Videos

TNPSC Notes அறநூல்கள் - திரிகடுகம்

TNPSC Notes அறநூல்கள் - திரிகடுகம்

TNPSC Notes அறநூல்கள் - திரிகடுகம் TNPSC Group 1, Group 2, Group 4  Thirukkural Notes. TNPSC Pothu Tamil Important Notes. TNPSC Kalvi Imayam Online Study. TNPSC Free Study Materials.

TNPSC Pothu Tamil Notes 


திரிகடுகம் 

ஆசிரியர்             :நல்லாதனார்
ஊர்                          :திருத்து - (திருநெல்வேலி மாவட்டம்)
பாடல்கள்               :100 வெண்பா
சிறப்புப்பெயர்      : செரு அடுதோள் நல்லாதன்
சமயம்                      :வைணவர்

·        சுக்கு,மிளகு, திப்பிலியால் ஆன மருந்துக்கு திரிகடுகம் எனப்பெயர்.

·        அது போன்று திரிகடுகம் பாடல்களிலுள்ள மூன்று அறக்கருத்துகள் கற்போரின் மனத்திலுள்ள அறியாமையாகிய இருளைப் போக்கி குன்றின் மேலிட்ட விளக்காக திகழ்கிறது

·        திரி என்ற சொல்லுக்கு திரித்தல், விளக்குத்திரி, மூன்று போன்ற பொருள் பல உண்டு

·        சுக்கு,மிளகு, திப்பிலி இவை மூன்றும் உடல் நோயைப் போக்கும்

·        செரு அடுதோள் நல்லாதன் என பாயிரம் குறிப்பிடுவதால் இவர் போர்            வீரராக இருந்திருக்கலாம்   என கருதப்படுகிறது.

·        ஒவ்வொரு பாடலிலும் இம்மூன்றும் (அ) இம்மூவர் என்ற வார்த்தை இடம் பெறுகிறது.

·        "அம்மை" என்னும் வனப்பு வகையைச் சார்ந்தது.


💢 "உண்பொழுது நீராடி உண்டலும் என்பெறினும்

பால்பற்றிச் சொல்லா விடுதலும் – தோல்வற்றிச்

சாயினும் சான்றாண்மை குன்றாமை இம்மூன்றும்

தூஉயம் என்பார் தொழில்.

💢 இல்லார்க்கொன் றீயும் உடைமையும் இவ்வுலகில்

நில்லாமை யுள்ளும் நெறிப்பாடும் - எவ்வுயிர்க்கும்

துன்புறுவ செய்யாத தூய்மையும் இம்மூன்றும்

நன்றறியும் மாந்தர்க் குள.

💢 முறைசெய்யான் பெற்ற தலைமையும் நெஞ்சில்

நிறையிலான் கொண்ட தவமும் - நிறைஒழுக்கம்

தேற்றாதான் பெற்ற வனப்பும் இவைமூன்றும்

தூற்றின்கண் தூவிய வித்து"

-நல்லாதனார்

 

சொற்பொருள் :

·        நெறி - வழி

·        தூறு - புதர்

·        வித்து- விதை

·        சாயினும் - அழியினும்

·        வனப்பு - அழகு

·        ஈயும்- அளிக்கும்

·        உண்பொழுது -உண்ணும் பொழுது

·         தூ உயம் - தூய்மை உடையோர்

·        மாந்தர்-மக்கள்

·        நிறை ஒழுக்கம் - மேலான ஒழுக்கம்

·        தேற்றாதான்-கடைபிடிக்காதவன்

·        பால்பற்றி - ஒரு பக்கச் சார்பு (நடுநிலைமையிலிருந்து மாறுதல்) 

மேற்கோள்: 

v  "நெஞ்சம் அடங்குதல் வீடாகும்"

v  “வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான்

v  "தாளாளன் என்பான் கடன்பட வாழாதான்"

v  "நிறை நெஞ்சம் உடையானை நல்குரவு அஞ்சும்

v  "கொண்டான் குறிப்பறிவாள் பெண்டாட்டி

v  "பிறர்தன்னைப் பேணுங்கால் நாணலும் பேணார் திறன்வேறு கூறிற் பொறையும் - அறவினையைக் காராண்மை போல வொழுகலும் இம்மூன்றும் ஊராண்மை என்னும் செருக்கு

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.