TET - ஆசிரியர் தகுதி தேர்வுக்கான மதிப்பெண் சான்று வெளியீடு
ஆசிரியர் தேர்வு வாரிய பொறுப்பு தலைவர் நந்தகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வுக்கான, இரண்டாம் தாளுக்கு, கணினி வழித் தேர்வுகள், பிப்.,3 முதல், 15 வரை இரண்டு வேளைகளில் நடந்தது. தேர்வில், 2.54 லட்சம் பேர் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள், மார்ச், 28ல் வெளியானது. இந்த தேர்வில், 15 ஆயிரத்து, 430 பேர் தகுதி மதிப்பெண் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், தேர்ச்சி பெற்றவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ், தேர்வு வாரியத்தின், https://trb.tn.nic.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இன்று முதல் மூன்று மாதங்கள் வரை, சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.