TNPSC Group 4 & VAO தேர்வர்கள் கவனத்திற்கு!
TNPSC Group 4 & VAO தேர்வர்கள் கவனத்திற்கு – தேர்ச்சி பெற எளிய வழிகள் இதோ!
TNPSC குரூப் 4 & VAO தேர்வு ஜூலை 24ம் தேதி நடைபெற உள்ள நிலையில் எப்படி தேர்வுக்கு தயாராவது என்பது பற்றிய எளிய வழிமுறைகளை இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
குரூப் 4 & VAO:
தமிழகத்தில் கிராம நிர்வாக அலுவலர் டைபிஸ்ட், ஸ்டெனோ டைபிஸ்ட், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் ஆகிய பணியிடங்களுக்கு நடத்தப்படும் குரூப்4 தேர்வானது நடப்பு ஆண்டு ஜூலை 24ம் தேதி நடைபெறும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இந்த பணியிடங்கள் எழுத்துத் தேர்வு மூலம் நேரடியாக நிரப்பப்படுகிறது. இதற்கு 10ம் வகுப்பு அல்லது அதற்கு மேல் கல்வித் தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வானது மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு நடைபெறும். ஒவ்வொரு வினாவிற்கும் 1.5 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதல் பகுதியான தமிழில் 40 மதிப்பெண்கள் பெறுவது அவசியம். அடுத்த பகுதியான பொது அறிவில் 100 வினாக்கள் இடம்பெறும்
அதற்கான பாடத்திட்டம், பழைய பாடத்திட்டத்தை ஒத்துத்துள்ளது. தமிழ் மொழிப் பாடப் பிரிவில், தமிழ் இலக்கணம், இலக்கியம், தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும் ஆகிய தலைப்புகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படும். இதில் 100 மதிப்பெண்ணில் 40 மதிப்பெண் எடுக்க வேண்டும். பொது அறிவு பகுதியில் அறிவியல், நடப்பு நிகழ்வுகள், புவியியல், வரலாறு, இந்திய அரசியல், பொருளாதாரம், இந்திய தேசிய இயக்கம், திறனறி வினாக்கள் போன்ற பகுதிகளிலிருந்து வினாக்கள் கேட்கப்படும். தமிழை முழுமையாக படித்தால் அதிக மதிப்பெண்களை எடுக்கலாம்.
தமிழ் மொழிப்பாடத்தில் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை படித்துக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு புத்தகங்களையும் படிக்கலாம். செய்யுள் பகுதியை படிக்கும்போது, பாடல்களை ஒருமுறைக்கு இருமுறை படிப்பது நல்லது. கணித பாடங்களைப் பொறுத்தவரை, ஒவ்வொரு தலைப்பின் கீழ் வரும் வினாக்களை ஒவ்வொரு நாளாக பயிற்சி செய்து பார்க்க வேண்டும். நடப்பு நிகழ்வுகளுக்கு செய்தித்தாள்களை படியுங்கள். பெரும்பாலும் தேர்வுக்கு பள்ளி பாடப் புத்தகங்களை படித்தால் பயன் பெறலாம்.