இந்திய விமானப் படையில் ரூ.1,77,500 சம்பளத்தில் வேலை, விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!
இந்திய விமானப் படையில் காலியாக உள்ள Commissioned Officer பணிக்கு காலியிட அறிவிப்பு முன்னதாக வெளியானதையடுத்து இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வரும் 30ம் தேதியோடு காலஅவகாசம் நிறைவடைய உள்ளது. ஆன்லைன் (Online) முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
வேலைக்கான விவரங்கள் :
- காலியாக உள்ள வேலையின் பெயர்: Commissioned Officer
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 30/06/2022
- கல்வித் தகுதி விவரம்: விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகத்தில் 10வது மற்றும் 12வது தேர்ச்சியுடன் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் B.E, B.Tech, Any Degree, B.Com, BBA, B.Sc, CA ஏதேனும் ஒன்றில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது தகுதி
- Flying Branch: குறைந்தது 20 வயது முதல் அதிகபட்சம் 24 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
- Ground Duty (Technical/ Non-Technical) Branches: கட்டாயம் குறைந்தது 20 வயது முதல் அதிகபட்சம் 26 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
சம்பளம் விவரம்:
- மத்திய அரசு ஊதிய அளவின்படி, 7th CPC Level 10 என்கிற அளவில் குறைந்தது ரூ.56,100/- முதல் அதிகபட்சம் ரூ.1,77,500/- வரை மாதம் சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த காலிப்பணியிட விவரம்:
- பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது. (Various)
விண்ணப்ப கட்டணம்:
- அனைத்து விண்ணப்பத்தாரர்களுக்கும் ரூ.250/- விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.
- NCC Special Entry மூலம் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை:
- ஆன்லைன் (Online) முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
- விண்ணப்பதாரர்கள் Written Exam மற்றும் Interview வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
அறிவிப்பினை பெற
- விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் விண்ணப்பிக்க - Click Here