Zoho வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. ஐடி நிறுவனத்தில் பணியாற்ற சூப்பர் சான்ஸ்.. ரெடியா?
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான ஜோஹோவில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அந்த பணி குறித்த முக்கிய விபரங்கள் வருமாறு:
பிரபல ஐடி நிறுவனமான ஜோஹோவில் இருந்து அடுத்தடுத்து புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகிறது.
அந்த வகையில் இப்போது ஜோஹோவில் செக்யூரிட்டி இன்ஜினியர் (Security Engineer) பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிக்கு டிகிரி முடித்து குறைந்தபட்சம் செக்யூரிட்டி இன்ஜினியர் பிரிவில் ஓராண்டு முதல் 3 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
அதோடு விண்ணப்பம் செய்வோருக்கு எண்ட்பாயிண்ட் செக்யூரிட்டி, லாக் அனலிசிஸ், கோரிலேஷன் ரூல்ஸ், SIEM ஹேண்ட்லிங், நெட்வொர்க் புரோட்டோகால்ஸ், ஃபயர்வால்ஸ், விபிஎன், ஐடிஎஸ்/ஐபிஎஸ் உள்ளிட்டவை பற்றிய புரிதல் இருக்க வேண்டும். அதேபோல் செக்யூரிட்டி டூல்ஸ்களான SIEM பிளாட்பார்ம், ஃபயர்வால் மேனேஜ்மென்ட் மற்றும் எண்ட்பாயிண்ட் செக்யூரிட்டி சொல்யூஷன்ஸ் உள்ளிட்டவற்றில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
மேலும் விண்டோஸ், லினக்ஸ், மாக் உள்ளிட்ட ஆபரேட்டிங் சிஸ்டம்ஸ், பைத்தான், செல்ஸ்கிரிப்ட், பவர்செல் உள்ளிட்ட ஸ்கிரிப்டிங் லேங்குவேஷ், குளோவ்ட் செக்யூரிட்டி பிளாட்பார்ம்ஸ்களான ஏடபிள்யூஎஸ், அசூர் உள்ளிட்டவற்றில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். MITRE ATT & CK , YARA ரூல்ஸ் தெரிந்திருக்க வேண்டும்.
சாப்ஃட் ஸ்கில்ஸ் என்று எடுத்து கொண்டால் அனலிட்டிக்கல் ஸ்கில்ஸ், பிரச்சனைகளை தீர்க்கும் திறன், ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்த விபரம் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்பட உள்ளது. அதுபற்றி இண்டர்வியூவின்போது தெரிவிக்கப்படலாம்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. எனவே எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம் என்பதால் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.
அதேபோல் பணி நியமனம் செய்யும் இடங்கள் பற்றியும் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றியும் கடைசி கட்ட இண்டர்வியூவில் தான் தெரிவிக்கப்படும். தமிழகத்தை எடுத்து கொண்டால் சென்னை, மதுரை, திருநெல்வேலி,தென்காசி மாவட்டம் மத்தளம்பாறை உள்ளிட்ட இடங்களில் ஜோஹோ நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அதேபோல் வெளிமாநிலங்களிலும் ஜோஹோ நிறுவனம் இயங்கி வருகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
- பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here