Videos

Indus Valley Civilization - TNPSC History Important Notes

TNPSC History Important Notes சிந்து சமவெளி நாகரிகம்

Indus Valley Civilization Notes in Tamil PDF for TNPSC. TNPSC History Important Notes சிந்து சமவெளி நாகரிகம்.  சிந்து சமவெளி நாகரிகம் tnpsc pdf download. TNTET and TNPSC Important Notes Based on New Syllabus. TN Samacheer kalvi Guide. TNPSC History Important Notes சிந்து சமவெளி நாகரிகம் Online Stusy. TNPSC Online Study

Indus Valley Civilization - TNPSC History Important Notes

வரலாறு (HISTORY)

சிந்து சமவெளி நாகரிகம்

அகழ்விடங்களும் அகழ்வாய்வாளர்களும்

  • சர் ஜான் மார்ஷல், தாயாராம் சஹானி, R.D. பானர்ஜி - சிந்து சமவெளி நாகரிகத்தின் முக்கிய அகழ்வாய்வாளர்கள்.
  • அகழ்வாய்வு முடிவுகள் 1922-ல் வெளியிடப்பட்டன.
  • சிந்து சமவெளி நாகரிகத்தின் காலம்: கி.மு. 2500 முதல் 1800 வரை (கதிரியக்க கார்பன் வயது கணிப்புப்படி).
  • பரவியிருந்த இடங்கள்: ஹரப்பா மற்றும் மொஹஞ்சதாரோ. இது நகர நாகரிகம். 
  • ஹரப்பா நகரம் பாகிஸ்தானில், பஞ்சாப் மாநிலத்தில், மாண்ட்கோமரி மாவட்டத்திலுள்ளது.
  • மொஹஞ்சதாரோ பாகிஸ்தானில், சிந்து மாநிலத்தில், வார்க்கானா மாவட்டத்திலுள்ளது.
  • மொஹஞ்சதாரோ என்ற வார்த்தைக்கு 'இறந்தவர் மேடு' என்று பொருள்.
  • மொஹஞ்சதாரோவில் பெரிய குளமும் (Great bath) ஹரப்பாவில் தானியத் களஞ்சியங்களும் (Granaries) கண்டுபிடிக்கப்பட்டன.
  • இந்தியாவில் லோத்தல் (குஜராத்) களிபங்கன் (ராஜஸ்தான்) போன்ற இடங்களில் இந்த நாகரிக நகரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
  • கமலஹாசன் இயக்கிய 'ஹேராம்' திரைப்படம் சிந்து சமவெளி நாகரிக அகழ்வாய்வுப் பின்னணியில் தொடங்குவதாகும்.

அகழ்ந்ததும் அறிந்ததும்

  • சிந்து சமவெளி நாகரிக அகழ்விடங்களில் பெரியது தோலாவிரா (குஜராத்). 
  • தோலாவிரா, ஜோஷி மற்றும் பிஷ்ட் ஆகியோரால் கண்டறியப்பட்டது
  • குதிரை எலும்புகள் சூர்கோட்டாவில் (குஜராத்) கண்டறியப்பட்டுள்ளன. லோத்தல், போக்வா நதிக்கரையிலும் களிபங்கன், காஹர் நதிக்கரையிலும் அமைந்துள்ளன.
  • மொஹஞ்சதாரோவில் பெரிய தானியக் களஞ்சியம், பெரிய குளம் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன.
  • ஹரப்பாவில் சிறிய அளவு 12 தானியக் களஞ்சியங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
  • சூர்கோட்டா, குஜராத்தில் கட்ச் பகுதியிலுள்ள பூஜ் மாவட்டத்தில் 1972-ல் ஜெ.பி.ஜோஷி என்ற அகழ்ய்வாளரால் கண்டறியப்பட்டது.
  • களிபங்கன் என்றால், கருப்பு வளையல் என்று பொருள்.
  • களிபங்கனில் நெருப்பு பலி பீடமும் ஒட்டகத்தின் எலும்புகளும் கண்டறியப் பட்டுள்ளன
  • இந்த நாகரிகத்தின் கிழக்கு எல்லையாக அமைவது பலுசிஸ்தானிலுள்ள சுட்காஜென்டோர்.
  • இந்த நாகரிகத்தின் மேற்கு எல்லையாக அமைவது மேற்கு உத்தரப் பிரதேசத்திலுள்ள ஆலம்கிர்புர்.
  • முக்கிய அகழ்வாய்வு இடங்கள் - இந்தியாவில் லோத்தல், ரங்பூர், சூர்கோட்டா (குஜராதி), ஆலம்கிர்புர் (உத்தரபிரதேசம்), களிபங்கன் (ராஜஸ்தான்), பான்வாலி ப்ஹரியானா).
  • முக்கிய அகழ்வாய்வு இடங்கள் - பாகிஸ்தானில் ஹரப்பா, மொஹஞ்சதாரோ, சள்குதாரோ
  • செம்பு செய்வதற்கான தாமிரத்தை கேத்ரி (ராஜஸ்தான்) சுரங்கத்திலிருந்து பெற்றனர்.

