் வணிகம் சிவ வழிபாட்டை ஒத்த பசுபதி வழிபாடு. கொற்றவை வழிபாட்டை ஒத்த பெண் தெய்வ வழிபாடு ஆகியவை சிந்து சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் எனக் கருத இடம் தருகின்றன என்பது அறிஞர்கள் கருத்து.
- 2010-ல் கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு இலச்சினையில் சிந்து சமவெளி நாகரிக முத்திரைகள் இடம் பெற்றன.
- வடமொழி மக்கள், விந்திய மலைக்குத் தெற்கே வாழ்ந்த தமிழர்கள், தெலுங்கர்கள், கன்னடர்கள், மலையாளிகள், மராட்டியர்கள் ஆகிய ஐந்து இனத்தவர்களையும் பஞ்ச திராவிடர் எனக் குறித்தனர்.
- எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த குமரில் பட்டர்) ஆந்திர திராவிட பாஷா என்ற சொல்லைப் பயன்படுத்தினார்.
- திராவிடம் என்ற சொல்லே திராவிடம் திரமிளம் தமிளம் தமிழ் என்று ஆனதாக கால்டுவெல் குறிப்பிட்டார்.
- தமிழ் என்ற சொல்லே தமிழ் - தமிளம் - திரமிளம் ராமசந்திர தீட்சிதர் குறிப்பிட்டார். - திராவிடம் என்று ஆனதாக
- மாறர், திரையகர், வானவர், கோசர் என நான்கு பிரிவினராக தென்னிந்தியாவுக்கு வந்து தங்கிய மங்கோலியரே முறையே பாண்டியர், சேர, சோழ, கொங்கு நாட்டவர் என்பார் கனகசபை பிள்ளை.
- கி.மு. நான்காம் நூற்றாண்டு நூலான தொல்காப்பியத்தில் 'தமிழ்' என்ற சொல் பயில்வதாலும், திராவிடம் என்ற சொல் பிற்கால வழக்கு என்பதாலும் தமிழ் என்ற சொல் திராவிடம் எனத் திரிந்தது என்பது அறிஞர்கள் முடிவு.
- மானுட இயலார் குகா, திராவிடர்களை பழைய மத்தியதரைக் கடல் இனத்தவர்களாக வகைப்படுத்துகிறார்.