TNPSC Group 4 - சான்றிதழ் பதிவேற்ற அறிவிப்பு
'குரூப் - 4' தேர்வு முடிவுகள், மார்ச் 24ல் வெளியாகின. தேர்ச்சி பெற்றவர்களில் ஒரு பதவிக்கு, 2.5 பேர் என்ற விகிதத்தில், சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டு உள்ளனர்.
இதற்கான பட்டியலை, அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது. இதில், 25 ஆயிரம் பேர் இடம் பெற்றுள்ளனர்.
பட்டியலில் பதிவெண் உள்ளவர்கள், தங்களின் அசல் சான்றிதழ்களை, 'ஸ்கேன்' செய்து, 'இ - சேவை' மையம் வழியாக, டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில், வரும் 13ம் தேதி முதல் மே 5ம் தேதிக்குள் பதிவேற்ற வேண்டும்.