சமயமும் சடங்குகளும்

  • மக்கள், 'பசுபதி' என்ற ஆண் தெய்வத்தையும் 'அன்னை' என்ற பெண் தெய்வத்தையும் வழிபட்டனர்.
  • சிந்து சமவெளி முத்திரைகளில் மூன்று தலைகளுடன் யோக நிலையில் உள்ள கடவுளே பசுபதி
  • பசுபதி முத்திரைகளில் யானை, புலீ, காண்டாமிருகம், மான், எருமை ஆகிய விலங்குகள் உள்ளன.
  • மரம், விலங்கு, பறவை, கல் வழிபாட்டுமுறைகள் காணப்பட்டன.
  • இறந்தவர்களைப் புதைத்தல் அல்லது எரித்துப் பின் புதைத்தல் என்ற வழக்கத்தைப் பின்பற்றினர்.
  • இறந்த உடல்களை விலங்குகளுக்கு உணவாக்கிப் பின் புதைக்கும் வழக்கமும் இருந்தது.
  • சடலங்களைச் சவப் பெட்டியில் வைத்துப் புதைத்ததற்கான சான்றுகள் ஹரப்பாவில் கிடைத்துள்ளன.
  • சடலங்களை வடக்கு, தெற்கு திசையில் புதைத்தனர். 
  • இந்த மக்களுக்குப் பேய், ஆவி பற்றிய நம்பிக்கைகள் இருந்திருக்க வேண்டும் என்பதற்கு அகழ்வாய்வு இடங்களில் தாயத்துகள் சான்றுகளாகும்.
  • லிங்க வழிபாடும் யோனி வழிபாடும் இந்த மக்களிடையே காணப்பட்டது. 
  • மனித சடலங்களுக்கு கீழே விலங்குகளின் உடல்களை புதைக்கும் முறையும் இருந்தது.

