7th Tamil Seiyul கடவுள்எங்கள் தமிழ்
TNPSC - TNTET | Online Study
7th Tamil Seiyul எங்கள் தமிழ் TNPSC - TNTET | Online Study. 7ம் வகுப்பு செய்யுள் tnpsc pothu tamil tamil 100, 7th 3 Term Books Download PDF pothu tamil tips,group 4 pothu tamil,thirukkural in tamil,gk in tamil,tnpsc group 4 pothu tamil பொதுதமிழ், TN SAMACHEER KALVI FULL GUIDE. tamil gk questions,திருக்குறள் பற்றிய வினா விடைகள் part 2,thirukkural important questions in tamil. 7TH STATNDARD ALL IMPORTANT STUDY MATERIALS.
எங்கள் தமிழ்
- ஆசிரியர் பாரதிதாசன். இயற்பெயர் சுப்புரத்தினம். காலம் 1891-1964
- பாரதியார் மீது கொண்ட பற்றின் காரணமாக பாரதிதாசன் என மாற்றிக்கொண்டார்.
- பெற்றோர் கனகசபை - இலக்குமி அம்மாள். தமிழ், பிரெஞ்சு, ஆங்கிலம் போன்ற மொழிகளில் புலமை மிக்கவர்.
- நூல்கள்: குடும்பவிளக்கு, பாண்டியன் பரிசு, சேரதாண்டவம், இருண்ட வீடு, தமிழச்சியின் கத்தி, பிசிராந்தையார், குறிஞ்சித்திட்டு, அழகின் சிரிப்பு, தமிழியக்கம்.
- பாரதிதாசன் கவிதைத் தொகுதியில் எங்கள் தமிழ் என்னும் தலைப்பில் இடம் பெற்றுள்ளது.
எங்கள் தமிழ்
இனிமைத் தமிழ்மொழி எமது - எமக்கு
இன்பந் தரும்படி வாய்த்தநல் அமுது !
கனியைப் பிழிந்திட்ட சாறு - எங்கள்
கதியில் உயர்ந்திட யாம்பெற்ற பேறு!
தனிமைச் சுவையுள்ள சொல்லை - எங்கள்
தமிழினும் வேறெங்கும் யாங்கண்ட தில்லை !
நனியுண்டு நனியுண்டு காதல் - தமிழ்
நாட்டினர் யாவர்க்கு மேதமிழ் மீதில் (இனிமைத்)
தமிழ்எங்கள் உயிர்என்ப தாலே - வெல்லுந்
தமிழ்எங்கள் உயிர்என்ப தாலே - வெல்லுந்
தரமுண்டு தமிழருக் கிப்புவி மேலே
தமிழ்என்னில் எம்முயிர்ப் பொருளாம் - இன்பத்
தமிழ்குன்று மேல்தமிழ் நாடெங்கும் இருளாம்
தமிழுண்டு தமிழ்மக்க ளுண்டு - இன்பத்
தமிழுக்கு நாளும்செய் வோம்நல்ல தொண்டு
தமிழ் என்று தோள்தட்டி ஆடு - நல்ல
தமிழ்வெல்க வெல்க என்றே தினம் பாடு!
-பாரதிதாசன்