TNPSC Group 4 Results Published 2023
TNPSC - குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியீடு..!
TNPSC Group 4 Result Direct Download Link
TNPSC Group 4 Results Published 2023 |
19 லட்சம் பேர் எழுதிய டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. 10,117 பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வை 18.36 லட்சம் பேர் எழுதினர். tnpscexams.in என்ற இணையத்தளத்தில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
தமிழக அரசின் பல்வேறு துறைகள், வாரியங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர், பில் கலெக்டர் ஆகிய பதவிகளில் 10,117 காலி இடங்களை நிரப்புவதற்காக கடந்த 24.7.2022 அன்று ஒருங்கிணைந்த குருப்-4 தேர்வு நடத்தப்பட்டது.
டிஎன்பிஎஸ்சி நடத்திய இத்தேர்வை தமிழகம் முழுவதும் 18லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.
- கிராம நிர்வாக அலுவலர் - 425
- இளநிலை உதவியாளர் மற்றும் பில் கலெக்டர் - 4,952
- தட்டச்சர் - 3,311
- சுருக்கெழுத்து தட்டச்சர் (கிரேடு-3) - 1,176
மேலும் சில பொதுத்துறை நிறுவனங்களில் தட்டச்சர், இளநிலைஉதவியாளர் உள்ளிட்ட பதவிகளிலும் புதிய காலிப்பணியிடங்கள் வரப்பெற்றுள்ளன. மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 10,117.