தொழிலும் சமூகமும்

  • நெல் பயிரிடப்பட்டதற்கான ஆதாரம் லோத்தல் நகரில் கிடைத்துள்ளது. 
  • பானை செய்யும் கலையை அறிந்திருந்தனர். சிவப்பு, கருப்பு பானைகள் கண்டறியப் பட்டுள்ளன.
  • பருத்தி, நெல், கோதுமை, பேரீச்சை, கடுகு, பார்லியை பயிரிட்டனர். உலகிலேயே முதன்முதலாக பருத்தி பயிரிட்டவர்கள் சிந்து சமவெளி மக்களே ஆவர்.
  • பருத்தி, கிரேக்கர்களால் 'சின்டோன்' என்று குறிப்பிடப்பட்டது. திந்து சமவெளி நாகரிகம் செம்பு காலத்தைச் (Bronze Age) சேர்ந்தது
  • தாமிரம் மற்றும் வெண்கலத்தாலான கருவிகளைப் பயன்படுத்தினர்.
  • உலோகங்களில் இரும்பையும், விலங்குகளில் குதிரையையும் அறிந்திருக்கவில்லை என்பர்.
  • 1972-ல் ஜெ.பி.ஜோஷி குழுவினரால் குஜராத்திலுள்ள சூர்கோட்டா என்ற இடத்தில் சிந்து சமவெளி கால குதிரை எலும்புகள் கிடைத்துள்ளன.
  • சன்குதாராவில் ஹரப்பா கால மற்றும் முந்தைய ஹரப்பா கால சான்றுகள் கிடைத்துள்ளன.
  • தங்கம், வெள்ளி, தாமிரம், வெண்கலம் ஆகியவற்றின் பயனை இந்த மக்கள் அறிந்திருந்தனர்.
  • தாயம், சூதாடுதல் இவை இரண்டும் இந்த மக்களின் முக்கிய பொழுதுபோக்கு. 
  • சிந்து சமவெளி மக்கள் தாமிரத்தைப் பயன்படுத்தியதில் இருந்து அந்த நாகரிகம் ஆரிய நாகரிகத்துக்கு முற்பட்டது எனத் தெரிகிறது.

எழுத்துக்களும் கருத்துகளும்

  • எழுத்துமுறை: Boustrophedon Script வகையைச் சார்ந்த சித்திர எழுத்து முறை,
  • Boustrophedon Script என்பது முதல் வரி வலமிருந்து இடமாகவும், இரண்டாவது வரி இடமிருந்து வலமாகவும் அமையும் எழுத்து முறை.
  • இன்னும் புரிந்து கொள்ளப்படாத 600 சித்திர எழுத்துகள் உள்ளன என்பர்.
  • ஹீராஸ் பாதிரியார் சிந்து சமவெளி மக்களின் எழுத்து முறையை மூல திராவிட எழுத்து முறை (Proto Dravidian Script) என்கிறார்.
  • சிந்து சமவெளி மக்களின் எழுத்துகள் பழந்தமிழ் எழுத்துகளே என்ற கருத்தை ஐராவதம் மகாதேவன் வலியுறுத்துகிறார்.
  • ஃபின்லாந்து நாட்டைச் சேர்ந்த அஸ்கோ பார்போலா சிந்து சமவெளி எழுத்து முறை திராவிட எழுத்து முறை (Dravidian Script) என்ற கருத்தை விரிவாக ஆய்ந்துள்ளார்.

வணிகம்

  • சிந்து சமவெளி மக்கள் மெசபடோமியரிடம் வணிகத் தொடர்பு வைத்துள்ளனர். மெசபடோமியா ஆவணங்கள் சிந்து சமவெளி நாகரிகத்தை Meluha
  • லோத்தல் சிந்து சமவெளி மக்களின் முக்கிய துறைமுக நகரமாகத் திகழ்ந்துள்ளது.
  • லோத்தல் நகரில் ஒரு கப்பல் கட்டும் தனம் இருந்தது.
  • சிந்து சமவெளி மக்கள் கணக்கீடுகளுக்கு 16-ன் மடங்குகளைப் பயன்படுத்தினர்,

சீற்றமும் சிதைவும்

  • சிந்து சமவெளி நாகரிகம் சிந்து நதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்காலோ சிந்து நதி தன் போக்கை மாற்றிக்கொண்டதாலோ அழிந்திருக்கலாம் என்று சொல்லப் படுகிறது
  • சிந்து சமவெனி நாகரிசும் ஆரியர் படையெடுப்பால் அழிந்தது என்ற கருத்தை வெளியிட்டவா மார்டிமர் விலர்,
  • சிந்து சமவெளி நாகரிகத்தின் சிதைவுக்கும், ஆரியர் வருகைக்கும் உள்ள கால இடைவெளியைக் கருத்தில் கொண்டு, மார்டிமர் வீலர் கருத்தை மறுப்பவர்களும் உண்டு.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.