RRB Recruitment: ரயில்வேயில் 9,970 உதவி லோகோ பைலட் காலிப்பணியிடங்கள்... விண்ணப்பம் குறித்த முழு விபரம்...
RRB Recruitment:
முந்தைய ஆண்டுகளில் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே எஸ்எஸ்சி தேர்வு நடைபெற்று வந்தது. தற்போது, எஸ்எஸ்சி தேர்வு அனைத்து பிராந்திய மொழிகளிலும் தேர்வுகளை எழுத முடியும்.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், ரயில்வே பணிகள் மற்றும் வங்கி பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்கள் அதிகளவு முக்கியத்தும் கொடுப்பதில்லை என்று கூறப்படுகிறது.
இந்தியாவில் ஆண்டுதோறும் 50,000க்கும் அதிகமான பணியிடங்களுக்கு மத்திய அரசுப் பணி தேர்வாணையம் தேர்வு நடத்தி வருகிறது. நல்ல ஊதியத்துடன், அதிகாரம் மிக்க பணியிடங்களாக இது கருதப்படுகிறது. தற்போது, இரயில்வே வாரியமும் கூட 9,970 உதவி லோகோ பைலட் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இது குறித்த மேலும் தகவல்களை தென்காசி மாவட்டம் சுரண்டை சாந்தி IAS அகாடமி ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் கூறுகையில், “SSC என்று சொல்லக்கூடிய மத்திய பணியாளர்கள் தேர்வு வாரியம் நடத்தும் தேர்விற்கான அறிவிப்பு தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
SSC (MTS), SSC (JD) என பல தேர்வுகள் தொடர்ந்து நடைபெற உள்ளது. மாநில அரசு தேர்வுகளை ஒப்பிடுகையில், மத்திய அரசு தேர்விற்கு அதிக அளவில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்று மாதத்திற்கு ஒருமுறை தேர்வுக்கான அறிவிப்பு வந்து கொண்டிருக்கிறது.
இதற்கு முந்தைய ஆண்டுகளில் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே எஸ்எஸ்சி தேர்வு நடைபெற்று வந்தது. தற்போது, எஸ்எஸ்சி தேர்வு அனைத்து பிராந்திய மொழிகளிலும் தேர்வுகளை எழுத முடியும். எனவே தமிழ்நாட்டு மாணவர்கள் இதனை அதிகம் கவனம் செலுத்தலாம்.
இரயில்வே பணி:
இந்திய ரெயில்வே துறைக்கு ஆட்களை தேர்வு செய்யும் ரெயில்வே தேர்வாணையம் மூலம் 9,970 உதவி லோகோ பைலட் ஆட்தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கல்வி தகுதி:
ஐ.டி.ஐ., டிப்ளமோ, பி.இ., பி.டெக். என சம்பந்தப்பட்ட துறை சார்ந்த படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: 1-7-2025 அன்றைய தேதிப்படி 18 முதல் 33 வயதுக்குட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 5 ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு.
தேர்விற்கான பாடத்திட்டங்கள்:
கணக்கு, பொது அறிவு, ஆங்கில மொழித்தேர்வு, ரீசனிங் போன்ற நான்கிலிருந்து 20 கேள்விகள் விதம் கேட்கப்படும். 80 மதிப்பெண்ணுக்கு தேர்வு நடைபெறும். இரண்டாம் கட்ட தேர்வில் பாடவாரியான கேள்விகள் கேட்கப்படும்.
தேர்வு செய்யும் முறை:
கணினி அடிப்படையிலான தேர்வு, ஆவண சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை:
https://www.rrbchennai.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள்: 11-5-2025 வரை ஆன்லைன் வழியாக மட்டும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.